சீஷர்களுக்கு சொன்னது
இயேசு கிறிஸ்து சீஷர்களுக்கு பிரதியுத்திரமாக சொன்னது.
(மத் 24:4-51)
ஒலிவமலை உரையாடலில் இயேசு கிறிஸ்து கூறியவைகள் அவருடைய சீஷர்களுக்கும், கடைசி காலத்தில் பூமியில் அரசாட்சி செய்யும்படி அவர் கெம்பீரமாக திரும்பி வரும் வரைக்குமுள்ள தேவனிடத்தில் விசுவாசமுள்ள பிள்ளைகள் அனைவருக்கும் உரியதானவைகள்.
1) மகா ஒபத்திரவ காலத்துக்கு முன் வாழும் விசுவாசிகள் அவர்கள் கிறிஸ்துவின் வருகைக்கான காலத்தைக் கணக்கிடவோ, மதிப்பிடவோ முடியாது.(மத் 24:42-44) எனவே, எந்த நேரத்தில் கிறிஸ்துவின் வருகை இருந்தாலும் அதற்காக அவர்கள் ஆயத்தமாக இருக்க வேண்டும். ஏனெனில் அவர் திரும்பி வந்து ஆயத்தமாக இருக்கும் பரிசுத்தவான்களைக் தம்முடன் பரலோகத்துக்குப் பிதாவின் வீட்டுக்கு அழைத்துச் செல்வார்.
(யோவா 14:2,3)
அவர் வருவார் என்று அவர்கள் எதிர்பார்க்கும் நேரத்தில் அல்ல, எதிர்பாராத நேரத்தில் வருவார்.
(மத் 24:44)
2) மகா உபத்திரவ காலத்தில்
மனந்திரும்பி கிறிஸ்துவை ஏற்றுக் கொள்கிறவர்கள் அதிக நிச்சியமாக அவர் வரும் நாளை அறிந்து கொள்ள முடியும். ஏனெனில் கிறிஸ்து அவர்களுக்கு அவர் வருகை சமீபம் என்று அறிவதற்கான அடையாளங்களை தெரிவிப்பார்.
(மத் 24:15-29) இந்த அடையாளங்களை அவர்கள் காணும் போது அவர்கள் கிறிஸ்துவின் வருகை வாசலருகே சமீபம் என்று அறிந்து கொள்வார்கள்.
(மத் 24:33)
இந்த 33ஆம் வசனம் மகா உபத்திரவ காலத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளை குறிக்கிறது. (மத்24:15-29 வரை மிக முக்கியமான காரியம் 'பாழாக்கும் அருவருப்பு' ) தீர்க்கதரிசன நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாக வெளிப்படும் போது, உபத்திரவ காலத்தில் வாழும் உண்மை விசுவாசிகள் பரிசுத்த வேதாகமத்தை தேடி ஆராய்ந்து இந்த காரியங்களையெல்லாம் கண்டுபிடிப்பார்கள். இவற்றைக் கண்டு ஆண்டவரே என் வருகை "மிக சமீபம்" "வருகை வாசலருகே வந்துவிட்டது"என்று அறிந்து கொள்வார்கள்.
தொடர்ந்து வேத வசனங்களை ஆராய்ந்து வாசிப்போம் இவைகளால் நாம் நித்திய ஜீவனை சுதந்தரிக்க முடியும்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா
தொடர்புக்கு
9841711591.
Comments