ஒரு கன்னிகை
ஒரு கன்னிகை கற்பதியாகி... ஒரு குமாரனைப் பெறுவாள்.
(மத் 1:23)
மத்தேயுவும், லூக்காவும் இயேசு கிறிஸ்து பரிசுத்த ஆவினால் கன்னி மரியாளிடத்தில் உற்பத்தியாகி, மானிட தகப்பன் ஒருவரின் குறுக்கீடுல்லாமல் பிறந்தார் என்று சந்தேகத்துக்கிடமில்லாமல் கூறுகின்றனர்.
(மத்1:18;லூக் 1:34,35) பல வருடங்களாக முற்போக்கு இறையியலாளர்கள் இந்த கன்னிப்பிறப்புக்
கொள்கையை
எதிர்க்கின்றனர்.
நமது பரிசுத்த வேதாகமத்தில் கிறிஸ்து பிறப்பதற்கு 700 ஆண்டுகளுக்கு முன்னரே ஏசையா தீர்க்கதரிசி "ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்.
அவருக்கு, 'இம்மானுயேல்'என்று பெயரிடுவார்கள் என்று வாக்குத்தத்தமாகக்
கூறியுள்ளான். 'இம்மானுவேல்'என்பதற்கு
'தேவன் நம்மோடிருக்கிறார்"
என்று அர்த்தமாம்.(ஏசா 7:14)
இந்த தீர்க்க தரிசனம் இயேசுவின் கன்னிப் பிறப்பை உறுதி செய்கிறது.
1)மத் 1:23 ல் உள்ள 'கன்னிகை'என்ற சொல், கிரேக்கச் சொல் 'பார்தெனாஸ்' என்பதின் சரியான மொழிபெயர்ப்பாகும். இது கிரேக்க (செப்து வஜிந்து) பரிசுத்த வேதாகமத்தில் ஏசா 7:14 ல் காணப்படுகிறது.
'கன்னிகை'என்பதற்குரிய எபிரேயச் சொல்லை ('அல்மா') ஏசாயா பயன்படுத்தும் போது அதன் பொருள் "திருமண வயதடைந்த ஒரு கன்னிகைப் பெண்" என்பதாகும். இது கன்னித்தன்மை என்னும் பொருள் தவிர, பழைய ஏற்பாட்டில் வேறு எந்த அர்த்தத்திலும் பயன்படுத்தப்படவில்லை.
(ஆதி 24:43; உண் 1:3; 6:8) எனவே, பழைய ஏற்பாட்டில் ஏசாயாவும், புதிய ஏற்பாட்டில் மத்தேயுவும், லூக்காவும், இயேசுவின் தாயின் கன்னிமைத் தன்மையைக் குறித்து உறுதியாக எழுதியுள்ளனர்.
2) ஒரு கன்னிகையிடம் இயேசு பிறந்ததன் முக்கியத்துவம் தேவைக்கு மேலாக வற்புறுத்தப்பட வேண்டியதில்லை.
நம்முடைய பாவங்களுக்காக பாவநிவர்த்தி செய்யப்பட்டு கிரயம் செலுத்தி நமக்கு இரட்சிப்பைச் சம்பாதித்துத் தர வேண்டுமானால், மீட்பரான அவர் மானிட உருவில் வெளிப்பட வேண்டும். முழுவதும் மனிதனாயிருக்கவேண்டும், பாவமற்றவராயிருக்க வேண்டும், முற்றிலும் தெய்வத்தன்மை உள்ளவராய் இருக்க வேண்டும்.
(எபி 7:25,26)
இயேசு ஒரு கன்னிகையிடம் பிறந்தது இந்த மூன்று தேவைகளையும் பூர்த்தி செய்தது.
அ) இயேசு கிறிஸ்து ஒரு மானிடனாக அவதரிக்க வேண்டுமானால் அவர் ஒரு பெண்ணின் வயிற்றிலிருந்து பிறக்க வேண்டும்.
ஆ) அவர் முற்றிலும் பரிசுத்தமுள்ளவராயிருக்க வேண்டுமானால் அவர் பரிசுத்த ஆவியினால் உற்பத்தியாக வேண்டும்.
இ) அவர் பரிசுத்தமுள்ளவராயிருக்க வேண்டுமானால் தேவன் அவருடைய பிதாவாக இருக்க வேண்டும்.
அதன் பலனாக அவருடைய கருவுறுதலானது இயற்கையான முறையல்ல, ஆனால் இயற்கைச் சக்திக்கு அப்பாற்பட்ட தெய்வீக முறையில் நடந்தது. பிறக்கப் போகும் பரிசுத்தமுள்ள குழந்தை '"தேவகுமாரன்" என்று அழைக்கப்படும்.
(லூக் 1:35) இயேசு கிறிஸ்து இந்த உலகில் வெளிப்பட்டிருந்த போது, அவர் ஒரு தெய்வீக மனிதனாயிருந்தார். அவரிடம் இரண்டு தன்மைகள் இருந்தன.
1) தெய்வீகத்தன்மை,
2) பாவமற்ற மானிடத் தன்மை.
3) இயேசு நம்மைப் போல ஒரு சாதாரண மனிதனாக வாழ்ந்து துன்பங்களை அனுபவித்ததால், நம்முடைய பெலவீனங்களைக் கண்டு மனதுருகிறார்.
(எபி 4:15,16).
அவர் பரிசுத்தமுள்ள தேவகுமாரனானபடியால், நம்மை பாவ அடிமைத்தனத்திலிருந்தும், சாத்தானின் வல்லமையிலிருந்தும் மீட்க வல்லமை உண்டு.
(அப் 26:18;கொலோ 2:15; எபி 2:14;7:25)அவரிடத்தில் தெய்வீகத் தன்மையும், மானிடத்தன்மையும், இருப்பதால் அவர் ஒவ்வொருவருடைய பாவத்துக்கும் நிவாரண பலியாகவும் அவரே நமக்காகப் பிதாவிடம் பரிந்து பேசும் மகா பிரதான ஆசாரியராகவும் இருக்கிற தகுதியை பெற்றிருக்கிறார்.
(எபி 2:9-18; 5:1-9;7:24-28;10:4-12).
4) இயேசு கிறிஸ்து பிறப்பது வரை யோசேப்பு மரியாளை அறியவில்லை.
(மத் 1:25)
இயேசு பிறந்த பிறகு திருமணம் ஆன கணவனும் மனைவியும் சேர்ந்து வாழ்வது போல் யோசேப்பும் மரியாளும் கணவன் மனைவியாக வாழ தொடங்கினார்கள்.
இயேசுவுக்கு அநேக சகோதரர்களும், சகோதரிகளும் இருந்தார்கள் என்று அறிகிறோம்.
(மத் 12:46,47: மாற் 3:31,32; 6:3;
லூக் 8:19,20).
இது உறுதியான ஒரு சான்று
நாம் கற்று கொண்டவைகளில் உறுதியாக இருப்போம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக ஆமென். கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா
தொடர்புக்கு
98 41 7 11 5 9 1.
Comments