கிறிஸ்துவின் ரத்தம்

 இயேசு கிறிஸ்துவினுடைய
                         இரத்தம்.

(எபி 9:14)


இயேசு கிறிஸ்துவினுடைய இரத்தம் புதிய ஏற்பாட்டில் 

'மீட்பு' என்னும் கருத்துக்கு மையமானது.

(அடமானம் வைத்திருக்கிற ஒரு பொருளை வட்டியோடு மீட்பது என்ற பதத்தில் சொல்லப்பட்டுள்ளது இந்த மீட்பு)

(1கொரி 10:16;11:27;எபே 2:13;1பேது 1:2;வெளி 7:14;12:11)

கல்வாரி சிலுவையில் கிறிஸ்து தமது களங்கமற்ற இரத்தத்தை நமது பாவங்களைப் போக்குவதற்காகவும், நம்மைத் தேவனோடு ஒப்புரவாக்குவதற்காகவும், சிந்தினார். 

(எபி 5:8;ரோம 5:19;பிலி 2:8;லேவி அதிகாரம் 16).


தம்முடைய இரத்தத்தின் மூலம் கிறிஸ்து கீழ்கண்டவத்தை நிறைவேற்றினார். 


1) கிறிஸ்துவை விசுவாசித்து மனந்திரும்புகிற யாவருடைய பாவங்களையும் கிறிஸ்துவின் இரத்தம் மன்னிக்கிறது.

(மத் 26:28)


2) சாத்தானின் வல்லமையினின்றும், தீய சக்தியிலிருந்தும் விடுதலை பெற இயேசு கிறிஸ்துவின் இரத்தம் பிணைத்தொகையாகச் செலுத்தப்பட்டது.

(அப் 20:28;எபே 1:7; 1பேது 1:18,19; வெளி 5:9; 12:11).


3) இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற யாவரையும் இயேசு கிறிஸ்துவினுடைய இரத்தம் நீதிமான்களாக்குகிறது.

(ரோம 3:24,25)


4) இயேசு கிறிஸ்துவின் இரத்தம் விசுவாசிகளின் மனசாட்சியை பரிசுத்தப்படுத்துகிறது. அவர்கள் பாவம் இல்லாமல் முழு நிச்சயத்துடன் தேவனுக்கு ஊழியம் செய்வதற்காக இப்படி செய்யப்படுகிறது.

(எபி 9:14;10:22;13:18).


5) இயேசு கிறிஸ்துவின் இரத்தம் தேவனுடைய மக்களைப் பரிசுத்தப்படுத்துகிறது.

(எபி 13:12; 1யோவா 1:7-10).


6) இயேசு கிறிஸ்துவின் மூலமாக விசுவாசிகள் தேவனுடைய சமூகத்தில் நேரடியாக வந்து தேவனுடைய கிருபையையும், இரக்கத்தையும், உதவியையும், இரட்சிப்பையும் பெற்றுக்கொள்ள இயேசுவின் இரத்தம் வழி வகுக்கிறது.

(எபி 7:25; 10:19;எபே 2:13,18).


7) புதிய உடன்படிக்கையின் வாக்குத்தத்தங்கள் அனைத்துக்கும் கிறிஸ்துவின் இரத்தம் உத்திரவாதம் அளிக்கிறது. 

(எபி 10:29; 13:20;மத் 26:28;1கொரி 11:25).

(புது உடன்படிக்கையின் வாக்குத்தத்தம் இயேசு கிறிஸ்து மாத்திரம் தான். அவர் தருகிற நித்திய வாழ்வு.)


8) இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் இரட்சிக்கும், ஒப்புரவாக்கும், பரிசுத்தப்படுத்தும் வல்லமைகள் விசுவாசிகளுக்கு அவர்கள் கிறிஸ்துவின் மூலமாக தேவனிடம் வரும்போது கொடுக்கப்படுகிறது. 

(எபி 7:25:10:22;1யோவா 1:7).


தொடர்ந்து வாசித்து பயனடையுங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். 

ஆமென். 

கிறிஸ்துவின் பணியில் 

சகோதரன் 

சிலுவை ராஜா 

தொடர்புக்கு 

9841711591.

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை