யோசியா

யோசியா.
(2இரா 22:1)

யூதாவை ஆட்சி செய்த நீதியுள்ள இராஜாக்களில் யோசியா கடைசியானவன். அவன் இளம் வயதிலேயே 
(16வயதில்) தேவனைத் தேட ஆரம்பித்தான்.
(2நாளா 34:3)
நான்கு வருடங்களுக்குப் பிறகு அவன் யூதா தேசம் முழுவதையும், அந்நிய 
தேவ வணக்கம் இல்லாமலிருக்கும்படி சுத்திகரிக்க ஆரம்பித்தான். 
( 2 நாளா 34:3-4).
தேவாலயம் பழுது பார்க்கப்படும் போது, இல்க்கியா மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்தை கண்டெடுத்தான்.
(2நாளா 34:15)
இந்த கண்டுபிடிப்பு அவர்கள் கர்த்தருடைய வார்த்தைக்கு மீண்டும் தங்களை அர்ப்பணிக்க காரணமாயிற்று. தேசம் முழுவதிலும் ஒரு ஆவிக்குரிய எழுப்புதல் உண்டாயிற்று. 
(2இரா 23:1-30),
ஏரோமியா, ஆபகூக் தீர்க்கதரிசிகள் மக்கள் அனைவரையும் முற்றிலுமாக தேவனிடம் திருப்பும் யோசியா இராஜாவின் முயற்சியில் அவனுக்கு உதவி செய்தார்கள். யோசியாவின் காலத்தில் மக்களின் ஆவிக்குரிய நிலை எப்படி இருந்தது என்பதை அறிய 
(எரே அதி 1-12; ஆப 1:2-4) பார்க்கவும். 

யோசியாவின் 18 ஆம் வருஷ ஆட்சியில்..

யோசியாவுக்கு தேவனிடம் இளைஞனாய் இருக்கும்போதே (அப்போது யோசியாவின் வயது 26) மிகுந்த பக்தி வைராக்கியம் இருந்தது. இது எதை காண்பிக்கிறதென்றால் ஒரு வாலிபன், அநேக வயது முதிர்ந்தவர்களுக்கு சமமாகவோ, அல்லது அதிகமாகவோ தேவனுக்காகவும் அவர் பணிக்காகவும் வைராக்கியமுள்ளவராய் இருக்க முடியும்.

யூதாவின் மக்களின் பாவத்தினால் தேவனுடைய நியாயத்தீர்ப்பு தவிர்க்க முடியாததாகி விட்டதோ என்று அறிய யோசியா விரும்பினான். அவர்கள் சென்று விசாரித்தபோது 
(2இரா 22:13)

1) உழைத்தால் என்னும் தீர்க்கதரிசியின் மூலமாக தேவன் யூதா தேச மக்கள் அனைவரும் ஒரு நாள், தங்கள் எதிரியின் கையில் நிச்சயமாக ஒப்புக்கொடுக்கப்படுவார்கள் 
(2இரா 22:14-17) என்று கூறினார். அதாவது தேவனுடைய மக்கள் தங்கள் பாவங்களில் தொடர்ந்து நிலைத்திருக்கும் போது, மக்கள் மீது தேவனுடைய நியாயத்தீர்ப்பை மாற்ற முடியாத ஒரு காலம் உண்டாகிவிடும். 

2) அநேக ஆண்டு காலமாக மக்கள் தேவனுடைய ஊழியக்காரர்களைப் பரிகாசம் பண்ணி அவருடைய வார்த்தைகளை அசட்டை செய்து, அவருடைய தீர்க்கதரிசிகளை நிந்தித்தபடியால், கர்த்தருடைய கோபம் அவருடைய ஜனத்தின் மேல் மூண்டது; சகாயமில்லாமல் போயிற்று.(2நாளா 36:16)
யோசியாவின் எழுப்புதல் யூதாவின் மீது வரவிருந்த தண்டனைத் தீர்ப்பை சற்றுத் தாமதப்படுத்தியது. ஆனால் அதை வராமல் தடுக்க முடியவில்லை. 
(2இரா 22:18-20; 23:24-27).
தொடர்ந்து சிந்திப்போம் ஆமென்.

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை