பஸ்கா பண்டிகை.

 பஸ்கா பண்டிகை.


கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 1300 வருடங்களுக்கு முன்பாக இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தனர். அவர்களுடைய கூக்குரல் தேவனுடைய சமூகத்தை எட்டியதால், ஜனங்களை விடுவிக்கும்படி கேட்க மோசேயையும் அவருடைய அண்ணன் ஆரோனையும் பார்வோனிடம் அனுப்பினார். அந்தக் கர்வம் பிடித்த பார்வோன் அவர்களை விடுதலை செய்ய மறுக்கவே, தேவன் எகிப்து தேசத்தை அடுத்தடுத்து பல வாதைகளால் வாதித்தார். இறுதியாக, பத்தாம் வாதையைக் கொண்டு வந்தபோது எகிப்தின் முதற்பேறனைத்தும் செத்துமடிந்தன. அதற்குப் பிறகே அவர்களை விடுதலை செய்தான். பழைய ஏறப்பாட்டு பஸ்காவை யாத்திராகமம் 12


கி.மு. 1513-ஆம் ஆண்டு, ஆபிப் என்றழைக்கப்பட்ட எபிரெய மாதத்தின் (பிற்பாடு நிசான் என்றழைக்கப்பட்டது. நிசான் மாதம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வருகின்றது) 14-ஆம் தேதி பஸ்கா பலிக்கு, 10-ஆம் தேதியிலிருந்தே அவர்கள் தயாராக வேண்டும். அதாவது பஸ்கா பலியிடுவதற்கு தேவையான ஆட்டுக்குட்டி, நான்கு நாட்களுக்கு முன்பாக தெரிந்து கொள்ளப்பட்டிருக்க வேண்டும். (யாத் 12:3) பலியாகப்போகும் இந்த ஆடானது அவர்களுடைய வீடுகளில் நான்கு நாட்கள் கட்டி வைக்கப்பட்டிருக்கும். இந்த நான்கு நாட்களில் அந்த வீட்டில் உள்ளவர்கள் பலிஆட்டுடன் பழகினாலும் அவர்களால் நான்காம் நாள் அந்த ஆடு பலியிடப்படும். 


கர்த்தருக்கு ஒருநாள் ஆயிரம்வருஷம் போலவும் இருக்கிறது( II பேதுரு 3:8-ல் வாசிகின்றோம்.)மேலும் மோசேவின் ஜெபத்தில், தேவனுடைய பார்வைக்கு ஆயிரம் வருஷம் நேற்றுக்கழிந்த நாள்போலவும் இராச்சாமம்போலவும் இருக்கிறது (சங்கீதம் 90:4) என்று கூறுகின்றார். கர்த்தருக்கு ஒருநாள் ஆயிரம்வருஷம் போல இருந்தால், நிசான் மாதம் 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரையான நான்கு நாட்கள், நாலாயிரம் வருஷத்தை குறிகின்றது. ஆதாம் முதல் இயேசுவின் பிறப்பு வரையிலான நாலாயிரம் வருடங்களை அது குறிகின்றது.


இஸ்ரயேலர்களுக்கு ஒருநாள் என்பது, ஒரு சூரிய மறைவில் துவங்கி அடுத்த நாள் சூரிய மறைவில் முடியும். நிசான் 14-ஆம் தேதியன்று, இஸ்ரவேல் வீட்டுத் தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒரு செம்மறியாட்டுக்கடாவை (அல்லது வெள்ளாட்டுக்கடா) அடித்து, அதன் இரத்தத்தில் கொஞ்சத்தை வீட்டுவாசலின் நிலைக்கால்களிலும் நிலையின் மேற்சட்டத்திலும் தெளித்தார்கள். (யாத். 12:3-7, 22, 23) நெருப்பினால் சுடப்பட்ட ஆட்டுக்குட்டியின் மாம்சத்தை, கசப்பான கீரையோடும் புளிப்பில்லாத அப்பத்தோடும் சாப்பிட்டார்கள். அந்த ராத்திரியிலே, கடவுளுடைய தூதர் எகிப்தியரின் தலைப்பிள்ளைகளைக் கொன்றுபோட்டார்; கீழ்ப்படிந்த இஸ்ரவேலர்களோ, அந்த வாதையிலிருந்து தப்பி அங்கிருந்து புறப்பட்டார்கள் (யாத். 12:8-13, 29-32). இது, வருடாந்தர பண்டிகையாக அதாவது பஸ்கா பண்டிகையாக யூதர்கள் இதை ஒவ்வொரு வருடமும் கொண்டாடி வருகின்றார்கள். பஸ்கா பண்டிகையானது எதை குறிக்கின்றது என்றால் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் மட்டுமே நாம் மீட்கப்பட முடியும். அதாவது நாம் அழிவிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.


