கழுவப்பட்ட பன்றி

*கழுவப்பட்ட சில 🐷 பன்றிகள்.*

(2 பேதுரு 2:22)
...... கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது என்று சொல்லப்பட்ட மெய்யான பழமொழியின்படியே அவர்களுக்குச் சம்பவித்தது. சில கிறிஸ்தவர்களுக்கு.

சீனிகிழங்கை ருசி பார்த்த பன்னி செவி அறுத்தாலும் நிற்காது.......

தாத்தாவுக்கு தோட்டம் உண்டு
தோட்டம் சுற்றி வேலி உண்டு
அவருக்கு அறிவு அதிகம் உண்டு
எந்த பருவத்தில் எதை பயிறிட என்று.... அவருக்கு அது நன்று....

பருவம் ஒன்றில் சீனி கிழங்கை
பயிரிட்டு.... அதற்கு நீர்விட்டு
கொஞ்சம் நாளில் பச்சை பசுமையாக இலைதாள்கள் வளர
அப்பப்பா பார்க்கவே கண்ணுக்கு குளிர்ச்சி.... அதுவும் மாலை ஐந்தாறு மணிக்கு மாலை தென்றல் மெதுவாக பறை அடிக்க அதின் இலைகள் அசைந்தாடும் காட்சி.... உள்ளத்தின் மாட்சி....

ஆஹா இந்த வருடம்....
மகசூல் அதிகம் கிடைக்கும் ன்னு
காலையில மகிழ்ச்சியோடு போன தாத்தா... அதிர்ச்சியோடு நின்னாரு.....

அவுன கயிறு பலத்தில் நிற்கும்
பின்னால் ஓட்டையோடு நஞ்ச நூல்களோடு பட்டன் இல்லாத அரைக்கால் சட்டையோடு மேல் சட்டை இல்லாமல் செம்மண் புழுதி நிறைந்த கால்களோடு கிணற்றில் குதித்து குளிக்க சென்ற நான்.....

தாத்தா தாத்தா என்னாச்சி
உங்க மனசுக்கு என்னாச்சி..
பேராண்டி பேராண்டி..
சீனி கிழங்கையெல்லாம் பன்னிகள் மேய்ஞ்சிறுச்சி
என் மனசெல்லாம் புண்ணாச்சி....

கருவமுள்ளு வேலி போட்டா பன்னியெல்லாம் வராது இல்லா தாத்தா.....
அடப்பைத்தியகார பயலே
கம்பிவேலி போட்டாலும்.... அட
கரண்டு வேலியே போட்டாலும்
செத்து கிடைக்குமே தவிர
சீனிகிழங்கை ருசி பார்த்த பன்னி செவி அறுத்தாலும் நிற்காது டா பேராண்டி இது உன் தாத்தா சிவனாண்டியின் அனுபவம்.......
சில கிறிஸ்தவ பன்றிகளும் செத்துப் போகுமே ஒழிய தன் தவறை திருத்திக் கொள்ளாது.

கிறிஸ்துவின் பணியில் 
சகோதரன் 
சிலுவை ராஜா 
தொடர்புக்கு 
9841711591.

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை