தேவனுடைய கரம்
நெகேமியா.
தேவனுடைய தயவுள்ள கரம் என் மேல் இருந்தது.
(நெகே 2:8)
கர்த்தருடைய கரம் நெகேமியாவின் மேலிருந்தது என்பதால், குறைந்தது ஐந்து காரியங்கள் நடந்தன.
1) தேவனுடைய நோக்கத்தில் அவன் பங்கெடுத்துக் கொண்டான் (அதிகாரம் 1)
2) தேவன் அவனை விரைந்து செயல்படும்படி நடத்தினார்.
(நெகே 2:12)
3) தேவன் அவனுக்கு தமது இரக்கத்தையும் உதவவியையும் அருளினார்.
(நெகே 2:18;எபி 4:16)
4) தேவன் தாமே அவனோடுடிருந்து வளம் பெறவும், தேவனுடைய வேலை கைக்கூடி வரப் பண்ணவும் செய்தார்.
(நெகே 2:20; லூக்கா 24:50)
5) தேவனுக்குள் அவனுடைய தைரியமும், விசுவாசமும் புதுப்பிக்கப்பட்டதாக அவன் உணர்ந்தான்.
(நெகே 4:14,20).
*ஒருவருக்கும் அறிவிக்கவில்லை*
(நெகே 2:12)
நெகேமியா பெர்சிய பேரரசின் ஆதரவு பெற்ற முழு அதிகாரத்துடன் ஆளுநராக வந்திருந்தும், மூன்று நாள் வரை அவன் எதுவும் செய்யவுமில்லை.
தேவன் அருளிய திட்டங்களைப் பற்றி ஒருவரிடமும் சொல்லவுமில்லை. அவன் தேவனுக்காக காத்திருந்தாள் என்றும், சுய பலத்தில் எதையும் அவசரமாக செய்வதற்கு முற்படவவுமில்லை என்றும் நாம் உறுதியாக நம்பலாம்.
(எசா 40:29-31) பிறகு அவன், சமாரியர்களால் சேதம் உண்டாக்கப்பட்ட சுவர்களை மிகவும் எச்சரிக்கையுடனும்,கவனத்துடனும் முழு அளவில் பார்த்து அளவீடு செய்தான். (எஸ்றா 4:23-24) அதே சமயத்தில் அதற்காக கூடிய திட்டவட்டமாக செலவையும் கணக்கிட்டான். (லூக்கா 14:28-30) மிகவும் முக்கியமானது என்னவெனில், மக்களுடைய பிரச்சினைகள் மற்றும் துன்பங்களுக்காகக் குறை சொல்வதற்கு மாறாக, இந்த பிரச்சனைகளை அவர்களுடைய சொந்த நோக்கிலேயே அணுக அவன் விரும்பினான்; எவ்விதமாக அவர்கள் காண்கிற, உணருகிற படி அந்த சூழ்நிலையை அவன் புரிந்து கொள்ளும் வரையில் அவன் எதையும் சொல்லவில்லை.
*பரியாசம் பண்ணி எங்களை நிந்தித்தனர்.*(நெகே 2:19)
தேவனை அறியாதவர்கள் மத்தியில், தேவனுடைய உண்மையான பிள்ளைகளில் அநேகர், தங்கள் அனுதின ஜீவியத்தில் இரவும் பகலும் நீதியான வாழ்க்கை நடத்த உண்மையுடன் முயற்சிக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் அடிக்கடி நிந்தைக்கும், அசட்டை பண்ணப்படுதலுக்கும் உள்ளாகிறார்கள். இந்த உலகமானது கிறிஸ்தவர்களின் நல்ல ஒழுக்க நெறிகளை அடிக்கடி அசட்டை பண்ணுவதுடன், கிறிஸ்துவின் மேலுள்ள அவர்களுடைய பற்றுதலையும் பரியாசம் பண்ணுகிறது. நம்முடைய நம்பிக்கையும், பதிலும் நெகேமியாவைப் போலவே பரலோகத்தின் தேவன் நமக்கு உதவி செய்து, முடிவில் நீதிமான்களுக்கு நியாயத்தை நிலை நாட்டுவார் என்பதாக இருக்க வேண்டும். (நெகே 2:20; வெளி 2:7; 21:7)
கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா
Comments