தேவனுடைய வார்த்தை

*தேவனுடைய வார்த்தை மகத்துமுள்ளது*

என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள்.
(ஓசியா 8:12)


1 ) தேவனுடைய வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறபடியால் , அதை அறிகிற அறிவு வேண்டும்.

 யோவான் 6:63 “ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது.”

2) தேவனுடைய வார்த்தை விடுதலையாக்குகிறதாயிருக்கிறது

யோவான் 8:32 “சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.”

3 ) அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பது தான். அவருடைய வார்த்தை வல்லமையுள்ளதாயிருக்கிறது.

வெளி 19:13 “இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே.”

4) தேவனுடைய வார்த்தை சத்தியமும் உண்மையுமானவைகள்

வெளி 21: 5 “சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும், அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார்.”

எபிரெயர் 4:12 “தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.”

5) அவருடைய வார்த்தை களங்கமில்லாதது

1 பேதுரு 2:3 “நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்.”

6) அவருடைய வார்த்தை இனிமையானவைகள்

சங்கீதம் 119:103 “உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும்.”

7) அவருடைய வார்த்தை நிலைத்திருக்கிறது.

சங்கீதம் 119:89 “கர்த்தாவே, உமது வசனம் என்றென்றைக்கும் வானங்களில் நிலைத்திருக்கிறது.”

8) அவருடைய வார்த்தை வெளிச்சமாயிருக்கிறது

சங்கீதம் 119:105 “உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.”

நம்முடைய வாழ்க்கையில் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் கைப்பபந்ததத்தைப் போலவும் நெடுந்தூரத்துக்கு செல்ல பாதைக்கு தெருவிளக்கைப் போலவும் அவருடைய வார்த்தை இருக்கிறது.

தேவனுடைய வார்த்தை என்ன செய்கிறது?

• புதிதாகுக்கிறது.
• ஆக்குகிறது.
• வார்த்தையை அறிகிற அறிவினால் கன்மலையின் மேல் கட்டின வீடு போல் ஸ்திரமாயிருப்போம்.

• பரிசுத்தப்படுத்துகிறது.
•வழிநடத்துகிறது

சாமுவேல் 5 ஆம் அதிகாரத்தில் தாவீது தேவனுடைய ஆலோசனையினால் போருக்கு வழிநடத்தப்படுவதைப் பார்க்கலாம்.

கேடகமானது

நீதிமொழிகள் 30:5 “தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்; தம்மை அண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் கேடகமானவர்.”

ஜீவனும் ஆரோக்கியமுமாயிருக்கிறது

நீதிமொழிகள் 4:22 “அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் ஜீவனும், அவர்கள் உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம். ”

குணமாக்குகிறது

சங்கீதம் 107:20 “அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்.”

ஞானத்தை தரும்

சங்கீதம் 119:130 “உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும்.”

நாம் பாக்கியவான்கள்

வெளி 1:3 “இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது.”

சமாதானமுண்டு இடறலில்லை

சங்கீதம் 119:165 “உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை.”

முடிவுரை:

தேவனுடைய வார்த்தையின் மகத்துவதை தெரிந்துக்கொண்ட நாம் வேதாகமத்தை கடமைக்காக வாசிக்காமல் , தேவன் நம்மோடு பேச வேண்டும் என்ற இலக்கோடு நாம் வாசிக்க வேண்டும், அப்போது தேவனுடைய வார்த்தை நம்மை மறுரூபமாக்கும்.

மற்றவர்களோடு பேச தேவனுடைய வார்த்தைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் ஆமென்.
கிறிஸ்துவின் பணியில் 
சகோதரன் 
சிலுவை ராஜா 
தொடர்பு 
9841711591.

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை