இயேசு கிறிஸ்துவை பிடித்தார்கள்.

இயேசு கிறிஸ்துவை பிடித்தார்கள்.

(மத் 26:57)


இயேசு கிறிஸ்துவை கைது செய்தது முதல் சிலுவையில் அறைந்தது வரை உள்ள நிகழ்ச்சிகளைக் கோர்வையாக பார்த்தால் பயன் தரும். 

அந்த நிகழ்ச்சிகள் இங்கு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. 

நமது பிரயோஜனத்திற்காக. 


1) இயேசு கிறிஸ்து கைது செய்யப்படுதல். 

(மத் 26:47-56;மாற்14:43-52;லூக் 22:47-53;யோவா 18:2-12).


2) மத சம்பந்தமாக அன்னாவின் முன் விசாரணை.

(யோவா 18:12-14;19-24. காய்பாவின் முன் விசாரணை 

மத் 26:57;59-68;மாற் 14:53,55-65;லூக் 22:54,63-65;யோவா 18:24)


3) சீமோன் பேதுரு இயேசு கிறிஸ்துவை மறுதலித்தல். 

(மத் 26:58,69-75;

மாற் 14:54,66-72;

லூக் 22:54-62;

யோவா 18:15-18;25-27)


4) சனகெரீம் சங்கத்தாரின் கண்டனம்.

(மத்27:1;மாற் 15:1;

லூக் 22:66-71)


5) யூதா ஸ்காரியோத் (யூதாசின் ) மரணம்.

(மத் 27:3-10)

மத்தேயு கூறும்போது 'யூதாஸ் தன்னைத் தானே சாகடிக்கும்படி நான்று கொண்டு செத்தான் என்று குறிப்பிடுகிறான். அப்போ 1:18 இல் 'யூதாஸ் தலைக் கீழாக விழுந்து செத்தான்'என்று உள்ளது. (தூக்கில் தொங்கியிருக்க வாய்ப்பில்லை)

யூதாஸ் செய்திருக்கக் கூடியது நாட்டப்பட்ட, கூர்மையாக்கப்பட்ட கோலின் மீது விழுந்து செத்தான் என்பதே, அந்நாட்களில் 'நான்று கொண்டு சாகுதல்' என்பது சிலுவையில் அறைவது மூலமாகவோ, கூர்மையான ஈட்டி போன்ற ஆயுதத்தால் குத்தி கொலை செய்வதோ ஆகும்.


6) பிலாத்துவின் முன் போது விசாரணை. 

(மத் 27:2;11-14;மாற் 15:2-5;லூக் 23:1-5;யோவா 18:28-38)


7) ஏரோதின் முன் விசாரணை.

(லூக் 23:6-12) ஏரோது இயேசு கிறிஸ்துவை திரும்பவும் பிலாத்து விடம் அனுப்புதல். 

(மத் 27:11-26;மாற் 15:6-15;லூக் 23:11-25;யோவா 18:28 முதல் 19:1,4-6 வரை)


8) இயேசு கிறிஸ்துவைப் பரியாசம் பண்ணுதல்.

(மத் 27:27-30;மாற் 15:16-19;யோவா 19:2,3) அதன் பின்பு இயேசு கிறிஸ்து அடிக்கப்பட்டு, சிலுவையில் அறையப்படும் படி அழைத்துச் செல்லப்பட்டார். (மத் 27:31)


9) கொல்கொதாவுக்கு ஊர்வலம்.

(மத் 27:32-34;மாற் 15:20-23;லூக் 23:26-33)


10) இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறையப்படுதல். 

(மத் 27:35). இயேசு கிறிஸ்துவின் பாடுகளின் பூரணமான நிலை (ஏழாம் நிலை)

சிலுவையில் அவரை படுக்க வைத்து வலது கை மற்றும் இடது கைகளில் கூர்மையான ஆணிகள் அடிக்கப்பட்டு. பின்பு கால்களிலும் ஆணிகள் அடிக்கப்பட்டு. சிலுவை தூக்கி நிறுத்தப்பட்டு. பல மணி நேரம் வேதனையை அனுபவித்து, கல்வாரி சிலுவையில் தம்முடைய கடைசி சொட்டு இரத்தத்தையும் சிந்தி மரித்தார். 

உனக்காக...

எனக்காக....

நம் கரடு முரடான வாழ்க்கை செதுக்கப்பட...

செதுக்கப்பட்ட மரத்திலே இயேசு கிறிஸ்து உன்னுடைய பாவத்தை ஏற்றுக் கொண்டு மரித்தார்.

இந்த இயேசுவை ஏற்றுக் கொள்ளுங்கள். இவர் வழியாக வரும் மீட்பை பெற்றுக் கொள்ளுங்கள். 

இவர் தரும் நித்திய வாழ்வையும் பெற்றுக் கொள்ளுங்கள்.

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென். 


Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை