இயேசு கிறிஸ்து சோதிக்கப்பட்டார்
இயேசு கிறிஸ்து சோதிக்கப்பட்டார்
(மத் 4:1-11)
சாத்தான் இயேசு கிறிஸ்துவைச் சோதித்தது, தேவனுடைய சித்தத்துக்கு அவர் பரிபூரணமாகக் கீழ்ப்படியும் நிலையிலிருந்து தவறச் செய்ய அவன் செய்த முயற்சியாகும்.
ஒவ்வொரு சோதனையிலும் சாத்தானுடைய விருப்பத்துக்கு இணங்காமல், தேவனுடைய வார்த்தையின் அதிகாரத்துக்கு தம்மை முற்றிலுமாக அர்ப்பணிப்பதைக் காண்கிறோம்.
(மத் 4:4,7,10;)
இயேசு கிறிஸ்துவின் சோதனைகளிலிருந்து நாம் கற்றுக் கொள்வது என்ன ?
1) சாத்தான் நமது மாபெரும் எதிரி. கிறிஸ்தவர்களாகிய நாம் காண முடியாத, ஆனால் பிசாசின் உண்மையான சக்திகளோடு போராட்டம் நடத்த வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம் என்பதை உணர்ந்தவர்களாக இருக்க வேண்டும். (எபே 6:12)
2) பரிசுத்த ஆவி இல்லாமலும், கர்த்தருடைய வார்த்தையை சரியாக எடுத்துப் பயன்படுத்தாமலும் இருந்தால், கிறிஸ்தவன் பாவத்தையும், சாத்தானையும் ஜெயிக்க முடியாது.
சோதனை நேரங்களில் கர்த்தருடைய வார்த்தைகளை நாம் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை போதிக்கும் சில ஆலோசனைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
அ) சாத்தான் உங்களிடத்தில் வைக்கக்கூடிய எவ்விதமான கோரிக்கையையும் முறியடிக்கத் தேவையான வல்லமை, கர்த்தருடைய வார்த்தைகளிலிருந்து உங்களுக்குக் கிடைக்கும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
(யோவா 15:3,7;).
ஆ) உங்களுடைய இருதயத்திலும், சிந்தையிலும், கர்த்தருடைய வார்த்தைகளை மனப்பாடம் பண்ணி, இருத்தி வையுங்கள்.
(யாக் 1:21)
இ) நீங்கள் மனப்பாடம் செய்துள்ள வேத வசனங்களை இரவும் பகலும் தியானம் செய்யுங்கள்.
(உபா 6:6; சங் 1:2; 119:47-48; குறிப்புகளை வாசியுங்கள்)
ஈ) உங்களுக்குச் சோதனை வரும்போது சம்பந்தப்பட்ட வேத வசனங்களை-- நீங்கள் மனப்பாடம் செய்திருப்பவைகளை உங்களுக்கும் ஆண்டவருக்கும் கேட்கும் படி சொல்லுங்கள்.
(மத் 4:4,7,10;)
உ) கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிய பரிசுத்த ஆவியானவர் உங்கள் உள்ளத்தில் பேசும்போது அதை அறிந்து கொண்டு கீழ்ப் படியுங்கள்.
(ரோம 8:12-14; கலா 5:18).
ஊ) இந்த எல்லாப் பணிகளையும் ஜெபத்தோடு பின்பற்றுங்கள்.
(எபே 6:18).
சோதனைகளை ஜெயிக்கப் பயன்படும், மனப்பாடம் செய்ய வேண்டிய வேத வசனங்கள்: பொதுவானவை.
(ரோமர் 6,8; ஆம் அதிகாரம்,)
குறிப்பாகவுள்ள பகுதி:
விபசாரம் போன்ற ஒழுக்கக் கேட்டைப் பற்றியது
(ரோம 13:14),
பொய் சொல்லுதல்
(யோவா 8:44;கொலோ 3:9),
வீண் பேச்சு பேசுதல்
(யாக் 4:11),
பெற்றோருக்கு கீழ்ப்படியாம லிருத்தல்
(எபி 13:17),
சோர்வு
(கலா 6:9)
எதிர்காலத்தைப் பற்றிய பயம்
(2தீமோ 1:7)
மாம்ச இச்சை
(மத் 5:18; 2தீமோ 2:22)
பழிவாங்கும் ஆசை
(மத் 6:15)
கர்த்தருடைய வார்த்தையை அசட்டை செய்தல்
(மத் 4:4)
பண நெருக்கடியால் கவலை
(மத் 6:24-34; பிலி 4:6).
இயேசு கிறிஸ்துவின் சோதனையில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பகுதிகளை வேத வசனத்தைக் கொண்டு தெளிவாக வாசியுங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். ஆமென்
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா
தொடர்புக்கு
98 41 711 591.
Comments