நெகேமியா ஜெபம்

 

நெகேமியா. (1:1)

நெகேமியா யூதாவின் ஆளுநராக கி.மு. 444-ல் பெர்சியாவை விட்டு எருசலேமுக்குப் போனான். எஸ்றா அங்கேபோன பதின்மூன்று வருடங்களுக்குப் பிறகு இது நிகழ்ந்தது. எருசலேமின் சுவரைத் திரும்ப எடுப்பிக்கவும், நகரத்தைப் பலப்படுத்தவும், பெர்சிய ராஜாவிட மிருந்து பெற்ற கட்டளையோடு நெகேமியா வந்தான் (2:7-8). அதிகமான எதிர்ப்புக்கும் மத்தியில் 52 நாட்களில் நெகேமியா சுவரைக் கட்டி முடித் தான் (6:15). அவன் திறமைசாலியும், துணிச்சலானவனும், விடாமுயற்சி யுள்ளவனும் மற்றும் ஜெபிக்கும் மனிதனாகவுமிருந்தான். (2:4) மேலும் மக்களுக்கு ஆவிக்குரிய புத்துணர்ச்சியைக் கொண்டு
வருவதற்கு எஸ்றாவுடன் ஒத்துழைத்தான்.
(அதி 8).

துக்கித்து உபவாசித்து மன்றாடினான். (1:4)
நெகேமியா தன்
மக்களுக்காகவும், யூதாவின் தேவனுடைய வேலைக்காகவும் ஆழ்ந்த பாரமடைந்திருந்தான். எருசலேமிலும், யூதாவிலுமுள்ள தேவமக்களுக்கு நேரிட்ட பெரும் துன்பம் தொல்லைக்காக, நான்கு மாதங்கள்
(வச 1 உடன் 2:1ம்) அதிக கண்ணீரோடு தன் இருதயத்தைத் தேவனிடத்தில் ஊற்றி உபவாசித்து மன்றாடினான்.
(அப் 20:31) அவனுடைய ஜெபமானது, பாவ அறிக்கை (வச 6-7)
தேவனிடம் அவருடைய வார்த்தையை ஞாபகப்படுத்துதல் (வச 8; லேவி 26:40-45; உபா 30:1-6) தேவனுடைய மகிமை, மற்றும் அவருடைய நோக்கங்களைப் பற்றிய கரிசனை
(வச 5-8), மற்றும்
இஸ்ரவேல் ஜனங்களுக்காகத் தொடர்ந்து பரிந்து பேசுதல் (வச 6) ஆகியவற்றை உள்ளடக்கியதாயிருந்தது.

இந்த மனிதனுக்கு முன்பாக இரக்கம். (1:11)
"இந்த மனிதன்"
பெர்சியாவின் அரசனாகிய அர்தசஷ்டாவாகும். (2:1) யூதர்களினிமித்தம் இந்த அரசனின் முன்பாக இரக்கம் கிடைக்கச் செய்யும்படி நெகேமியா தேவனை நோக்கிப் பிரார்த்தித்தான். மற்ற மக்களிடத்திலிருந்து எதையாகிலும் பெற்றுக்கொள்ள விரும்பும்போது, நம்முடைய கவலைகளை முதலாவது தேவனுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் தமது சித்தத்தைச் செய்யும்படியாக செல்வாக்கு மிகுந்த தலைவர்களின் இருதயங்களை அவர் அசைக்க முடியும் (எஸ்தர் 4:16; நீதி 21.1).

அப்பொழுது நான் ஜெபம் பண்ணினேன். (2:4)
நெகேமியாவின் முதல் ஆவல் எப்பொழுதும் ஜெபிக்க வேண்டும் என்பதே. அரசன் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுமுன் நெகேமியா தேவனிடம் அவருடைய உதவிக் காகவும், ஞானத்துக்காகவும் ஜெபித்தான். இப்படிப் பல தடவைகள் ஜெபித்ததுண்டு. கீழ்க்கண்ட பகுதிகளில் அந்த ஜெபங்களைக் காணலாம்.
(4:4-5,9; 5:19; 6:9,14; 13:14,22,29,31).

