இரண்டு திருமணம் ?

 கிறிஸ்தவர்கள் இரண்டு மனைவிகளை திருமணம் செய்யலாமா ?.

(உபா 21:15)


ஒன்றுக்கு அதிகமான மனைவிகளைக் கொண்டிருத்தல் அவர்களுக்குள் உறவுகளைக் கெடுக்கும். புருஷன் ஒரு மனைவியை அதிகமாக நேசிப்பான். மற்றவர்களை வெறுப்பான். ஒருவருக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்துக் காரியங்களை செய்வான். பல பெண்களைத் திருமணம் செய்தவனின் வாழ்வில் இதுவே நடக்கும்.

(ஆதி 29:30)

கோத்திர பிதாக்களின் காலத்தில் பலதாரத் திருமணம் நடைபெற்றது. ஆனால், பல மனைவிகளை ஒரு மனிதன் வைத்திருப்பதை தேவன் அங்கீகரிக்கவில்லை. ஏற்கனவே, இருக்கும் ஒரு பழக்கத்தை ஒழுங்குபடுத்த அவர் சில அறிவுரைகளைக் கொடுத்தார்.

(ஆதி 2:24,4:19,29:28)


ஆதியில் தேவன் திருமணத்தை நியமித்தார். 

முதலாவது முக்கியமான குடும்பம் என்னும் தனி அமைப்பில் பூமியை உருவாக்கினார். 

(ஆதி 1:28)

தேவனுடைய திருமண திட்டம் ஒரு ஆணும், ஒரு பெண்ணும் இணைந்து 'ஒரே மாம்சமாயிருத்தல்'(சரீர அளவிலும் ஆவிக்குரிய நிலையிலும் இருவரும் இணைந்து ஒன்றாயிருத்தல்)

இந்த அறிவுரை கீழ்க்கண்டவற்றை தள்ளி விடுகிறது. 


அவைகள்; விபசாரம், பலதார மணம், ஆண் புணர்ச்சி, ஓரினச்சேர்க்கைகள், லெஸ்பியன்கள், ஒழுக்க கேடான வாழ்க்கை, பரிசுத்த வேதாகமத்திற்கு ஒவ்வாத விவாகரத்து. (மாற் 10:7-9;மத் 19:9)


*இரண்டு பெண்களைத் திருமணம் செய்தான்*

(ஆதி 4:19)


தேவனால் நியமிக்கப்பட்ட கட்டளையாகிய ஒருவனுக்கு ஒரு மனைவி தான் இருக்க வேண்டும் என்பதை முதன் முதலில் மீறியவன் லாமேக்கு. 

(ஆதி 2:21-24)

ஒவ்வொரு வீட்டிலும், குடும்பத்திலும், பாரம்பரிய அக்கிரமங்கள் படிப்படியாகப் பெருகி வெளிவந்தன.


*லாபான் தன் குமாரத்தியாகிய ராகேலையும் அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான்.*(ஆதி 29:28).


திருமணம் என்பது ஒரே ஒரு ஆணுக்கும் ஒரே ஒரு பெண்ணுக்கும் நடைபெற வேண்டியது என்று சிருஷ்டிப்பில் தேவன் நியமித்த கட்டளைக்கு மாறாக யாக்கோபு இரண்டு மனைவிகளை பெற்றுக் கொண்டது முரணானது. 

(ஆதி 2:24 குறிப்பு மேலே வாசிக்கவும், யாத் 20:17; உபா 5:21) பின்னர் மோசேயின் சட்டப்படி, தேவன் திட்டவட்டமாக யாக்கோபின், திருமணத்தைப் போல. 

திருமணங்களுக்கு தடை விதித்தார். 

(லேவி 18:18)

புதிய ஏற்பாட்டில் ஒரு புருஷன், ஒரு மனைவி என்னும் ஏற்பாடு மட்டுமே திருமண உறவில் அங்கீகரிக்கப்பட்டது என்று வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 

(மத்19:4-6;மாற் 10:4-9).

பழைய ஏற்பாட்டில் மக்கள் தேவனுடைய கட்டளையைச் சரியாகப் புரிந்து கொள்ளாதாலும், அவர்களுக்கு இருதயக் கடினம் உள்ளவர்களாயிருந்தபடியாலும், பல மனைவிகளை மணந்து கொள்வதை தேவன் சகித்து இருக்கலாம். கீழ்க்கண்ட வசனங்களில் பல மனைவிகளைத் திருமணம் செய்வதால் வரும் தீய விளைவுகள் விவரிக்கப்பட்டுள்ளன.

(ஆதி 29:30;30:1;35:22;1இரா 11:1-12)


இதை வாசிக்கின்ற தேவனுடைய பிள்ளைகளே கர்த்தர் நமக்கு கொடுத்த மனைவிக்காக அல்லது புருஷனுக்காக கர்த்தரை ஸ்தோத்தரித்து அவரை மகிமைப்படுத்தி அவருடைய நல்லவர் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழுங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென். 

திருமண உறவில் உண்மையற்ற தன்மையை நாளை நாம் தெரிந்து கொள்வோம் தொடர்ந்து இந்த குறுஞ்செய்தியை வாசியுங்கள் மற்றவர்களுக்கு பார்வர்ட் பண்ணுங்கள். 

கிறிஸ்துவின் பணியில் 

சகோடரன் 

சிலுவை ராஜா 

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை