வழியை விட்டு விலகினார்கள்
தங்கள் பிதாக்கள்
கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து நடந்த வழியை விட்டு விலகினார்கள்.
(நியா 2:17)
நியாயாதிபதிகள் இரண்டாம் அதிகாரத்தில் 10, முதல் 17 வசனங்களில் இஸ்ரவேல் மக்களின் ஆவி கூறிய வழ்ச்சி எப்படி ஏற்பட்டது என்று காண்கிறோம்.
1) நியாயாதிபதிகளின் காலத்தில் இந்த இஸ்ரவேலரின் புதிய தலைமுறையினர், தங்கள் பிதாக்களுடைய வழிகளை விட்டு விலகி தேவனோடுள்ள
உடன்படிக்கை, உறவையும் கை விட்டுவிட்டார்கள்.
(நியா 2:10;ல் அவர்கள் தீமைகளைச் செய்யத் திரும்பினார்கள்.
(நியா 2:11-13)ல் தங்கள் பிதாக்களுக்குக் கொடுக்கப்பட்ட கற்பனைகளையும் கட்டளைகளையும் கேள்வி கேட்கத் தொடங்கினார்கள்.
(நியா 2:17).
2) தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவில்லை.(நியா 2:17)
அவர்கள் தங்கள் விருப்பம் போல், மனம் போனபடி வாழ்ந்தார்கள். (நியா 17:6; 21:25;).
3) இஸ்ரவேலர் கானானியரின் தீயப்பழக்க வழக்கங்களிலிருந்து தங்களை முற்றிலுமாக விடுவிக்கவில்லை. (நியா 2:11-13; 1:28) ஆனால் அதற்கு பதிலாக அவர்கள் உலக, பொருளாதார லாபங்களையும், கானானியரின் ஒழுக்கக்கேடான செயல்களால் ஏற்படும் இன்பங்களையும் பெற்றுக்கொள்ள விரும்பினர்.(நியா 2:12,13; 1:27,28,30,33,;) அவர்கள் கானானியரோடு திருமண உறவு ஏற்படுத்திக் கொண்டார்கள். (நியா 3:5,6)
பாகாலையும், அஸ்தரோத்தையும் வழிபடத் தொடங்கினார்கள்.(நியா 2:13) இவ்வாறு இஸ்ரவேலர், கானானியர் இருவருடைய கலாச்சாரங்களும் வாழ்க்கை முறையும் இரண்டறக் கலந்தன.
4) வீழ்ச்சிக்குப் பின் மனிதனுடைய இயற்கை சுபாவம் கீழ்த்தரமாகி கீழ்நோக்கி சென்று கொண்டிருந்தது என்பதை இந்த வரலாறு நிரூபிக்கிறது. தனி மனிதனும், விசுவாசிகளின் கூட்டமும் மனந்திரும்பி, ஜெபித்து, மறுபடியும் தங்களைத் தேவனுக்கு அர்ப்பணித்து ஆவிக்குரிய எழுப்புதலும், புதுப்பித்தலும் அடிக்கடி பெறாவிட்டால் அவர்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கை வீழ்ச்சியடையும் என்று இதிலிருந்து அறிகிறோம்.(2நாளா 7:14; ஏசா 57:15;மத் 5:6;யூதா 20).
இன்று சபை வீழ்ச்சியடைவதற்கான காரணம் என்ன என்பதை நாம் நன்கு அறிய இந்த வரலாற்று சுவடுகள் நமக்கு போதுமானவைகளாக இருக்கும் என்று நம்புகிறேன்.
ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கை சரியாக இருக்கிறதா ?
கர்த்தர் நம்முடைய வாழ்க்கையில் இன்னும் தம்முடைய கிருபையை அதிகமாக விளங்கப்பண்ணுவாராக ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்: சிலுவை ராஜா.
Comments