பார்க்கிறவன்

இச்சையோடு... பார்க்கிறவன்.
(மத் 5:28)
இங்கே இயேசு கண்டனம் செய்வது, ஒரு காட்சியைக் கண்டதும் சாத்தான் திடீரென்று மனதில் எழுப்பக்கூடிய எண்ணத்தையோ அல்லது திடீரென்று மனதில் தோன்றும் தவறான ஆசையையோ அல்ல.
ஒருவனுடைய சுய சித்தத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தவறான எண்ணம், அல்லது ஆசையைக் குறிக்கும்.
இது ஒருவனிடத்தில் தோன்றும் முறைகேடான, ஒழுக்கக்கேடான ஆசை, அதற்குரிய சந்தர்ப்பமும், சூழ்நிலையும் சாதகமாகக் கிடைத்தவுடன் அதை நிறைவேற்ற துடிக்கும்‌. அவனுடைய உள்ளத்தில் தோன்றும் முறைகேடான பாலுறவு இன்பத்துக்கேதுவான ஆசைகளை எதிர்த்து, மேற்கொள்ளாமல், அதற்கு இடம் கொடுத்தால் அது பாவமாகும்.

1) கிறிஸ்தவர்கள் ஆண் பெண் பாலுறவு தொடர்பான காட்சிகளைக் கொண்ட திரைப்படங்களையோ ஆபாசமான காட்சி படங்கள் கொண்ட கெட்ட புத்தகங்களையோ பார்க்காதபடி கவனமாகத் தங்களை காத்துக் கொள்ள வேண்டும்.
(1கொரி 6:15,18; கலா 5:19,21;
எபே 5:5; கொலோ 3:5; 2தீமோ2:22; தீத்து 2:12;
எபி 13:4;யாக் 1:14; 1பேது 2:11; 2பேது 3:3;
1யோவா 2:16)

2) ஆண், பெண் பாலுறவில் பரிசுத்தத்தைக் கடைபிடிப்பதில் ஆணுக்கும், பெண்ணுக்கும் சமமான பங்குண்டு. கிறிஸ்தவ பெண் தன் உடலை மற்றவர்கள் கவனிக்கத் தூண்டும் படியான விதத்தில் ஆடை அணியக் கூடாது. அப்படி செய்தால் அவளை பார்க்கும் ஆண்களுக்கு சோதனை உண்டாக்கி, அவர்களுடைய மாமிச இச்சையை அது தூண்டுவதாகும். அடக்கமில்லாமலும், உணர்ச்சியைத் தூண்டும்படியாகவும் பெண்கள் ஆடை அணிவது பாவமான காரியம்.
(1தீமோ 2:9; 1பேது 3:2,3).

ஒரு காலத்தில் சினிமா தியேட்டர்கள் மூடும் படியாக சபை ஊக்கமாக ஜெபித்தது.
இக்காலத்தில் பிரபல ஊழியர்கள் பிரபல நடிகர்களை கொண்டு வந்து ஜெபம் செய்து படத்தை எடுக்கிறார்கள். (மைனா, கும்கி, இதில் டைரக்டர் சாட்சி வேற)
சினிமா நடிகைகளை கொண்டு வந்து டிவி சீரியல் எடுத்து அதற்கு கிறிஸ்துவ நாடகம் என்று பெயர் வைத்து அநேகரை சினிமா பார்க்கவும் டிவி சீரியல் பார்க்கவும் பிலேயாம் ஆவி இன்றும் சபையில் கிரியை செய்கிறது.
(2பேது 2:15; யூதா 1:11;வெளி
2:14;) அதை எதிர்த்து ஜெபிக்க கூடிய ஊழியர்கள் இன்றைக்கு இல்லை.
அப்படிப்பட்ட ஊழியனோடு கைகோர்க்கவும், செல்பி எடுக்கவும் தான் இருக்கிறார்கள்.
சில ஊழியர்கள் வாலிபர்களுக்குள்ளே காதல் திருமணம் செய்து கொள்ளுங்கள். நானும் காதலித்தான் திருமணம் செய்தேன். ஆகையால்
சபைக்குள்ளும் காதல் பெருகி இருக்கிறது. இது தவறு இல்லையா இப்படி செய்யலாமா என்று கேட்டால். யாக்கோபு காதலித்து திருமணம் செய்தான் என்று சொல்லுகிறார்கள்.
யாக்கோபு காதலித்தது உண்மையாக இருந்தாலும், தேவ சித்தம் லேயாள் தான் முதல் மனைவியாள். ஏனென்றால் லேயாள் வயிற்றில் தான் யூதா கோத்திரம் வந்தது இந்த யூதா கோத்திரத்தில் நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து வெளிப்பட்டார்.
ஆகையால் சில போக்கிரித்தனமான ஊழியர்கள் சொல்லுவதை கேட்டு பெண்களை இச்சித்து காதலித்து பாவத்தைச் செய்யாதபடிக்கு தேவ சித்தம் நிறைவேறும் படிக்கு உங்கள் சரீரத்தை தேவனுக்கு ஒப்புக் கொடுங்கள்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா
தொடர்புக்கு
9841711591.

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை