கொண்டாடி முடிந்து போனது
கிறிஸ்மஸ் கொண்டாடி முடிந்து போனது.
அடுத்து புது வருடம்
புது காலண்டர். புதிய வாக்குத்தங்கள்.
ஆமாம் அதுவும் முடிந்தது.
அடுத்து ஈஸ்டர்
அதுவும் கொண்டாடி முடிந்தது.
அடுத்து vps அதையும் ஒரு கை பார்த்தாச்சு
இதையே திரும்பத் திரும்ப நாம் கொண்டாடிக் கொண்டிருப்பது நான் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு என்ன பயன் என்பதை அநேகர் நினைவு கூறுவதில்லை, அதைப் பற்றிய தெளிவான சிந்தனையும் அநேக தேவ ஊழியர்களுக்கும் தேவனுடைய பிள்ளைகளுக்கும் அது விளங்காத புதிராக இருக்கிறது.
இதுதான் பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்தரத்தின் 40 ஆண்டுகளாக சுற்றி சுற்றி வந்த செயல்பாட்டில் ஆயிசு நாட்களை தொலைத்தார்கள்.
கிறிஸ்மஸ், புத்தாண்டு, ஈஸ்டர், வி பி ஸ் கொண்டாட்டம், ஆசன கொண்டாட்டம், ஆண்டு விழா கொண்டாட்டம், கடைசியில் கர்த்தரின் பெயரில் கன்றுக்குட்டி கொண்டாட்டம்.
வருடம் வருடம் நாம் இதையே சுற்றி வருகிறோம். முடிவில் சுதந்திர தேசத்தில் நுழையாமல் வழியிலே அழிந்து போனார்கள்.
நமக்கும் ஒரு பரம சீயோன்
நமக்கும் பரம எருசலேம்
நமக்கும் ஒரு நித்திய ஜீவன்
அதை இழந்து விடாதீர்கள்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சீக்கிரம் வரப் போகிறார், அவர் வரும் பொழுது நான் எப்படிப்பட்ட நிலையில் இருக்கிறேன் என்பதை சிந்திக்க மறந்து விட்டோம்.
*கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தமது பரிசுத்தவான்கள் அனைவரோடுங்கூட வரும்போது......
பிழையற்ற பரிசுத்தமுள்ள
வர்களாயிருக்கவேண்டும்.*
(1 தெசலோ 3:13)
பவுல் கிறிஸ்துவின் வருகையை மனதில் கொண்டு அடிக்கடி ஜெபித்தான்.(பிலி 1:10,11).
கிறிஸ்துவின் வருகையின் பொழுது சபையிலுள்ள சிலர் பாவத்தில் ஜீவிப்பதாலும், வெது
வெதுப்பாருப்பதினாலும் பிடிக்கப்படுவதை ஒரு வேதனையாக அவன் கருதினான். இதே கவலையை இயேசுவும் வலியுறுத்தினார்.
(மத் 24:42-51; 25:1-13).
கிறிஸ்துவின் வருகையின் வெளிச்சத்தில் பரிசுத்த வேதாகமத்தின் தரமானது "பிழையற்றதும், பரிசுத்தமானதமாய் இருக்க வேண்டும். நம்மை முழு இருதயத்தோடும் கர்த்தருக்கென்று அர்ப்பணித்துக் கொள்வதுடன், அவரை வேதனைப்படுத்துகிற எல்லாவற்றினின்றும் விலகிக் கொள்ள வேண்டும்,
"தம்முடைய பரிசுத்தவான்களோடு கூட"
என்னும் இந்த சொற்றொடர், பிரிந்து சென்று முன்கூட்டியே பரலோகத்தில் கர்த்தருடனே கூட இருக்கும் பரிசுத்தவான்களைக் குறிக்கிறது.
*1) பரிசுத்தம் அது தேவனுடைய சித்தமாயிருக்கிறது.*
பாலின ஒழுக்கம் மின்மை சமுதாயத்தில் பொதுவாகவும், ஏற்றுக்கொள்ள ப்படக்கூடியதாகவுமிருந்தாலும், அப்போஸ்தலர்கள் தேவனுடைய பரிசுத்தத்தையும், சத்தியத்தையும், விட்டுக் கொடுக்கவில்லை. அவர்கள் சமுதாயத்தில் எண்ணங்களுக்கும், போக்குக்கும் இணங்கிப் போகுமளவிற்கு தங்கள் தராதரத்தை அவர்கள் தாழ்த்திக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் சில சபைகளில் தரம் தாழ்ந்திருந்ததை கண்ட பொழுது அவர்களைக் கடிந்து கொண்டு சீர்திருத்தவும் வகை தேடினார்கள்.
(வெளி 2:14-15; 20).
தரம் தாழ்ந்த நன்னெறி ஒழுக்கங்கள் நிலவி வரும் இன்றைய வெளிச்சத்தில், சபையைத் தேவனுடைய நீதியின் தரங்களுக்கு ஏற்ப அழைக்கக்கூடிய அப்போஸ்தலரை போன்ற தலைவர்கள் இன்னும் தேவைப்படுகிறார்கள்.
தொடர்ந்து ஜெபித்து முன்னேறுங்கள்.
இயேசு கிறிஸ்துவே நமது சந்தோசம்
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா
தொடர்புக்கு
9841711591.
Comments