ஒலிவமலை

 ஒலிவ மலையில் சீஷர்களுடன் சம்பாஷனை.

(மத்24:3-25:46);


கடைசி காலத்தில் உம்முடைய வருகைக்கு அடையாளம் என்ன ?

என்று சீஷர்கள் இயேசுவிடம் கேட்ட கேள்விக்குப் பதில் தான் அவர் கூறிய இந்தக் தீர்க்கதரிசனம்.

இயேசு கூறிய அடையாளங்கள்: 


1) கடைசிக் காலம் நெருங்கும்போது தோன்றும் பொதுவான முன் அடையாளங்களைக் கூறினார்.(மத் 24:4-14)


2) கடைசிக் காலத்துக்குரிய சிறப்பான அடையாளங்கள்

"மகா உபத்திரவ காலம்'

(மத் 24:15-28)


3) வல்லமையோடும், மகிமையோடும் கெம்பீரமாக அவர் திரும்பி வரும்போது தோன்றும் வெளிப்படையான கண்கொள்ளாக் காட்சிகள். 

(மத் 24:29-31)


4) உபத்திர கால கிறிஸ்தவர்களுக்கு, மகா உபத்திரவ காலத்துக்குப் பின் உடனடியாக வரப்போகும் கிறிஸ்துவின் எதிர்பார்ககப்படும் வருகை குறித்த எச்சரிக்கையும், அவர்கள் விழிப்புடன் இருக்கும் படி அறிவுரையும் 

(மத் 24:32-35)


5) உபத்திரவ காலத்துக்கு முன் வாழ்ந்து கொண்டிருக்கும் விசுவாசிகள், எதிர்பாராத நேரத்தில், யாரும் அறியாத வேளையில் தம்முடைய பிள்ளைகளுக்காக வரப்போகும் கிறிஸ்துவின் வருகைக்காக ஆவிக்குறிய நிலையில் ஆயத்தமாக இருக்க வேண்டும் என்னும் எச்சரிக்கை. 

(மத் 24:36-51; 25:1-30;யோவா 14:3;)


6) கிறிஸ்து பூமிக்கு திரும்பி வந்தபின் நடைபெறப்போகும் உலக தேசங்களின் நியாயத்தீர்ப்பு குறித்த விளக்கம். 

(மத் 25:31-46)


மத்தேயு 24 ஆம் அதிகாரத்தில் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை குறித்து பல உண்மைகள் வெளிப்படுத்தப்படவில்லை என்பதை கவனிக்கவும். மேலும் எவருமே கடைசி கால நிகழ்ச்சிகள் குறித்த தீர்க்கதரிசனங்களை ஆராய்ச்சி செய்து, நிச்சயமாக ஒரு முழு விளக்கத்தை கண்டடையவில்லை. இயேசு கிறிஸ்துவின் ஒலிவமலை உரையாடலில் தாழ்மையுடன், இருதயத்தை இயேசுவின் மேலேயே பதித்து ,அறிந்து கொள்ளக்கூடிய இரகசியங்கள் உள்ளன. கடைசி காலம் பற்றிய கூடுதல் விபரங்களை கடைசிக் காலத்தில் தான் நாம் கண்டு அறிந்து புரிந்து கொள்ள முடியும்.

(தானி 12:9).

ஆகையால் அநேகர் எனக்கு கர்த்தர் வெளிப்படுத்தினார் என்று சொன்னால் அதை நம்ப வேண்டாம். 

எதையும் வேத வசனத்தின் படி ஆராய்ந்து புரிந்து கொள்ளுங்கள். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் நிலைத்திருப்பீர்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென். 

தொடர்ச்சி நாளை தினத்தில் வாசிக்கலாம். 

கிறிஸ்துவின் பணியில் சகோதரன் 

சிலுவை ராஜா 


Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை