சபையை கட்டுவேன்
சபையை கட்டுவேன்
மத்தேயு 16:18
*"மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை."*
கிரேக்க மொழியில்'எக்ளீஷியா ' என்றால் திருச்சபை என்று பொருள்.இது தனியாக அழைக்கப்பட்ட ஒரு மக்கள் கூட்டத்தின் அமைப்பு.புதிய ஏற்பாட்டில், திருச்சபை என்பது இயேசு கிறிஸ்துவுக்குள் அமைந்த தேவனுடைய மக்கள்; இவர்கள் தேவனுடைய இராஜ்யத்தின் குடிமக்கள் (எபே 2:19). தேவனைத் தொழுது கொள்ளுவதற்காக இவர்கள் ஒரு இடத்தில் கூடிவருவார்கள்.'சபை' என்னும் சொல் உள்ளூர் திருச்சபையைக் குறிக்கலாம்.
(மத் 18:17;அப் 15:4) அல்லது அகில உலக திருச்சபையையும் குறிக்கலாம். (மத் 16:18;அப் 20:28;எபே 2:21,22).
1) திருச்சபையானது தேவனுடைய மக்கள் கூட்டம் என்று கூறப்பட்டுள்ளது. (1கொரி 1:2; 10:32; 1பேது 2:4-10) இவர்கள் மீட்கப்பட்ட தேவ ஜனம், கிறிஸ்துவின் மரணத்தினால் இவர்கள் ஆதாயம் பண்ணப்பட்ட விசுவாசிகள். (1பேது 1:18,19) இவர்கள் நாடோடிகள் போன்றவர்கள். இவர்கள் இவ்வுலகத்திற்குரியவர்களல்லா படியால் பூமியில் யாத்திரை செய்யும் மக்களாயிருக்கிறார்கள்.(எபி 13:12-14)
*இவர்களுடைய முதல் பணி தேவனோடு ஒரு உயிருள்ள தனிப்பட்ட உறவு கொண்ட ஒரு சமுதாயமாக நிலைத்திருக்க வேண்டும்.*
(1பேதுரு 2:5; எபி 11:6)
2) திருச்சபையானது தேவனுடைய ராஜ்யத்திற்கென்று உலகத்திலிருந்து அழைக்கப்பட்ட (கிரேக்க மொழியில் எக்கலியோ)
*ஒரு மக்கள் கூட்டம். இந்த உலகத்திலிருந்து பிரிக்கப்படுதல், திருச்சபையின் இயல்பான தன்மை, இதன் பலனாக ஆண்டவரே அவர்களுடைய தேவனாகவும், தகப்பனாகவும் இருக்கிறார்.(2 கொரி 6:16-18)*
3) திருச்சபையே தேவனுடைய ஆலயமாகவும், பரிசுத்த ஆவியானவருடைய ஆலயமாகவும் உள்ளது. (1கொரி 3:16; 2கொரி 6:14; முதல் 7:1 வரை எபே 2:11-22 1பேது 2:4-10) திருச்சபையைக் குறித்த இந்த உண்மையானது, உலகப் பிரகாரமான ஒழுக்கக் கேடுகளிலிருந்தும், அநீதிகளிலிருந்தும், தேவனுடைய மக்கள் பிரிந்து வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
4) திருச்சபையானது கிறிஸ்துவின் சரீரம். (1கொரி 6:15,16; 10:16-17;12:12-27)
*எந்த ஒரு உண்மையான திருச்சபையிலும் அதன் உறுப்பினர்கள் கிறிஸ்துவோடு நெருங்கிய ஐக்கியம் கொள்ளாமலிருந்தால் அது நிலைத்திருப்பதில்லை என்பதை இந்த உவமை காட்டுகிறது.*
இந்த திருச்சபையாம் சரீரத்தின் தலை இயேசு கிறிஸ்துவே (எபே 1:22; 4:15; 5:23;கொலே 1:18).
5) திருச்சபையானது கிறிஸ்துவின் மணவாட்டி.
(2கொரி 11:2;எபே 5:22-27;வெளி 19:7-9) இந்த கற்பனையான திருமணம் திருச்சபையானது, மணவாளனான கிறிஸ்துவுக்கு எவ்வளவு பக்தியும், உண்மையும் உள்ளதாயிருக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது. கிறிஸ்தவும் திருச்சபையிடம் அன்பு செலுத்துகிறார், நெருங்கிய உறவு கொண்டுள்ளார்.
6) திருச்சபையானது ஒரு ஆவிக்குரிய கூட்டமைப்பு.
(கிரேக்க மொழியில் இதை
'கோய்னோனியா'என்பார்கள்). (2கொரி 13:14 பிலி 2:1). இதில் ஆவியானவர் மனிதரின் உள்ளத்தினுள் வாசம் செய்தலும் (லூக் 11:13;யோவா 7:37-39; 20:22;). ஆவியின் ஒருமைப்பாடும் (எபே 4:4) ஆவியில் ஞானஸ்நானம் பெறுதல் (அப் 1:5; 2:4; 8:14-17; 10:44; 19:1,-7) அடங்கியுள்ளன. ஒருவருக்கொருவர் அன்பும், கரிசனையும் கொண்டவர்களாய்ப் பழகுதல்
இந்த ஐக்கியத்தின் சிறப்பம்சமாகும் (யோவா 13:34,35).
7 திருச்சபையானது ஆவிக்குரிய ஊழியம் செய்யப்படும் இடம்.
(கிரேக்க மொழியில் இதை
'டயக்கோனியா'என்பார்கள்).
இது கிருபையின் வரங்களின் மூலம் செயல்படுகிறது.
(கிரேக்க மொழியில் 'கரிஸ்மற்றா') இந்த கிருபையின் வரங்கள் பரிசுத்த ஆவியின் மூலம் கிடைக்கிறது. (ரோம 12:6; 1கொரி 1:7; 12:4-11, 28,-31;எபே 4:13).
8) ஆவிக்குரிய போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு சேனையே திருச்சபையாகும்.
இது ஆவியின் வல்லமை, ஆவியின் பட்டயம் ஆகியவற்றைக் கொண்டு யுத்தம் செய்கிறது.(எபே 6:17) திருச்சபையானது சாத்தானுக்கு எதிராகவும், பாவத்துக்கு எதிராகவும் ஒரு ஆவி கூறிய போராட்டத்தில் இருக்கிறது. திருச்சபையில் நிறைந்துள்ள பரிசுத்த ஆவியானவர், கர்த்தருடைய வசனம் என்னும் ஆவியின் பட்டயத்தை வீசும் வீரனைப் போல் காட்சியளிக்கிறார். அவர் மக்களை விடுவித்து, இந்த அந்தகார லோகத்தின் ஒவ்வொரு வல்லமையும் மேற்கொண்டு ஜெயம் கொள்ளுகிறார்.(அப் 26:18;எபே 6:10-18;எபி 4:12; வெளி 1;16; 2:16; 19:15,21).
9) திருச்சபையானது சத்தியத்தின் தூணாகவும் அடித்தளமாககவும் இருக்கிறது.(1தீமோ 3:15)
ஒரு கூட்டத்தை அதன் அஸ்தி பாரம் தாங்குவது போல, திருச்சபையானது சத்தியத்தை தாங்கி நிற்கிறது. இது சத்தியத்தை உயர்த்தி பிடித்துப் பாதுகாக்க வேண்டும். வேத புரட்டர்கள், கள்ளப் போதகர்கள், ஆகியோரிடம் இருந்து சத்தியத்தைப் பாதுகாக்க வேண்டும்.(பிலி 1:16; யூதா 3)
10) எதிர்கால நம்பிக்கையோடுள்ள ஒரு மக்கள் கூட்டமே திருச்சபை. இந்த நம்பிக்கை கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை மையமாகக் கொண்டுள்ளது. (யோவா 14:3; 1தீமோ 6:14; 2தீமோ4:8; தீத் 2:13; எபி 9:28).
11) திருச்சபையானது பார்க்கக் கூடியதும், பார்க்கக் கூடாதுமாயிருக்கிறது.
*அ) உண்மையான விசுவாசிகள் கிறிஸ்துவின் மேல் உள்ள விசுவாசத்துடன் ஐக்கியப்பட்டு ஒற்றுமையாய் வாழுதல் பார்க்க முடியாத திருச்சபை ஆகும்.*
*ஆ) விசுவாசமும், உண்மையும் உள்ள வெற்றி வாழ்க்கை வாழும் தேவனுடைய மக்கள் நிறைந்த உள்ளூர் திருச்சபைகளே 'பார்க்கக்கூடிய' திருச்சபை ஆகும்.*
(வெளி 2:11,17,26,; 2:7) அதே வேளையில் அவர்களோடு கூட தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் போலி கிறிஸ்தவர்கள் (வெளி 2:2) "பாவத்தில் வீழ்ச்சியடைந்தவர்கள்".(வெளி 2:5), ஆவியில் செத்தவர்கள் (வெளி 3:1), குளிருமின்றி அனலுமின்றி இருப்பவர்கள் (வெளி 3:16;மத் 13:24; அப் 12:5;புதிய ஏற்பாட்டு திருச்சபையின் முக்கியமான தன்மைகளை குறித்தது)
ஆகியோரும் நாம் பார்க்கக்கூடிய திருச்சபையில் உள்ளடங்குவார்கள்.
ஆம் அன்பு தேவனுடைய ஜனமே வேதத்தின் துணையோடு வாசியுங்கள் அப்போதுதான் இது புரியும்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென்.
கிறிஸ்துவின் பணியில் சகோதரன்: சிலுவை ராஜா
தொடர்புக்கு: 9841711591
Comments