உலகத்தின் கடைசி பரியந்தமும்
உலகத்தின் கடைசி பரியந்தமும் போங்கள்....
சீஷராக்குங்கள்...
ஞானஸ்நானம் கொடுங்கள்...
(மத் 28:19)
ஒவ்வொரு தலைமுறையினரிலும் தம்மைப் பின்பற்றுவோருக்கு இயேசு கிறிஸ்து கொடுக்கும் 'பிரதான கட்டளை' இதுவே.
இதுவே கிறிஸ்துவ திருச்சபையின் நற்செய்திப் பணியின்
(மிஷினெரி பனியின்) இலட்சியம், பொறுப்பு, அதிகாரம் ஆகியவற்றை நிலைநாட்டுகிறது.
1) புது உடன்படிக்கையின் திருச்சபையானது உலகத்தின் கடைசி பாரியந்தமும் சென்று, கிறிஸ்துவும்,அப்போஸ்தலர்களும், வெளிப்படுத்துகிற படி கிறிஸ்துவின் நற்செய்தியை மக்களுக்கு அறிவிக்க வேண்டும்.
(எபே 2:20) இந்தப் பணியில் நற்செய்தி பணியாளர்களை மிஷனெரிகளாக எல்லா தேசங்களுக்கும் அனுப்புதல் முக்கியமான பொறுப்பாகும்.
(அப் 13:1-4)
தேவன் இந்த உலகத்திலிருந்து மக்களை பிரித்தெடுத்து தம்முடைய சித்தத்தை அவர்கள் நிறைவேற்றி முடிக்கும் படியான கட்டளை தான்
'இந்த பிரதான கட்டளை'
ஆனால் சபைகள் பல ஆண்டுகளாக விசுவாசிகளை அலங்கார வாசலில் பிச்சை எடுக்கும் முடவனை போல ஆக்கிவிட்டது.
ஒவ்வொரு விசுவாசியும் 40 ஆண்டுகள் 30 ஆண்டுகள் 20 ஆண்டுகள் 15 ஆண்டுகள் 10 ஆண்டுகள் 5 ஆண்டுகள் என விசுவாசிகளாகவே வாழ்ந்து கிறிஸ்துவின் சித்தத்தை செய்யாமல் மடிந்து விட்டார்கள். இவர்களால் தேவனுக்கு என்ன பிரயோஜனம் என்பதை திருச்சபைகள் சிந்திக்க வேண்டும்.
சபையின் பிரதான நோக்கம் தேசம் முழுவதும் இராஜ்ஜியத்தின் சுவிசேஷம் அறிவிக்கப்பட வேண்டும்.
சீசர்கள் உருவாக்கப்பட வேண்டும். ஆதிசபை சீசர்களை உருவாக்கியது. சீசர்கள், சீசர்களை உருவாக்கினார்கள்.
(அப் 6:4; 8:4)
2) அறிவிக்கப்படும் நற்செய்தியானது, மனம் திரும்புதலையும், பாவ மன்னிப்பையும் மையமாகக் கொண்டிருக்க வேண்டும்.
(லூக் 24:47) மேலும் பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெற்றுக்கொள்ள வழிநடத்த வேண்டும்.(அப் 2:38)
இந்த உலகத்தில் தீமைகளைச் செய்து வாழும் அக்கிரமக்காரர்களை விட்டு விலகி பரிசுத்த ஜாதியாராக இருக்க வேண்டும். (அப் 2:40)
பரலோகத்தில் இருந்து கிறிஸ்து மறுபடியும் வருவதை எதிர்நோக்கி ஆயத்தமாகக் காத்திருக்க வேண்டும்.
(அப் 3:19,20; 1தெச 1:10).
3) இந்த நற்செய்தியின் பணியின் நோக்கம் கிறிஸ்துவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் மக்களை கிறிஸ்துவின் சீஷராக்குதல்.
இந்த பகுதியில் நேரடியான கட்டளை இதுவே. நற்செய்திப் பணியின் மூலமும், மிஷனெரிகளின் சாட்சிகளின் மூலமும், அல்லது சீஷர்கள் சாட்சிகள் மூலமும், மக்கள் மனம் திரும்பத் தீர்மானிப்பார்கள் என்று மட்டும் கிறிஸ்து எதிர்பார்க்கவில்லை.
திருச்சபைகள் நற்செய்திப் பணியின் மூலம் அநேகரை சபைகளில் சேர்த்து
சபை விரிவாகவும், உறுப்பினர் எண்ணிக்கை பெருகவும் மட்டும் முயற்சித்தால் போதாது. ஆனால் நற்செய்திப் பணியின் மூலம் இந்த உலகத்தை விட்டுப் பிரிந்து, கிறிஸ்துவின் கட்டளைகளை ஏற்று கீழ் படிந்து, தங்கள்
முழு இருதயத்தோடும்,
முழு மனதோடும்,
முழு சித்தத்தோடும், கிறிஸ்துவை பின்பற்றும் உண்மையான சீஷர்களாக ஆக்கப்பட வேண்டும். (யோவா 8:31)
இன்றைய பெரிய சபை பெரிய ஊழியர் என்று அழைக்கப்படும் அல்லது சொல்லப்படும் சபை வேத வசனத்தின் படி அருள் நாதர் இயேசு கிறிஸ்துவின் கட்டளையின்படி சீஷர்களை உருவாக்கியுள்ளதா ?