1)இந்நிகழ்ச்சியின்போது, நெகேமியா அரசனின் முன்பு நின்றுகொண்டு, இருதயத்திலிருந்து தேவனை நோக்கிக் கதறி ! அழுதான். நெருக்கடியான நேரங்களில் நீண்ட ஜெபங்களுக்கு நமக்கு நேரம் கிடைப்பதில்லை. நெகேமியாவின் சுருக்கமான ஜெபம் தேவனைத் தொட்டது. ஏனெனில் அதற்கு முன்கூட்டியே அவன் நான்கு மாத ஜெபம் மற்றும் உபவாசம் பண்ணியிருந்தான். இது “ஜெபிக்கும் அடிப்படை"யில் நிகழ்ந்தது.

2) நாள் முழுவதும் அடிக்கடி ஜெபிக்கும் பழக்கமானது, நமது வாழ்வில் பெரிதான தேவனுடைய கிருபையும், ஒத்தாசையும், ஞானமும் வழிந்தோட வழிவகுக்கும். தேவன் பேரில் நாம் சார்ந்திருக்கிறதையும் அவருடைய சமுகம் நம்மோடு நாள் முழுவதும் இருக்க வேண்டுவதின் அவசியத்தையும் மறப்பதென்பது, நமது வாழ்வில் பரித்தாவியானவருடைய கிரியையை மட்டுப்படுத்திவிடும். (எபே 6:18; 1 தெச 5:17)

தேவனுடைய தயவுள்ள கரம் என்மேல் இருந்தது. (2:8)
கர்த்தருடைய கரம் அவன் மேலிருந்தது என்பதால், அவனில் குறைந்தது ஐந்து காரியங்கள் நடந்தன.

1) தேவனுடைய நோக்கத்தில் அவன் பங்கெடுத்துக் கொண்டான். (அதி 1)

2) தேவன் அவனை விரைந்து செயல்படும்படி நடத்தினார். (வச 12)

3) தேவன் அவனுக்கு தமது இரக்கத்தையும் உதவியையும் அருளினார்.
(வச 18; எபி 4:16)

4) தேவன் தாமே அவனோடிருந்து வளம் பெறவும், தேவனுடைய வேலை கைக்கூடிவரப் பண்ணவும் செய்தார். (வச 20; லூக் 24:50)

5) தேவனுக்குள் அவனுடைய தைரிய மும், விசுவாசமும் புதுப்பிக்கப்பட்டதாக அவன் உணர்ந்தான். (4:14,20).

ஒருவருக்கும் அறிவிக்கவில்லை. (2:12)
நெகேமியா பெர்சிய பேரரசின் ஆதரவு பெற்று முழு அதிகாரத்துடன் ஆளுநராக வந்திருந்தும், மூன்று நாள் வரை அவன் எதுவும் செய்யவுமில்லை. தேவன் அருளிய திட்டங்களைப் பற்றி ஒருவரிடமும் சொல்லவுமில்லை. அவன் தேவனுக்காக காத்திருந்தான் என்றும், தன் சுய பெலத்தில் எதையும் அவசரமாகச் செய்வதற்கு முற்படவுமில்லை என்றும் நாம் உறுதியாக நம்பலாம். (ஏசா 40:29-31) பிறகு அவன், சமாரியர்களால் சேதம் உண்டாக்கப்பட்ட சுவர்களை மிகவும் எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் முழு அளவில் பார்த்து அளவீடு செய்தான். (எஸ்றா 4:23-24). அதே சமயத்தில் அதற்கு ஆகக் கூடிய திட்ட வட்டமான செலவையும் கணக்கிட்டான்.
(லூக் 14:28-30)
மிகவும் முக்கிய
மானதென்னவெனில், மக்களுடைய பிரச்சினைகள் மற்றும் துன்பங்களுக் காகக் குறைசொல்வதற்கு மாறாக, இந்த பிரச்சினைகளை அவர்களுடைய சொந்த நோக்கிலேயே அணுக அவன் விரும்பினான்; இவ்விதமாக
அவர்கள் காண்கிற, உணருகிறபடி அந்த சூழ்நிலையை அவர்கள் புரிந்துகொள்ளும்
வரையில் அவன் எதையும் சொல்லவில்லை.

(2:19) பரியாசம் பண்ணி எங்களை நிந்தித்தனர். தேவனை
அறியாதவர்கள் மத்தியில், தேவனுடைய உண்மையான பிள்ளைகளில் அநேகர், தங்கள் அனுதின ஜீவியத்தில் இரவும் பகலும் நீதியான வாழ்க்கை நடத்த உண்மையுடன் முயற்சிக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் அடிக்கடி நிந்தைக்கும், அசட்டைப் பண்ணப்படுதலுக்கும் உள்ளாகிறார்கள். இந்த உலகமானது கிறிஸ்தவர்களின் நல்ல ஒழுக்கநெறிகளை அடிக்கடி அசட்டை பண்ணுவதுடன், கிறிஸ்துவின் மேலுள்ள அவர்களுடைய பற்றுதலையும் பரியாசம் பண்ணுகிறது. நம்முடைய நம்பிக்கையும், பதிலும் நெகேமியாவைப் போலவே பரலோகத்தின் தேவன் நமக்கு உதவி செய்து, முடிவில் நீதிமான்களுக்கு நியாயத்தை (நிலைநாட்டுவார் என்பதாக இருக்க வேண்டும்.
(வச 20; வெளி 2:7; 21:7).

(2:20) எங்களுக்குக் காரியத்தைக் கைகூடிவரப் பண்ணுவார்.
தேவனுடைய ராஜ்யம் சம்மந்தப்பட்ட எல்லா காரியங்களிலும், வெற்றி தேவனாலேயே தொடங்குகிறது. நெகேமியா நகரத்தின் சுவரைத் திரும்பவும் கட்ட ஆரம்பித்தான். ஏனெனில் அது தேவனுடைய சித்தம் என்பதை அவன் அறிந்திருந்தான். ஆகையால் அப்படிச் செய்வதில் தேவன் அவனுக்கு
வெற்றியைத் தருவார் என்று முழு நம்பிக்கையோடிருந்தான். தேவனுடைய வேலைகள் அனைத்திலும் அவருடைய மக்கள் உடன் வேலையாட்களாக இருக்க வேண்டுமென்று கர்த்தர் விரும்புகிறார். (பிலி 2:12,13). நான்காம் அதிகாரம் நம்மைப் பொறுத்தவரையில் நாம் மேற்கொள்ள வேண்டிய வெற்றிக்கு ஆதாரமான, மூன்று அம்சங்களைக் குறிப்பிடுகின்றது.

1) ஜனங்கள் வேலை செய்வதற்குத் தங்கள் முழு இருதயத்தோடும் ஆவலோடிருந் தார்கள். (4:6)

2) ஜனங்கள் வேலை செய்தபோது ஜெபத்தோடும், விழிப்
போடும் இருந்தார்கள் (4:9).

3)எதிரிகளிடத்திலிருந்து எதிர்ப்பு வந்த போது, தைரியத்தோடும், தீர்மானத்தோடும் மற்றும் விசுவாசத்தோடும் எதிர்கொண்டார்கள் (4:14). எருசலேமின் சுவர் 52 நாட்களில் முடிக்கப்பட்ட பொழுது யூதரின் விரோதிகள்கூட, அந்த வேலை தேவனுடைய உதவியினாலே முடிக்கப்பட்டது என்பதை ஒப்புக் கொண்டார்கள். (6:15-16).
அவருடைய ஜனங்கள் விசுவாசத்தைக் காத்துக் கொள்வதில் தங்கள் பங்கினை செய்யும்போது தேவனும் தமது பங்கினை எப்பொழுதும் செய்து முடிப்பார். ஆமென்.

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென்
கிறிஸ்துவின் பணியில் சகோதரன் சிலுவை ராஜா.
9841711591.

Comments

Popular posts from this blog

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

ஈரான் (ஏலாம்) இஸ்ரேல் யுத்தம்.

பிரபல ஊழியர்களை தேடி....