இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாறு

இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாறு.(மத் 1:1)


மத்திய நற்செய்தி புத்தகம் இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாறுடன் தொடங்குகிறது. 

இது அவருடைய தகப்பன் 

(யோசேப்பின்) வம்ச வழியைக் காட்டுகிறது.

யூதர்களில் தந்தை வழி வம்சத்தைப் பார்ப்பதே பாரம்பரியமான வழக்கம்.

(மத் 1:16). யோசேப்பு இயேசு கிறிஸ்துவின் உண்மையான உடல் வழி தந்தையாக இல்லாவிட்டாலும் (மத் 1:20)

உலக அமைப்பின்படி சட்டரீதியான தகப்பன் அவரே. 

மேசியா ஆபிரகாமின் சந்ததியிலும் 

(ஆதி 12:3;22:18;கலா 3:16)

தாவீதின் சந்ததியிலும் 

(2சாமு 7:12-19;எரே 23:5) தோன்றுவார் என்று தேவன் கூறியிருந்தார்.

மத்தேயு இந்த இரண்டு முற்பிதாக்களையும் இந்த வம்ச வரலாற்றுப் பட்டியலில் இணைத்து காட்டி, இயேசுவே மேசியா என்பதற்கு இது ஆதாரம் என்று நிரூபித்து காட்டியுள்ளார்.


1) கிறிஸ்து (மத் 1:1)

'கிறிஸ்து' என்ற வார்த்தையின் (கிரேக்க மொழியில் ΧΡΙΣΤΌΣ = Christos. 'கிறிஸ்டோஸ்') பொருள் "அபிஷேகம் செய்யப்பட்டவர்"என்பதாகும். 

இது'மேசியா என்னும் எபிரேயச் சொல்லுக்குச் சமமானது.(தானி 9:25,26).


2) ஆரம்பத்திலிருந்தே மத்தேயு,'இயேசு கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்டவர்'என்றும், பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பண்ண பட்டவர் என்றும், (ஏசா 61:1; லூக் 4:18;

யோவா 3:34;அப் 10:38) உறுதியாகக் கூறுகிறான்.


3) அறிவையும், சத்தியத்தையும் மக்களுக்கு கொண்டுவர தீர்க்கதரிசியாகவும் 

(உபா 18:15), பாவம்நிவாரண பலியைக் கொடுத்துப் பாவங்களைப் போக்குவதற்கு ஆசாரியராகவும் 

(சங் 110:4;எபி 10:10-14),

நீதியின் இராஜ்ஜியத்தை நிலைப்படுத்தி, அதை ஆண்டு வழிநடத்த இராஜாவாகவும்

அபிஷேகம் பண்ணப் பட்டார்.

(சகரி 9:9).


4) தாவீதின் குமாரன். 

யோசேப்பின் வம்ச வரலாற்றை வரிசையாக விவரித்து, அவன் தாவீதின் குடும்பத்தினன் என்பதைக் காண்பித்து, இயேசு தாவீதின் வம்சத்தில் பிறந்தவர் என்பதை மத்தேயு நிலைநாட்டுகிறார். இயேசு பரிசுத்த ஆவியினால் கன்னி மரியாளிடத்தில் உருவாகியிருந்தாலும், அவர் யோசேப்பின் மகன் என்று உலக வழக்கப்படி பதிவு செய்யப்பட்டு சட்டரீதியாக தாவீதின் குமாரனாகவும் ஆனார். 


5) லூக்காவிலுள்ள வம்ச வரலாறு (லூக 3:23) இயேசுவின் வம்ச வரலாற்றை, மரியாளின் வம்ச வழியிலுள்ள ஆண் மக்களின் வம்சங்களைக் குறிப்பிடுவதன் மூலம் கூறுகிறது. (மரியாளும் தாவீதின் வம்சத்தைச் சேர்ந்தவளே). இயேசு மரியாளின் மாம்சமும், இரத்தமாயிருக்கிறார்.(குமாரன்), எனவே, அவர் நம்மில் ஒருவரைப் போன்றவர் (ரோம 1:5) என்று லூக்கா வலியுறுத்துகிறான். எவ்விதமாக நற்செய்தி எழுத்தாளர்கள் இயேசுவுக்கு சட்டரீதியாகவும், உடற்கூறு சாஸ்திரத்தின் மூலமும் மேசியா என்ற உரிமை உண்டு என்று உறுதிப்படக் கூறுகிறார்கள்.


6) மரியாள்.... இயேசு (மத் 1:16)

இயேசுவின் வம்ச வரலாற்றில் அவருடைய கன்னிகை மூலம் பிறப்பும், பாதுகாக்கப்பட்டுள்ளது. 

'பெற்றான்'என்று தகப்பனைக் குறிப்பிடுவது யோசேப்பு வரை ஒவ்வொருவருக்கும் கூறப்பட்டுள்ளது என்பதையும், பின்பு அது மாறிவிட்டது என்பதையும் கவனிக்கவும். யோசேப்பு இயேசுவுக்குத் தகப்பன் என்று கூறப்படவில்லை. ஆனால், யோசேப்பு கன்னிமரியாளின் புருஷனாயிருந்தான், மரியாளிடத்தில் இயேசு பிறந்தார் என்று கூறப்பட்டுள்ளது. (மத் 1:23)


7) இயேசு. (மத் 1:21)

இயேசு என்பது 'கர்த்தர் இரட்சிக்கிறார்' (யோசு 1:1) என்று அர்த்தம் கொள்ளும் (யெஷுவா) என்ற எபிரேய வார்த்தையின் கிரேக்க மொழி வடிவமாகும். இது மரியாளின் குமாரனுடைய எதிர்கால பணி என்ன என்பதைக் காட்டுகிறது. நற்செய்தியின் முதல் வாக்குத்தத்தமாகவும் இது அமைகிறது. இயேசு ஒரு இரட்சகராகத்  "தம்முடைய மக்களைப் பாவங்களிலிருந்து இரட்சிப்பார்."மனித இனத்தின் மாபெரும் எதிரி பாவமே . அது ஒருவனுடைய ஆத்துமாவையும், வாழ்க்கையுமே அழித்து விடுகிறது. பாவ நிவர்த்திக்கான இயேசுவின் மரணமும், பரிசுத்த ஆவியின் பரிசுத்தமாக்கும் வல்லமையும், இயேசு வண்டைவரும் எவரையும், பாவத்தின் குற்ற உணர்ச்சியிலிருந்தும், அடிமைத்தனத்திலிருந்தும் விடுதலையாக்கிவிடும்.

(யோவா 8:31-36;அப் 26:18;ரோம 6; 8:1-16).


தொடர்ந்து வாசித்து பயனடையுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். ஆமென் 

கிறிஸ்துவின் பணியில் 

சகோதரன் 

சிலுவை ராஜா 



Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை