சத்தம் கேட்டால்

*சத்தம் கேட்டால் கீழ்ப்படிந்து விடு*

தேவனுடைய பிள்ளைகள் ஆசீர்வாதமாக இருக்க வேண்டுமென்றால் தேவன் என்ன சொல்லுகிறாரோ அல்லது பைபிள் என்ன சொல்லுகிறதோ அதை செய்யும் பொழுது தான் தேவன் தருகிற ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ள முடியும்.


1)அவர் உங்களுக்கு என்ன சொல்கிறாரோ அதன்படி செய்யுங்கள்
(யோவான் 2:5) அதன்படி செய்யும்போது
கானாவூர் கல்யாணத்தில் குறைவு நிறைவானது

2)லூக்கா 5:5
உமது வார்த்தையின் படியே வலையை போடுகிறேன்.

மாம்சத்தின் படி பிரயாசப்பட்ட பிரயாசம் வீண் போனது.
ஆனால் தேவனுடைய வார்த்தையின் படி செய்யும் பொழுது பிரயாசம் நிறைவேறியது.

3) யோவான் 4 :50
தேவனுடைய வார்த்தையை நம்பி போனான்.
ஜுரம் நீங்கி மகன் பிழைத்துக் கொண்டான்.
வார்த்தையை நம்பும் பொழுது தேவனுடைய வல்லமை வெளிப்படும்.

4) மத்தேயு 19:22
இயேசு சொல்லிய வார்த்தைகளை கேட்ட பொழுது மிகுந்த துக்கத்தோடு புறப்பட்டு போனான்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடம் வந்து துக்கத்தோடு போன ஒரே மனிதன் இவன் தான்.

காரணம் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைக்கு கீழ்ப்படிய முடியவில்லை. ஆகையால் நித்திய வாழ்வை இழந்தான்.

இம்மைக்குரிய வாழ்வையே அவன் விரும்பினான். இன்றும் அநேக ஊழியர்கள்,
விசுவாசிகள், பணம், பொருள் என்று சேர்த்து வைத்து அதையே வாழ்வு எண்ணுகிறார்கள். 
மத்தேயு 6:21 ல்
உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.
நம்முடைய இருதயம் தேவனிடத்திலிருந்தால் தேவனுக்கு நிச்சயமாக கீழ்ப்படியும்.
இவையெல்லாம் அழிந்து போகும் என்று வேதம் சொல்லுகிறது. அழியாத வாழ்வை நித்திய வாழ்வை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தருகிறார். எப்பொழுது அவருடைய வார்த்தையின் படி நடக்கும் பொழுது.... நிச்சயம் அற்புதம் நடக்கும்.

லூக்கா 6:46
என்னை ஆண்டவரே ஆண்டவரே என்று சொல்லி நான் சொல்லுகிறபடி நீங்கள் செய்யாமல் போகிறது என்ன?

கீழ்படியும்போதுதான் நாம் தேவனை எவ்வளவு நம்புகிறோம் அல்லது விசுவாசிக்கிறோம் என்பது வெளிப்படும். 
எபி 11:6 ல்
விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.
விசுவாசித்தால் தேவனுடைய மகிமையை நிச்சயம் நாம் காண்போம். 
லாசர் வியாதியில் இருக்கும் பொழுது அவனுடைய சகோதரிகள் அவனுக்கு ஆறுதல் சொன்னார்கள். கவலைப்படாதே, நாங்கள் இயேசு கிறிஸ்துவுக்கு தெரியப்படுத்தி இருக்கிறோம். அவர் நிச்சயமாக வந்து உன்னை குணமாக்குவார் என்று சொல்லி இருந்தார்கள். 

யோவான் 11ம்அதிகாரம் முழுவதையும் வாசிக்கவும்.

லாசர் அந்த வார்த்தையை மனதில் விசுவாசித்தபடியே மரித்துப் போனான்.
ஆனால் அவனை விசுவாசம் மரித்துப் போகவில்லை. கிட்டத்தட்ட இயேசு கிறிஸ்து தகவல் கேட்ட நாள் முதல் அவனை அடக்கம் பண்ணின நாள் வரை ஒரு வாரம் கழித்துதான் வந்தார். 
என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான் என்ற வார்த்தை அங்கே நிறைவேறியது. 
மரித்து போன லாசரை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உயிரோடு கூட எழுப்பினார்.
இதுதான் விசுவாசம். 
இந்த விசுவாசம் தான் நமது கீழ்படிதலில் வெளிப்படுகிறது. 
கீழ்ப்படிதல் இல்லாமல் விசுவாசம் ஒரு நாளும் செயல்படாது. 
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். 
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன் 
சிலுவை ராஜா
தொடர்புக்கு 
9841711591
சென்னை குன்றத்தூர்.

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை