கரைய வேண்டிய பரிசுத்தம்

*கரைய வேண்டிய பரிசுத்தம்*

உப்பு பல விதமான அளவுகளில் நமக்கு கிடைக்கும். கல் உப்பு பெரிதா இருக்கும், தூள் உப்பு போடி போல இருக்கும். உப்பை திரவ உணவு பொருட்களில் சேர்க்கும் பொழுது அது முற்றிலுமாக கரைந்து அந்த உணவுப் பொருளை மேன்மைப்படுத்தி சுவையுட்டுகின்றது. ஒருவேளை இந்த உப்பு கரைய மறுத்திருந்தால் அந்த உணவுப் பொருள் தனது நிறைவான சுவையை அடைந்திருக்காது. அதே போல நாமும் நமது உப்பாகிய பரிசுத்தத்தை, பிறரது வாழ்வில் கரையச்செய்து அவர்களுடைய வாழ்வை சுவையேற்ற கடமைப்பட்டிருகின்றோம். அருள்நாதர் இயேசு கிறிஸ்து சொல்கின்றார், *நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள் (மத்தேயு 5:13). நீங்கள் பூமியில் சுவையின்றி வாழும் மக்களின் வாழ்வில் கரைய வேண்டிய உப்பாக இருகின்றீர்கள்.

பரிசுத்த பவுல் இப்படியாய் கொரிந்து பட்டணத்து சபை விசுவாசிகளுக்கு எழுதுகின்றார், *பலவீனரை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப்போலானேன்; எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன்* (1 கொரிந்தியர் 9:22). பவுல் எல்லோருடைய வாழ்விலும் உப்பை போல கரைந்து கிறிஸ்த்துவின் சுவையை வெளிப்படுத்தியவர். புலமை வாய்ந்த அறிஞர்களிடமும் சாதாரண கூடாரத் தொழிலாளிகளிடமும் எந்தத் தயக்கமும் இல்லாமல் உப்பாக கரைந்தார். ரோமர்கள், கிரேக்கர்கள், யூதர்கள் என அனைத்து நாட்டு மக்களுடனும் உப்பை போல கரைந்து கிறிஸ்த்துவின் அன்பை வெளிப்படுத்தினார் (அப்போஸ்தலர் 20:21).

நாமும் இன்றைக்கு நம்மை சுற்றியுள்ள மக்களுக்கு, *கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்* (சங்கீதம் 34:8) என்று சொல்ல கடமை பட்டிருக்கின்றோம். கிறிஸ்த்துவின் அன்பை ருசித்து பார்த்திருக்கிற நாம், அவரை அறியாத மக்களுக்கு, அவர் நல்லவர், பாவங்களை மன்னிக்கிறவர், உலகம் கொடுக்கக்கூடாத சமாதானததை கொடுக்கிறவர், நம்மை ஆசீர்வதிப்பவர், நம்முடைய பரிகாரி என்று சொல்லி பின்பதாக நமது பரிசுத்தத்தை அவர்களது வாழ்வில் கரையச் செய்ய வேண்டும்.

உப்பானது கரைந்தால் மட்டுமே அது படைக்கப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றும். அதேபோல பரிசுத்தராம் இயேசுவால் நாம் பெற்றுக்கொண்ட பரிசுத்தமானது பிறருடைய வாழ்வில் கரைய வேண்டும். தேவனுக்கு ஏற்ற பரிசுத்தம் உங்களிடத்தில் இருக்கும் பொழுது அநேகர் உங்களிடம் வந்து அவர்களுடைய குறைகளை சொல்லி உங்கள் மூலமாய் விடுத்தலை பெறுவார்கள். பிறருக்கு விடுதலை கொடுக்க வேண்டிய கிறிஸ்த்தவராகிய நீங்கள் விடுதலையின்றி தவிக்கின்றீர்களா. அதற்க்கு காரணம் பரிசுத்தம் இல்லாததே.

ஒருவேளை இதை வாசிக்கின்ற நீங்கள் பரிசுத்தம் இல்லாமல் சிறிய பாவங்களை செய்து வந்தால் உடனடியாக இயேசு இரத்தத்தால் கழுவப்பட்டு பரிசுத்தமாகுங்கள். என்னென்றால் உங்கள் மூலமாய் அநேகர் பரிசுத்த வழியில் நடந்து பரிசுத்தராம் இயேசுவை சந்திக்க போகின்றார்கள். இந்த சிறிய ஜெபத்தை செய்து உங்களுக்கான பரிசுத்தத்தை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள்.

ஜெபம்: எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் அன்பின் தகப்பனாம் இயேசுவே, கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள் என்று அநேகருக்கு உமது அன்பின் சுவையை அறிவிக்க வேண்டிய நான், எனது பலவீனத்தினால் பாவம் செய்துவிட்டேன். என்னை மன்னித்து பரிசுத்தமாக்கும். நான் அநேகருடைய வாழ்வில் கரைந்து சுவைதருவேன். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கின்றேன் நல்ல பிதாவே. ஆமேன்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்
கிறிஸ்துவின் பணியில் 
சகோதரன் 
சிலுவை ராஜா 
தொடர்புக்கு 
9841711591.

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை