மாம்சத்தின் கிரியைகள்
மாம்சத்தின் கிரியைகள்.
(கலா 5:19)
பரிசுத்த வேதாகமத்தில் வேறு எந்த பகுதியிலும் கலாத்தியர்
5:16-26 ஐப் ஆவியினால் நிறைந்த விசுவாசியின் நடத்தைக்கும், பாவமுள்ள மனித சுபாவத்தால் ஆளுகை செய்யப்படுகிற மனிதனின் நடத்தைக்குமுள்ள வித்தியாசத்தைச் சித்தரிக்கும் தெளிவான பகுதி கிடையாது. பவுல் ஆவியும், மாம்சமும், ஒன்றுக்கொன்று போராடுகிறதை வற்புறுத்தி பொதுவான நடத்தைகளிலுள்ள வித்தியாசத்தை விவாதிக்கிறது மாத்திரமல்லாமல், மாம்சத்தின் கிரியைகளுக்கும், ஆவியின் கனிகளுக்குமுள்ள ஒரு திட்டவட்டமான பட்டியலையும் அதில் கொடுத்துள்ளார்.
*மாம்சத்தின் கிரியைகள்*
"மாம்சம்"(கிரேக்க மொழியில் சார்க்ஸ்) துர் இச்சைகள் கொண்ட மனித சுபாவத்தை சித்தரிக்கிறது. மாம்ச சுபாவம்
மனந்திரும்பிய பிறகும் கிறிஸ்தவர்களுக்குள் தங்கி இருந்து அவர்களுக்கு மரணத்தை உண்டு பண்ணக் கூடிய சத்துருவாக உள்ளது.
(ரோமர் 8:6-8,13;கலா 5:17,21)
மாம்ஸ் கிரியைகளை நடப்பிக்கிறவர்கள் தேவனுடைய இராஜ்யத்தை சுதந்தரிக்க முடியாது.
(கலா 5:21)
ஆகவே விசுவாசி பரிசுத்த ஆவியின் வல்லமையினால்
(ரோமர் 8:4-14;கலா 5:17) இந்த மாம்ச சுபாவத்தோடு தொடர்ந்து போரிட்டு அவைகளை அழிக்க வேண்டும்.
மாம்சத்தின் கிரியைகளில் அடங்குபவை
(கலா 5:19-21) பின்வருமாறு:
1)"விபசாரம்"
(கிரேக்கம் போர்னியா)
அதாவது பாலியல் சம்பந்தமான தவறான நடத்தையும், தவறான பாலுறவும்; அதில் இழிவான படங்கள், திரைப்படங்கள், ஆபாச புத்தகங்கள், ஆபாச வீடியோக்கள், ஆபாச சம்பாசனைகள் மூலம் இன்பம் காணுதலும் அடங்கும்.
(யாத் 20:14;மத் 5:31-32; 19:9;
அப் 15:20,29; 21:25; 1கொரி 5:1);
2)"அசுத்தம்"
(கிரேக்கம் அகதர்ஸியா)
அதாவது பாலியல் சம்பந்தமான பாவங்கள், கெட்ட செய்கைகள், தீய பழக்கவழக்கங்கள், இருதயத்தின் எண்ணங்கள், ஆசைகள் உட்பட
(எபே 5:3; கொலோ 3:5);
3)"காம விகாரம்"
(கிரேக்கம் அசல்ஜியா)
அதாவது ஒருவனுடைய கட்டுக்கடங்காத உணர்ச்சிகளும், இச்சைகளும், எந்தவிதமான வெட்கமும், பொதுவான அடக்கமில்லாத நிலையை எட்டியதால் தொடரும் உறவு நாட்டம். (2கொரி 12:21;)
4)"விக்கிரகாராதனை "
(கிரேக்கம் ஐட லோ லேட்ரியா )
அதாவது ஆவிகளை, மனிதரை அல்லது வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகங்களை வணங்குவது. தேவனுக்கும் அவருடைய வார்த்தைக்கு ஈடாக அல்லது அதிகமாக ஒரு மனிதனாலோ, ஸ்தாபனத்திலோ அல்லது பொருளிலோ நம்பிக்கை வைப்பது. (கொலோ 3:5);
5)"பில்லி சூனியம்"
(கிரேக்கம் பார்மகேயா)
மந்திரவாதத்தின் மூலம் குறி சொல்லுதல், ஆவிகளை ஏவுதல், மாய வித்தை, பேய்களை வணங்குதல்,
"ஆவிக்குரிய" அனுபவங்களைப் பெற மாத்திரைகளை
(போதை வஸ்துகளை)
உபயோகப்படுத்துதல்
(யாத் 7:11,22, 8:18; வெளி 9:21; 18:23);
6) "பகை"(கிரேக்கம் எக்திரா)
மிக தீவிரமான, விரோதமான எண்ணங்களும், செய்கைகளும், அதிகப்படியான வெறுப்பும், விரோதமும்.
