யூதர்களின் மதப் பிரிவுகள்

 யூதர்களின் மதப்பிரிவுகள்.


பரிசேயர்கள்.


பரிசேயர்களின் தோற்றம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு-ஹசிடிம் காலம்


1. மோசேயின் சட்டங்கள் அடங்கிய ஐந்தாகமங்களையும் (தோரா) ஆவியினால் தூண்டுதல் பெற்று எழுதப்பட்ட, அதிகார பூர்வமான எல்லா நூல்களையும், வாய்வழிப் பாரம்பரியமாக வந்த எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டார்கள்.


2 சுயசித்தம், தீர்மானம் பற்றிய விஷயங்களில் மனிதனுடைய சித்தமா, அல்லது தேவனுடைய மேலான அதிகாரமா, ஏதாவது ஒன்று மாத்திரம் என்ற நிலையில் மத்தியஸ்த நிலையுடையவர்களாதலால், எதையும் முடிவு செய்ய முடியாத நிலையில் இருந்தனர்.


3. தேவதூதர்களும், பிசாசுகளும் ஆதிக்கம் செலுத்திய ஆட்சி முறையை அவர்கள் ஏற்றுக் கொண்டனர்.


4. மரித்தவர்களுக்கு ஒரு எதிர்காலம் உண்டு என்று போதித்தார்கள்.


5. ஆத்துமாவின் அழிவின்மையை நம்பினார்கள். மரணத்துக்குப் பின் தண்டனை அல்லது ஆசீர்வாதம் பெறும் நிலை உண்டு என்று விசுவாசித்தார்கள்.


6. மனித இனத்தின் சமத்துவத்தைப் போற்றிப் பாதுகாத்தார்கள்.


7. அவர்களுடைய போதனையில் வலியுறுத்தப்படுவது இறையியல் அல்ல, அறநெறி ஒழுக்கம் மட்டுமே.


சதுசேயர்கள்.


சதுசேயர்களின் தோற்றம் கி.மு. 166-63 வரை உள்ள ஹஸ்மோனியர்களின் காலம். கி.பி. 70 இல் எருசலேம் நகரத்தின் வீழ்ச்சியுடன் இவர்களும் மறைந்தனர்.


1 அவர்கள் வாய்வழிப் பாரம்பரியச் சட்டங்கள் கட்டுப்படுத்தாதவை. அதிகார பூர்வமற்றவை என்று கூறினர்.


2. அவர்கள் மோசேயின் சட்டங்களை சொல்பொருளின்படி புரிந்து கொண்டார்கள், பரிசேயர்கள் அப்படி அல்ல.


3. அவர்கள் லேவியர்கள் பரிசுத்தத்தைக் காப்பதை மிகவும் வலியுறுத்தினர்.


4. அவர்கள் எல்லாவற்றையும் தங்கள் சுயசித்தத்தின்படி செய்ய முற்பட்டனர்.


5. அவர்கள் இறந்தவர்கள் உயிர்த்தெழுவதில்லை என்றும், மனிதர்களுக்கு எதிர்கால வாழ்க்கை இல்லை என்றும் சாதித்தனர்.


6. தேவதூதர்களிலும், பிசாசு, சாத்தான் இவர்களிலும் சதுசேயர்களுக்கு நம்பிக்கை இல்லை.


7. ஆவிக்குரிய உலகம்' என்பதில் சதுசேயர்களுக்கு நம்பிக்கை இல்லை.


8. மோசேயின் சட்டநூல்கள் மட்டுமே புனித வேத நூல்கள் என்று அவர்கள் கூறினர்.


கிறிஸ்துவின் பணியில் 

சகோதரன் சிலுவை ராஜா.


Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை