2) ராஜ்யத்தின் உவமைகள்(பொல்லாங்கன்)
பொல்லாங்கன் வந்து இருதயத்தில் விதைக்கப்பட்டதை பறித்துக் கொள்ளுகிறான்.
(மத் 13:19;மாற் 4:15).
*நல்ல விதையும், களைகளும்.*
(மத் 13:24,25)
கோதுமைப் பயிரும், களைகளும் பற்றிய உவமையில் தேவனுடைய வசனத்தை மக்கள் மத்தியில் விதைக்கிறவர்கள் விதைக்கும் போதே, சாத்தானும் களைகளை,
(தவறான போதனைகளை) அவர்கள் மத்தியில் விதைப்பான்.
வயல் என்பது இந்த உலகத்திற்கு ஒப்பிடப்பட்டுள்ளது.
நல்ல விதை என்பது தேவனுடைய இராஜ்ஜியத்தில் இருக்கும் உத்தம விசுவாசிகள்.
(மத் 13:38)
1) நற்செய்தியும், உண்மையான விசுவாசிகளும் உலகம் முழுவதும் நாட்டப் படும்போது
(மத் 13:38) சாத்தானும் தன்னைப் பின்பற்றுகிற பொல்லாங்கனுடைய புத்திரரை (மத் 13:38) தேவனுடைய மக்கள் மத்தியில் தேவனுடைய சத்தியத்திற்கு எதிராக எதிர்த்துக் கிரியை நடப்பிக்கும்படி நாட்டி வைப்பான். (மத் 13:25,38,39).
2) சாத்தானின் தூதுவர்களின் முக்கிய வேலை, பரலோக இராஜ்ஜியத்தில், தேவனுடைய வார்த்தையின் அதிகாரத்தைக் இரகசியமாக கெடுப்பதாகும்.
(ஆதி 3:4) மேலும், அநீதி, அக்கிரமம், தீமைகள், ஆகியவற்றை ஊக்குவித்து, தவறான உபதேசங்களை பரப்புவதிலும், அவனுடைய செயல்களாகும்.
(அப் 20:29,30; 2தெச 2:7,12)
பின்னால் இயேசு கிறிஸ்து திருச்சபையில் தமது மக்கள் மத்தியில் உண்மையில் கள்ள போதகர்களான, ஆனால்,
வெளிப்படையான அறிக்கை செய்யும் சில கிறிஸ்தவர்கள் மூலமாக உண்டாகும் மாபெரும் ஏமாற்று, வஞ்சகம், ஆகியவற்றை குறித்துப் பேசுகிறார்.(மத் 24:11).
3) தேவனுடைய மக்கள் மத்தியிலேயே வாழ்ந்து வரும் சாத்தானுடைய மக்களின் ஆதிக்க நிலைமையானது,
கடைசி காலத்தில் தேவன் அக்கிரமக்காரர்கள் அனைவரையும் இறுதியாக முற்றிலுமாக, அழிக்கும்போது
முடிவடையும்.
(மத் 13:38-43) விசுவாசிகளும், அவிவிசுவாசிகளும் கலந்து காணப்படும் நிலைமையைக் காட்டும் மற்ற உவமைகள்,
(மத் 22:11-14; 25:1-30; லூக் 18:10-14;)
தொடர்ந்து வாசியுங்கள்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா
தொடர்புக்கு
98 41 711 591.
Comments