அவர் அவனுக்கு போதிப்பார்
அவர் அவனக்குப் போதிப்பார்*
(சங் 25:12)
உண்மையான விசுவாசியை தேவன் தமது ஞானத்தில் எவ்வாறு நடத்துகிறார் என்பதை இந்த சங்கீதத்தின் முக்கியமான மையக் கருத்தாகும்.
பின்வரும் சத்தியத்தை கவனிக்கவும்.:
1) ஒவ்வொரு விசுவாசிக்கும் தேவன் ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார்.
ஆதாமுக்காக அவர் ஒரு திட்டத்தை வைத்திருந்தார்.
(ஆதி 1:28; 2:18-25;)
ஆபிரகாம் (ஆதி 12:1-3)
யோசேப்பு (ஆதி 45:4-9)
தமது ஜனமாகிய இஸ்ரவேலருக்கு
(ஆதி 50:24;யாத் 6:6-8);
அவர் ஒரு திட்டம் வைத்திருந்தார். இயேசுவுக்காகவும்
(லூக் 18:31) மற்றும் பவுலுக்காகவும்
(அப் 21:10-14; 22:14-15; 26:16-19;
21:14); அவர் திட்டம் வைத்திருந்தார். தம்முடைய பிள்ளைகள் ஒவ்வொருவருக்காகவும் நிச்சயமான திட்டத்தை வைத்திருக்கிறார்.
(1கொரி 12; எபே 1:10; 2:10; 3:11; 4:11-13).
2) தேவனுடைய திட்டங்கள் அசாதாரணமான வழிகளில் அதாவது சொப்பனங்கள், தரிசனங்கள் மற்றும் தீர்க்கதரிசனம் இவற்றினால் நமக்கு தெரிவிக்கப்பட கூடும்.
(அப் 2:17; 9:12; 10:3; 13:2; 1கொரி 14:1; அப் 21:10) இருந்தபோதிலும், நம்மை அவர் வழிநடத்தும் விதமும், நமக்கு ஞானத்தை அருளும் விதமும் வழக்கமாக பரிசுத்த வேத வாக்கியங்களின் மூலமும் ( 2தீமோ 3:16) அந்த பரிசுத்த ஆவியானவர் நமது இருதயங்களில் வாசம் பண்ணுவதன் மூலமுமே
(அப் 8:29; 10:19; 13:2; 15:28; 16:6;
1யோவா 2:20,27) இருக்கும்.
3) விசுவாசிகள் தேவனுடையப் வார்த்தையை புறக்கணிப்பது அல்லது தவறுதலாக அதை வாசிப்பதும் கூட அவருடைய சித்தத்திற்கு மாறான முடிவெடுக்கச் செய்வதால் அதன் மூலம் தங்களுக்கான தேவனுடைய திட்டத்தை அவர்கள் இழந்து விடக்கூடும். வேதத்தில் காணப்படும் அடிப்படையான திட நம்பிக்கைகள், மனப்பான்மைகள், போதனைகள் ஆகியவை நமது வாழ்வில் ஆழமாகப் பதியாவிட்டால், நாம் வழிதப்பி போவோம்.
4) நீதியானது தேவனுடைய வழி நடத்துதலில் அமைந்திருக்கிறது.
(சங் 25:21; ரோம 8:11-14), ஏனெனில் தேவன் நம்மை
"நீதியின் பாதைகளில் நடத்துகிறார். (சங் 23:3).
தேவன் தம்முடைய திட்டத்தை நமக்கு தெரியப்படுத்தி அதை செயல்படுத்தக்கூடிய ஆலோசனையும் ஞானத்தையும் நமக்கு தருகிறார்.
இவை அனைத்தும் தேவனுடைய வார்த்தையில் தான் இருக்கிறது. வார்த்தையை புறக்கணிக்கும் போது நாம் அதை இழந்து விடுகிறோம்.
ஆகையால் தேவனுடைய பிள்ளைகள் கவனம் உள்ளவர்களாயிருந்து, தேவனுடைய வசனத்தை கவனித்து அவருடைய ஞானத்தை நாம் பெற்றுக் கொண்டு தேவனுடைய திட்டத்தை சரியாக செய்து முடித்து, தேவன் நமக்காக ஆயத்தம் பண்ணினவைகளை பெற்றுக் கொள்ள தொடர்ந்து பிரயாசப்படுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
ஆமென்.
கிறிஸ்துவின் பணியில் சகோதரன்
சிலுவை ராஜா
தொடர்புக்கு
9841 71 1591.
Comments