நம்முடைய பாவங்களைச் சுமந்தார்
நம்முடைய பாவங்களைச் சுமந்தார்.
(1பேதுரு 2:24)
நம்முடைய பாவங்களுக்கு ஏற்ற தண்டனையை தன் மீது ஏற்றவராய் (எசா 53:4,11-12)
நமக்கு பதிலாக இயேசு கிறிஸ்துவானவர் நம்முடைய பாவங்களைச் சுமந்தார்.
(யோவான் 1:29;எபி 9:28;10:10;)
நமக்குப் பாவ பரிகாரத்தை உண்டு பண்ணு வகையில் அவர் மரித்தது எதற்கெனில், நாம் பாவத்தின் வல்லமை, அதிகாரம், மற்றும் குற்ற உணர்வினின்று முற்றிலும் விடுவிக்கப்படவேயாகும்.
இயேசு கிறிஸ்து தம்முடைய மரணத்தின் மூலம் பாவத்தின் நிமித்தம் உண்டாகும் தண்டனையையும், குற்ற மனசாட்சியையும் நம்மை விட்டு விலக்கி, தேவனிடத்தில் நீதிமானாகத் திரும்பத்தக்கதான வழியைக் காண்பித்துள்ளார்.
(ரோமர் 3:24-26;) மேலும் அவருடைய மரணத்தின் மூலமாக நாம் அவர் முன்பு நீதிமான்களாக வாழ்வதற்கு தேவையான கிருபையையும் பெறும்படி செய்திருக்கிறார்.
(ரோமர் 6:2-3; 2கொரி 5:15;கலா 2:20).
இரட்சிப்பை பற்றியும் அதன் மூலமாக உண்டாகும் நன்மைகளைப் பற்றியும் பேதுரு கூறும் போது "குணமானீர்கள்"என்னும் பதத்தை பயன்படுத்துகிறான்.
(ஏசா 53:5;மத் 8:16-17)
இயேசு கிறிஸ்து நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்த்தார் என்பதை விசுவாசியுங்கள்.
நம்முடைய பாவத்தை அவர் தம்முடைய சரீரத்தில் சுமந்து தீர்த்தார் என்பதை நம்புங்கள்.
நாம் செய்த பாவங்களுக்கு நாம் செலுத்த வேண்டிய பாவ பரிகாரத்தை இயேசு கிறிஸ்து தாமே முன்வந்து செலுத்தினார் என்பதை நினைவு கூறுங்கள்.
அவருக்கு முன்பாக நாம் நீதிமான்களாக பரிசுத்தவான்களாக நிற்க வேண்டும் என்பதை ஒவ்வொரு நாளும் நினைவு கூறுங்கள்.
அவர் தந்த இரட்சிப்பின் மூலமாக நமக்கு ஆரோக்கியமான சுகத்தை தந்திருக்கிறார் என்பதை விசுவாசித்து அறிக்கை செய்யுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா
தொடர்புக்கு
9841711591.
Comments