பரிசேயர்
பரிசேயர்.
பாபிலோன் சிறையிருப்பைத் தொடர்ந்து தேவனுடைய வசனத்திற்கு முதலிடம் கொடுத்து வாழ்கிற ஒரு சிறிய கூட்ட யூதர்கள் உருவானார்கள்.
ஹாசிடிம்(உண்மையுள்ள மக்கள்)என்ற பெயரில் இவர்கள் முதலில் அறியப்பட்டனர். இவர்களிலிருந்து தான் பரிசேயர் என்ற குழு உருவானது.
பரிசேயன் என்ற சொல்லுக்கு வேறுபட்டவன் என்று பொருள்.
இவர்கள் பாவத்திலிருந்தும், பொது மக்களிலிருந்தும், வேறுபட்டவர்களாக தேவனுடைய வசனத்திற்கு எழுத்தின் படியே கீழ்ப்படிவதற்காகத் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டவர்கள்.
பரிசேயர்களின் வாழ்க்கை முறைமைகளின் படி
சீகேம் பரிசேயர், இடறி விழுகின்ற பரிசேயர், இரத்தம் சிந்துகின்ற பரிசேயர், கவசம் அணிகின்ற பரிசேயர், விசாரப்படுகிற பரிசேயர், பயப்படுகிற பரிசேயர், அன்புக்கு கூறுகிற பரிசேயர்,
என்று ஏழு குழுக்களாக இவர்கள் பிரிக்கப்பட்டு இருந்தனர் என யூதர்களின் தல்மூதுகள் கூறுகின்றன.
ஆவியின் அழிவின்மை, தூதர்களின் ஆள்த்தன்மை, மரித்தோரின் உயிர்த்தெழுதல் ஆகியவற்றை இவர்கள் விசுவாசிக்கிறவர்களாக இருந்தனர். மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு உடையவர்களாக இவர்கள் விளங்கினர்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா.
9841711591.
Comments