கி.பி. 33-ல், பஸ்கா ஆட்டுக்குட்டி அடிக்கப்பட்ட அதே நாளில் *நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து பலியிடப்பட்டார்.* (1 கொ5:7; 11:23; மத். 26:2). பஸ்காவின்போது அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியின் எலும்பை இஸ்ரவேலர்கள் முறிக்கக்கூடாது. (யாத். 12:46; எண். 9:11, 12) அப்படியென்றால், உலகத்தின் பாவத்தைப் போக்குவதற்கு *கடவுளால் அனுப்பப்பட்ட ஆட்டுக்குட்டியை* பற்றி என்ன சொல்லலாம்? (யோவா. 1:29) இரு குற்றவாளிகளுக்கு இடையே இயேசு அறையப்பட்டார். சிலுவையில் ஏற்றப்பட்டவர்கள் சீக்கிரத்தில் இறந்து விடுவதற்காக அவர்களுடைய கால்களை முறித்துவிடுமாறு பிலாத்துவிடம் யூதர்கள் கேட்டுக்கொண்டார்கள். ஏனென்றால், அடுத்த நாளாகிய நிசான் 15, பெரிய ஓய்வு நாளாக இருந்தது. ஓய்வுநாளன்று சடலங்களைக் சிலுவை மரத்தில் அப்படியே விட்டுவிடக்கூடாது. அதனால், படைவீரர்கள் இரு குற்றவாளிகளின் கால்களையும் முறித்தார்கள்; இயேசுவிடம் வந்தபோதோ, அவர் ஏற்கெனவே இறந்திருந்ததைக் கண்டு அவரது கால்களை முறிக்காமல் விட்டுவிட்டார்கள்.

 (யோவா. 19:31-34) 

பஸ்கா ஆட்டுக்குட்டியின் எலும்புகள் முறிக்கப்படாதது, கி.பி. 33, நிசான் 14 அன்று நடக்கவிருந்த சம்பவத்துக்கு "நிழலாய்"இருந்தது. 

(எபி. 10:1) அதுமட்டுமல்லாமல், இவையெல்லாம், 

(சங்கீதம் 34:20-லுள்ள) வார்த்தைகளுக்கு இசைவாகவே நடந்தன. தீர்க்கதரிசனங்களின் மீதான நம்முடைய நம்பிக்கையை இது பலப்படுத்துகிறது. சிலுவையில் நமக்காய் ஜீவன் தந்த இயேசு, சாவை வென்று சொன்னபடியே மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார். இஸ்ரயேல் மக்கள் ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால் அழிவிலிருந்து பாதுகாக்கப்பட்டார்களே அதேபோல நீங்களும் நானும் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் வரப்போகின்ற அழிவிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளோம்.


தேவன் தம்முடைய மக்களைக் காப்பாற்ற வல்லவர் என்ற விஷியத்தை மட்டுமல்ல, அவர் விடுவிப்பவர் என்ற விஷியத்தையும் பஸ்கா பண்டிகை நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணி, விடுவித்தார். அதற்காக அவர் என்னவெல்லாம் செய்தார் என்பதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். மேகஸ்தம்பத்தாலும் அக்கினிஸ்தம்பத்தாலும் அவர்களை வழிநடத்தினார். சமுத்திரத்தின் தண்ணீர் வலதுபுறமாகவும் இடதுபுறமாகவும் மதிலாக நிற்க, அதன் நடுவே வெட்டாந்தரையில் அவர்கள் நடந்துபோனார்கள். பத்திரமாக அக்கரையை அடைந்தபின், தண்ணீர் திரும்பிவந்து பார்வோனுடைய ராணுவம் அனைத்தையும் மூடிக்கொண்டதை அவர்கள் கண்டார்கள். ஒரு ஆட்டுக் குட்டியின் இரத்தம், பேரழிவிலிருந்து இஸ்ரயேல் மக்களை காப்பாற்றினது போல, இயேசு கிறிஸ்துவின் இரத்தம் வரப் போகின்ற உலகப் பேரழிவிலிருந்து நம்மை காப்பாற்ற போதுமானாதாக உள்ளது. ஒருவேளை உங்களுடைய பாவம் இயேசுவின் இரத்தத்தால் கழுவப்படாத நிலையில் இருகின்றீகளா?. வேதாகமம் சொல்கின்றது, *குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார் ( I யோவான்1:7-9) என்று.


ஆகவே உடனடியாக, *இயேசுவே நீர் என்னுடைய பாவங்களுக்காகவும் சிலுவையில் இரத்தம் சிந்தினீர் என்பதை நம்புகின்றேன். உம்முடைய இரத்தத்தால் என்னுடையை பாவங்களை அகற்றிவிடும். உமக்காய் பரிசுத்தம்மாய் வாழ என்னை அர்பணிக்கின்றேன்* என்று சொல்லி உங்களுக்காக இயேசு வைத்திருக்கும் பாவ மன்னிப்பை பெற்றுக் கொள்ளுங்கள்.


கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்

கிறிஸ்துவின் பணியில் சகோதரன் 

சிலுவை ராஜா

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை