இளமை
*இளமை தவறான பலவற்றை நம்புகிறது. முதுமை சரியான பலவற்றை சந்தேகிக்கிறது.*
*ஒருமுறை நாம் ஒருவரை இழந்தால், அதே நபர் அதே போல் மீண்டும் நம்மிடம் திரும்பி வருவதில்லை. அந்த இழப்பு அவர்களுடைய மோசமான அல்லது சிறந்த பதிப்பாக இருக்கலாம்.*
*யாரை பாவம் என்று நினைத்தோமோ அவர்கள் தான் நமக்கு நல்ல பாடங்களை கற்றுத் தந்து விடுகின்றனர்.*
*வாழ்க்கையில் சிலரை விலக்கி வைப்பதும் சிலரிடமிருந்து விலகி இருப்பதும் நல்லது. அவ்வாறு செய்வது நம் சுயநலத்துக்காக அல்ல,நம் தன்மானத்திற்காக.*
*படிக்கத் தெரியாதவர் கையில் இருக்கும் புத்தகமும் ரசிக்கத் தெரியாதவர் கையில் இருக்கும் வாழ்க்கையும் வீணாகி தான் விடுகிறது.*
*மனிதனாய் பிறந்து மனிதநேயம் இல்லாமல் வாழ்ந்து மடிந்து என்ன பயன். மனிதனாய் பிறந்தோம், மனிதனை மனிதத்துடன் மதித்து மனிதனாய் நடப்போம்.*
*உங்களைப் பற்றிய பிறரது கருத்து அவர்களின் எண்ணம். உங்களுடைய பிரச்சனை அல்ல. இதயம் தூய்மையாகவும் எளிமையாகவும் இருக்கின்ற வரை, சரியான பதிலையே எப்போதும் அளிக்கும்.*
*யாருக்கும் எந்த தீங்கும் விளைவிக்காமல், இயல்பான முறையில் வாழ்க்கையை வெளிப்படுத்தவும். உடலும் உயிரும் சொந்தமில்லை.*
*உற்றார் உறவினர் சொந்தமில்லை. ஓடி ஓடி உழைத்த பணமும் சொந்தமில்லை. ஆசைப்பட்டு வாங்கிய பொருட்களும் கூட சொந்தம் இல்லை. ஆனால் வாழும் நாட்களில் நீங்கள் செய்த பாவமும் புண்ணியம் தான் உங்களுக்கு சொந்தமானது.*
Comments