அல்லது மிஷனெரிகளாக அனுப்பி உள்ளதா ?
அல்லது அலங்கார வாசலில் பிச்சை எடுக்கும் முடவர்களை உருவாக்கி உள்ளதா ?
இப்படிப்பட்ட சபைகளை தேவன் ஒருநாளும் அறிவதில்லை. என்பதை ஒவ்வொரு போதகர்களும் திருச்சபை மக்களும் அறிந்து கொள்ள வேண்டும்.
(மத் 7:21,22; லூக் 6:46).
எண்ணிக்கை உள்ள சபையாக இருந்தாலும் அது தேவ சித்தம் செய்யக்கூடிய சபையாக இருக்க வேண்டும். தேவனுடைய கட்டளையின்படி செய்யக்கூடிய சபையாக இருக்க வேண்டும்.
4) மேலும் சமுதாயத்தைக் கிறிஸ்தவமயமாக்குவதற்கும்
அல்லது இந்த உலகத்தையே ஆதாயப்படுத்திக் கொள்வதற்கும் கிறிஸ்து கட்டளை கொடுக்காமல்
'இழந்து போன ஆத்துமாக்கள்' ஆன ஆண்களையும், பெண்களையும் சந்தித்து அவர்களுக்கு நற்செய்தி அறிவிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கிறிஸ்து கட்டளையிடுகிறார்.
கிறிஸ்துவை விசுவாசிப்பவர்கள், தான் வாழும் தீமை நிறைந்த உலகை விட்டு, விலகி, ஒழுக்க கேட்டையும், பாவங்களையும், விட்டுப் பிரிந்து வாழ்ந்து,
(ரோம 13:12; 2கொரி 6:14) உலகத்தின் தீமையை வெளிப்படுத்த வேண்டும்.
(எபே 5:11).
5) கிறிஸ்துவை விசுவாசித்து, நற்செய்தி ஏற்றுக் கொள்கிறவர்கள் தண்ணீரினால் மூழ்கி ஞானஸ்நானம் பெற வேண்டும். இது அவர்களை அசுத்தமான பாவங்களையும், உலகத்தையும், தங்கள் பாவ சுபாவங்களையும் வெறுத்து,
தங்களை முற்றிலுமாகக் கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்து,
அவருடைய இராஜ்யத்தின்
நோக்கங்களுக்காக வாழ அவர்கள் செய்யும் உடன்படிக்கை உறுதி மொழியைப் பிரதிபலிப்பதாகும்.
(அப் 22:16)
6) தம்முடைய கீழ்ப்படிதலுள்ள
ஊழியக்காரர்களைக் கிறிஸ்து பரிசுத்த ஆவியின் பிரசன்னத்தாலும் வல்லமையாலும் நிரப்பி வழிநடத்துவார்.
(மத் 28:20; 1:23; 18:20)
உன்னதத்திலிருந்து பரிசுத்த ஆவியின் வல்லமையைத் தரித்துக் கொண்ட பின்னரே அவர்கள் எல்லா தேசங்களுக்கும் சென்று கிறிஸ்துவை குறித்துச் சாட்சியாக அறிவிக்க வேண்டும்.
(லூக் 24:49; அப் 1:8).
தொடர்ந்து தேவ சித்தத்தின்படி நமது ஊழியங்கள் நிறைவடைகிறதா என்பதை கவனியுங்கள்.
நான் ஐக்கியமாக இருக்கும் சபையின் உடன் ஊழியர் ஒருவர் என்னிடத்தில் கேட்டார் நீங்கள் நீங்கள் போடுகிற பதிவின்படி செய்கிறீர்களா ?
முதலாவது நீங்கள் கைக் கொள்ளுங்கள்.
பிறகு எங்களுக்கு சொல்லுங்கள். மிகப்பெரிய ஆதங்கத்தோடு தன்னுடைய வாட்ஸ் அப்பில் பதிவு செய்தார்.
இந்த வேத புத்தகம் நாம் கை கொள்வதற்காக எழுதப்பட்டது.
இதில் கைக்கொண்டவர்களும் இருக்கிறார்கள்.
கைக்கொள்ளாதவர்களும்
இருக்கிறார்கள்.
தேவன், எப்பொழுது என் கண்களைத் திறந்தாரோ .....
அப்பொழுது வெளிச்சத்தை அறிந்து கொண்டேன் அந்த நாள் முதல் என்னுடைய பிரயாசம் சீஷர்களை உருவாக்குவதே
இது என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் நான் நிறைவேற்றிக் கொண்டே இருக்கிறேன்.
என்னோடு கூட இருக்கிற ஊழியர்களும் விசுவாசிகளும் என் மனைவியும் நான் தொழுது கொள்கிற தேவனும் இதற்கு சாட்சிகள்.
நாங்கள் நடத்தும் ஊழியர்கள் ஐக்கியத்திலும் இதைத்தான் பிரஸ்தாபம் பண்ணுகிறோம்.
நாங்கள் நடத்தும் நற்செய்தி கூட்டங்கள் மற்றும் கருத்தரங்குகள் எல்லாவற்றிலும் இதைத்தான் பிரஸ்தாபம் பண்ணுகிறோம்.
அதேபோல் நீங்களும் முயற்சி செய்யுங்கள். கட்டளையை நிறைவேற்றுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா
தொடர்புக்கு
98 41 711 591.
Comments