மனந்திரும்புங்கள்.
மனந்திரும்புங்கள்.(மத 3:2)
மனந்திரும்புதல் என்பதன் அடிப்படை பொருள்
'முற்றிலும் திரும்புதல் என்பதாகும்.(கிரேக்க மொழியில் 'மெற்றானோயேவோ')'இது தீமையிலிருந்து விலகி, கிறிஸ்துவினிடம் திரும்பி இதன் மூலம் தேவனிடம் திரும்புவதாகும்.
(யோவா 14:1,6; அப் 8:22; 26:18;
1பேது 2:25).
1) பாவத்தை விட்டு விட்டு, கிறிஸ்துவில் உள்ள இரட்சிப்புக்குத் திரும்பும் ஒருவருடைய தீர்மானம், கிறிஸ்துவைப் பாவத்தின் தண்டனையிலிருந்து மீட்கும் இரட்சகராக மட்டுமல்ல, அவரை தன் வாழ்க்கையில் ஆண்டவராகவும் அவர் ஏற்றுக் கொள்வதாகும். இவ்வாறு மனந்திரும்புதல் என்பது, சாத்தானின் ஆளுகையிலிருந்து விடுதலைப் பெற்று (எபே 2:2) கிறிஸ்துவின் ஆளுகையையும், அவருடைய வார்த்தையையும் ஏற்றுக் கொள்வதாகும். (அப் 26:18).
2) மனந்திரும்புதல் என்பது, பாவிகள் தன்னிச்சையாகச் செய்யும் ஒரு தீர்மானம்.
அவர்கள் நற்செய்தியை விசுவாசித்து, ஏற்றுக்கொள்ளும் போது தேவனுடைய கிருபையினால் அவர்கள் அவ்வாறு தீர்மானிப்பது அவர்களுக்கு சாத்தியமாகிறது. (அப் 11:21)
ஆகையால் தான் மறுபடியும் அழுத்தம் திருத்தமாக திருச்சபைகளுக்கு சொல்லுகிறோம். அது உயிருள்ள சபையாக இருந்தால் கிறிஸ்துவை பற்றிய நற்செய்தி உலகம் முழுவதும் அறிவிக்கப்பட வேண்டும். அதை ஒருவன் கேட்டு விசுவாசித்து, ஏற்றுக்கொள்ளும் போது தேவனுடைய கிருபையினால் இரட்சிப்பை பெற்றுக் கொள்ளுகிறான்.
கள்ள ஊழியர்கள் தேசத்திற்காக ஜெபித்தால் போதும் எழுப்புதல் எழுப்புதல் என்று கத்துகிறான்.
விதைக்காமல் எப்படி அறுக்க முடியும்.
சுவிசேஷத்தை அறிவிக்காமல் எப்படி எழுப்புதல் வரும். என்ற அறிவு கூட இல்லாமல் ஜெப மாநாடுகள் நடந்து கொண்டிருக்கிறது.
ஜெபம் எதற்காக என்றால் பரிசுத்தவான்களுக்காகவும், சபையிலுள்ள மக்களுக்காகவும், திருவசனம் செல்லும் வாசல்கள் திறக்கவும், சுவிசேஷத்தின் வேலைக்காக தேவன் ஊழியர்களை எழுப்பும்படியாகவும், எருசலேமின் சமாதானத்துக்காகவும், வேண்டிக் கொள்ளுங்கள் என்றுதான் பைபிள் சொல்லுகிறது.
ஆனால் என் தேவஜனங்களை தவறாக வழி நடத்தும் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் ஐயோ.
(மத் 28:19,20;ரோம 10:14-17;
ரோம 8:26,27, மத் 9:37,38;
கொலோ4:4;சங் 122:6)
சுவிசேஷம் அறிவிப்பதன் மூலமாக அநேகருடைய இரத்தப் பழிகளுக்கு நாம் விலகி இருக்கிறோம்.
3) கிறிஸ்துவை இரட்சகர் என்று வெறுமனே நம்புகிறது மாத்திரம் 'இரட்சிக்கும் விசுவாசம்' என்பதற்கான விதி அல்ல. அது கிறிஸ்து எதிர்பார்க்கும் மனம் திரும்புதலுக்குப் போதுமானதல்ல. பாவத்தை விட்டு அடியோடு விலகத் தேவையில்லை என்ற முறையில் விசுவாசம் பற்றிக் கூறுவது, பரிசுத்த வேதாகமத்தில் கூறப்பட்ட மீட்பை ஆபத்தான விதமாகத் திரித்துக் கூறுவதாகும்.
மனந்திரும்புதலோடு கூடிய விசுவாசம் எப்போதும் இரட்சிப்புக்கு தேவையான நிபந்தனையாகும்.
(மாற் 1:15; லூக் 13:3,5;அப் 2:38;
3:19; 11:21).
4) பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகளின் அடிப்படைச் செய்தி
'மனந்திரும்புதல்' ஆகும்.
(ஏரே 7:3;எசே 18:30;யோவே2:12-14;மல் 3:7)
யோவான் ஸ்நானகன்
(மத் 3:2) இயேசு கிறிஸ்து
(மத் 4:17; 18:3;லூக் 5:32)
புதிய ஏற்பாடு கிறிஸ்தவர்கள்
(அப் 2:38;8:22;11:18;2பேது 3:9) ஆகியோரும் மனந்திரும்புதல்
பற்றிய உபதேசத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தனர். மனந்திரும்புதல் குறித்த உபதேசம் எப்போதும் நற்செய்திப் போதனையோடு சேர்ந்தே கொடுக்கப்பட வேண்டும். (லூக் 24:47)
சபையில் கூட்டத்தைச் சேர்ப்பதற்காக நவீன யுக்திகளை கையாளாமல், தந்திரங்களை பயன்படுத்தாமல் சுவிசேஷத்தை கண்டிப்புடன் அறிவிக்க வேண்டும்.
சபையில் பிரித்தெடுக்கப்பட்டவர்கள் தேவனை ஆராதிக்க வேண்டும்.
கண்டிப்புடன் பேசும்போது தான் எந்த ஒரு ஊழியனும் பரிசுத்தமாக இருக்க முடியும்.
ஊழியர்கள் பலர் பாலியலில் விழுந்து விட்டார்கள். பண ஆசை, பொருளாசை, புகழாசை, விழுந்துவிட்டார்கள். சபையில் அநேகர் பல மனைவி பல கணவர்கள், எல்லாரிடத்திலும் கடன் படுதல், சபைக்குள் கட்டப்பஞ்சாயத்து, சீட்டு போடுதல், ஜாதி பிரிவினைகள், இப்படி பல காணப்படுவதற்கு காரணம் கண்டிப்பான பிரசங்கங்கள் இல்லை. எங்கே கண்டித்தால் இன்னொரு சபைக்கு போய்விடுவார்கள் என்ற பயம், போனால் போகட்டும்.
தேவன் பரிசுத்தர்.
என்பதை உணர்ந்து ஊழியம் செய்வோம் கர்த்தர் பெரிய காரியங்களை செய்வார். ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா
Comments