7)"விரோதங்கள்"
(கிரேக்கம் எரிஸ்) அதாவது
சண்டைகள், மாறுபாடு, மேல் நிலைக்கு வரும்படி போராடுவது.
(ரோம 1:29; 1கொரி 1:11; 3:3);
8) "வைராக்கியம்"
(கிரேக்கம் ஸெலோஸ்)
அதாவது வெறுப்பின் மிகுதி, மற்றவர்களின் வெற்றியை கண்டு பொறாமை
(ரோம 13:13; 1கொரி 3:3);
9)"கோபம்"
(கிரேக்கம் தூமஸ்)
அதாவது வன்முறையான கொடூர வார்த்தைகளையும், செயல்களையும் நெருப்புச் சுடர்கள் போன்று வெளியிடும், வெடிக்கும் கோபம். (கொலோ 3:8)
10)"சுயநலமான பேராசை"
(கிரேக்கம் எரிதியா)
அதிகார ஆதிக்கத்தை நாடுதல்.
( 2 கொரி 12:20;பிலி1:16-17);
11)" மார்க்க பேதங்கள் "
(கிரேக்கம் டைகோஸ்டேசியா)
அதாவது தேவனுடைய வார்த்தையை ஆதரிக்காத பிரிவினையை உண்டாக்கும் போதகங்கள். (ரோம 16:17);
12)" பிரிவினைகள்"
(கிரேக்கம் ஹெரெஸில்) அதாவது சபையின் ஐக்கியத்தைக் கெடுக்கும்படி உருவாகும் சுயநலவாதிகளான குழுக்கள் அல்லது விருப்பங்கள் ஒத்த மக்களின் கூட்டணிப் பிரிவுகள்.(1கொரி 11:19);
13)"பொறாமை"
(கிரேக்கம் தோனாஸ்)
அதாவது தான் விரும்பும் ஒன்றை வைத்திருக்கும் மற்ற ஒருவரை மனதார வெறுப்பது;
14)"வெறிகள்"
(கிரேக்கம் மீதே)
அதாவது மதுபானத்தினால் ஒருவருடைய மனதும், சரீரமும் கட்டுக்கடங்காமல் கெடுதல்;
15)"களியாட்டுகள்"
(கிரேக்கம்.கோமஸ்)
அதிகப்படியான விருந்தும், கேளிக்கையும், மதுபானம், போதை மருந்துகள், பாலுறவு போன்றவை உள்ளடங்கிய உல்லாச விருந்துகள்;
மாம்சத்தின் கிரியைகள் பற்றி பவுலின் கடைசி விளக்கம் கடினமாகவும், வலியுறுத்துவதாகவும் உள்ளது. இவ்விதமான கிரியைகளில் ஈடுபடும் கிறிஸ்தவர் என்று அழைக்கப்படும் எவரும் தேவனுடைய இராஜ்யத்திலிருந்து தங்களை புறம்பாக்கிக் கொள்கிறார்கள். அதாவது அவர்கள் நித்திய ஜீவனை சுதந்தரிக்க மாட்டார்கள்.
(கலா 5:21; 1கொரி 6:9)
ஒருவேளை இப்படிப்பட்ட சுபாவங்களை உடையவர்கள் தங்களை திருத்திக் கொள்ளுங்கள். நாளை நாளை என்று நாட்களை தள்ளிப் போடாதீர்கள். நம்முடைய நாட்கள் குறைவுள்ளது என்பதை புரிந்து கொண்டு தேவ சமூகத்தில் தேவப்பிரசன்னத்தை உணர்ந்து தங்கள் வாழ்வை கர்த்தருக்குப் ஒப்புக்கொடுங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா
தொடர்புக்கு
9841711591.
Comments