'அவர் பெருகவும், நான் சிறுகவும்,' "போய்" என்னை உயர்த்துங்க!

"அவர் பெருகவும், நான் சிறுகவும் வேண்டும்" 
(யோவான் 3:30) என்பது விவிலியம் காட்டும் உண்மையான ஊழியத்தின் அடிப்படை இலக்கணமாகும். ஆன்மீக ஊழியம் என்பது மனிதர்களை வழிநடத்தி, அவர்களைக் கடவுளின் மகிமைக்கு நேராகத் திருப்புவதே ஆகும். ஊழியக்காரர்கள் தங்களைக் களிமண்ணாகவும், இறைவனை குயவனாகவும் கருதிச் செயல்பட வேண்டிய தார்மீகப் பொறுப்பைக் கொண்டவர்கள்.
ஆனால், இன்றைய நவீன ஆன்மீகச் சூழலில், இந்தத் தூய்மையான நோக்கம் பல இடங்களில் தடம் மாறிப் போயுள்ளதை நாம் காண்கிறோம். "என்னை உயர்த்தி வையுங்கள்" என்றும், "கர்த்தர் என்னை ஆசீர்வதித்து உயர்வான இடத்தில் வைத்துள்ளார்" என்றும் தங்களைத் தாங்களே மேடைகளிலும், சமூக ஊடகங்களிலும் விளம்பரப்படுத்திக் கொள்ளும் போக்கு ஊழியர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. கடவுளுக்குச் சேர வேண்டிய துதியையும், கனத்தையும், மகிமையையும் மனிதர்கள் தங்களுக்குரியதாக மாற்ற முயலும் போது, ஊழியத்தின் உண்மையான தாத்பர்யம் அங்கே சிதைந்து விடுகிறது. இந்த முன்னுரை, சுய விளம்பரத்தை நாடும் இன்றைய ஊழியர்களின் நிலைப்பாட்டையும், விவிலியம் காட்டும் உண்மையான தாழ்மையின் அவசியத்தையும் ஒப்பிட்டு ஆராய்வதற்கான ஒரு தொடக்கவுரையாக அமைகிறது.

🌟 அப்பொஸ்தலனாகிய பவுலின் அனுபவம்
புதிய ஏற்பாட்டில் பவுலை விடப் பெரிய ஊழியத்தைச் செய்தவர்கள் எவருமில்லை. ஆனால், அவர் தன்னை ஒருபோதும் உயர்த்திக் கொள்ளவில்லை. தன்னைத் தாழ்த்துவதிலும், கிறிஸ்துவை உயர்த்துவதிலும் அவர் உறுதியாக இருந்தார்.

சுய பெருமையை குப்பையாகக் கருதினார்: 
பவுல் பிறப்பால் யூதன், சிறந்த கல்வி கற்றவன், பல அதிகாரங்கள் கொண்டவன். ஆனால் கிறிஸ்துவுக்காக அனைத்தையும் இழந்தார்."என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்... அவைகளைக் குப்பையுமாக எண்ணுகிறேன்." (பிலிப்பியர் 3:8)

தன்னை ஊழியக்காரனாக மட்டுமே பார்த்தார்: மக்கள் ஊழியர்களை உயர்த்திப் பேசியபோது பவுல் அதை வன்மையாகக் கண்டித்தார்."பவுல் யார்? அப்பொல்லோ யார்? அவர்கள் நீங்கள் விசுவாசிக்கிறதற்குக் காரணமாயிருந்த ஊழியக்காரர்தானே?" (1 கொரிந்தியர் 3:5)

தன்னை சிறியவனாகக் கருதினார்: 
தன்னைத் தகுதி குறைந்தவனாகவே எப்போதும் நடத்தினார்."நான் அப்பொஸ்தலரெல்லாரிலும் சிறியவன்; தேவனுடைய சபையைத் துன்பப்படுத்தினதினாலே, அப்பொஸ்தலனென்று சொல்லி கொள்ளப்படுவதற்குத் தகுதியுள்ளவன் அல்ல." 
(1 கொரிந்தியர் 15:9)

📖 வசன ஆதாரங்கள்: 
சுய உயர்வை கண்டிக்கும் வேதம்
பெருமை அழிவுக்கு முன்னடையாளம்:
"அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை." (நீதிமொழிகள் 16:18)

இயேசுவின் போதனை: 
இயேசு தன்னை உயர்த்துகிறவர்களைப் பற்றி தெளிவாக எச்சரித்துள்ளார்.
"தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவனெவனும் உயர்த்தப்படுவான்." (லூக்கா 14:11)

மகிமை தேவனுக்கே உரியது: 
மனிதர்கள் புகழைத் தேடக் கூடாது."மகிமை நமக்கல்ல, கர்த்தாவே, நமக்கல்ல, உமது கிருபையினிமித்தமும் உமது சத்தியத்தினிமித்தமும் உமது நாமத்திற்கே மகிமை வரப்பண்ணும்." (சங்கீதம் 115:1)

⚠️ இன்றைய ஊழியர்களின் தவறு
இன்றைய ஊழியர்கள் கர்த்தர் தங்களை உயர்த்துவார் என்ற வசனங்களை (உதாரணமாக: உபாகமம் 28:13 - "வாலாக்காமல் தலையாக்குவார்") தங்களின் சுய லாபத்திற்காகவும், அதிகாரத்திற்காகவும் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். வேதம் கூறும் "உயர்வு" என்பது ஆன்மீக ஆசீர்வாதமும், தேவ கிருபையுமே தவிர, மனிதப் புகழோ, மேடை ஆதிக்கமோ அல்ல.
என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென். 
கிறிஸ்துவின் பணியில் சகோதரன் 
சிலுவை ராஜா 
9841711591.

Comments

Popular posts from this blog

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

ஈரான் (ஏலாம்) இஸ்ரேல் யுத்தம்.

பிரபல ஊழியர்களை தேடி....