வெளிப்படுத்தல் 14
வெளி 14ஆம் அதிகாரம்
சீயோன் மலையிலே ஆட்டுக்குட்டியானவரும் அவருடைய பரிசுத்தவான் களும் இருக்கிறார்கள் (வெளி 14:1-5). பாபிலோனின் அறிவை மூன்று தூதர்கள் ஒவ்வொன்றாக அறிவிக்கிறார்கள் (வெளி 14:6-13). அறுவடையை பற்றிய தரிசனம் (வெளி 14:14-20).
சீயோன் மலையின்மேல் ஆட்டுக்குட்டியானவரின் 1,44,000 பேரும் (வெளி 14:1-5)
பின்பு நான் பார்த்தபோது, இதோ, சீயோன் மலையின்மேல் ஆட்டுக்குட்டியானவரையும், அவரோடேகூட அவருடைய பிதாவின் நாமம் தங்கள் நெற்றிகளில் எழுதப்பட்டிருந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேரையும் நிற்கக்கண்டேன். வெளிப்படுத்தின விசேஷம் 14:1
அல்லாமலும், பெருவெள்ள இரைச்சல்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக்கேட்டேன், நான் கேட்ட சத்தம் சுரமண்டலக்காரர் தங்கள் சுரமண்டலங்களை வாசிக்கிற ஓசையைப்போலிருந்தது. வெளிப்படுத்தின விசேஷம் 14:2
அவர்கள் சிங்காசனத்திற்கு முன்பாகவும், நான்கு ஜீவன்களுக்கு முன்பாகவும், மூப்பர்களுக்கு முன்பாகவும் புதுப்பாட்டைப் பாடினார்கள், அந்தப் பாட்டு பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட இலட்சத்து நாற்பத்துநாலாயிரம்பேரேயல்லாமல் வேறொருவரும் கற்றுக்கொள்ளக்கூடாதிருந்தது. வெளிப்படுத்தின விசேஷம் 14:3
ஸ்திரீகளால் தங்களைக் கறைப்படுத்தாதவர்கள் இவர்களே, கற்புள்ளவர்கள் இவர்களே, ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே, இவர்கள் மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள். வெளிப்படுத்தின விசேஷம் 14:4
இவர்களுடைய வாயிலே கபடம் காணப்படவில்லை, இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்குமுன்பாக மாசில்லாதவர்களாயிருக்கிறார்கள். வெளிப்படுத்தின விசேஷம் 14:5
தம்மை விசுவாசிக்கிற யாவருக்கும் இயேசு கிறிஸ்துவே தலையாக இருக்கிறார். ஆட்டுக்குட்டியானவர் ஆகிய இயேசு கிறிஸ்து சீயோன் மலையின்மேல் நிற்கிறார். வெளிப்படுத்தின விசேஷம் 13வது அதிகாரம் பதினோராவது வசனத்தில் ஆட்டுக்குட்டிக்கு ஒப்பான ஒரு மிருகத்தை பற்றி எழுதப்பட்டிருக்கிறது அது மெய்யான ஆட்டுக்குட்டி அல்ல இயேசு கிறிஸ்து மட்டுமே மெய்யான ஆட்டுக்குட்டி ஆவார். சாத்தான் ஆட்டுக்குட்டியைப் போல வேஷம் தரித்துக் கொண்டு ஜனங்களை வஞ்சிக்கிறான். சாத்தான் ஒரு வலுசர்ப்பம் ஆவான் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே மெய்யான ஆட்டுக்குட்டி ஆவார்.
இயேசுக்கிறிஸ்து சீயோன் மலையின் மேல் நிற்கும் போது அவரோடு கூட ஒரு லட்சத்து 44 ஆயிரம் பேரும் நிற்கிறார்கள். இவர்கள் கர்த்தருடைய பரிசுத்தவான்கள் இயேசுகிறிஸ்துவினுடைய பிதாவின் நாமம் அவர்களுடைய நெற்றியில் எழுதப்பட்டு இருக்கிறது. இவர்கள் உபத்திரவங்கள் வழியாக வந்தவர்கள் இவர்களுக்கு வந்த உபத்திரவம் இவர்களை சேதப்படுத்த வில்லை என்பதை நாம் கவனித்துப் பார்க்க வேண்டும். ஆட்டுக்குட்டியானவர் ஆகிய இயேசு கிறிஸ்துவோடு நிற்கிற இவர்கள் சிங்காசனத்திற்கு முன்பாகவும் நான்கு ஜீவன்களுக்கு முன்பாகவும் மூப்பர்களுக்கு முன்பாகவும் புது பாட்டை பாடினார்கள். அவர்கள் பாடுகிற சத்தம் பெருவெள்ளத்து இறைச்சல் போலவும் இடி முழக்கத்தின் சத்தத்தை போலவும் இருக்கிறது. அந்த சத்தம் சுரமண்டலகாரர் தங்கள் சுர மண்டலங்களை வாசிப்பதைப் போல இருக்கிறது.
பரலோகத்தில் பரிசுத்தவான்கள் கர்த்தரைப் பாடித் துதிக்கிறார்கள். பூமியில் இருந்து ஏராளமான பரிசுத்தவான்கள் மீட்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனாலும் இந்தப் புது பாட்டை பூமியிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட லட்சத்து 44 ஆயிரம் பேர்களைத் தவிர மற்ற எவராலும் கற்றுக் கொள்ள முடியவில்லை.
இந்த லட்சத்து 44 ஆயிரம் பேரை பற்றி யோவான் எழுதுகிறார். அவர்கள் பரிசுத்தமும் கற்பும் உள்ளவர்கள். ஸ்திரீகளால் தங்களை கரை படுத்திக் கொள்ளவில்லை. இவர்களிடத்தில் மாம்ச பிரகாரமான விபச்சாரமோ அல்லது ஆவிக்குரிய விபச்சாரமோ காணப்படவில்லை. விபச்சாரத்தினால் தங்களை கரை படுத்திக் கொள்ளாமல் இருக்கிறார்கள்.
இவர்கள் ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அங்கே அவரை பின்பற்றுகிறார்கள். கர்த்தருக்கு உண்மையுள்ள ஊழியக்காரராய் இருக்கிறார்கள். கர்த்தரை பற்றும் விசுவாசத்தில் உறுதியாய் இருக்கிறார்கள்.
இவர்கள் மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவர்க்கும் முதற்பலனாக மீட்டு கொள்ளப்பட்டவர்கள். இப்படிப்பட்ட விசேஷித்த மகிமையும் கனமும் இந்த லட்சத்து 44 ஆயிரம் பேருக்கு இருக்கிறது. தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் இன்னும் ஏராளமான பரிசுத்தவான்கள் மீட்டு கொள்ளப்படுவார்கள். அனேகர் மீட்டுக்கொள்ள படுவதற்கு இவர்கள் முதல் பலனாக அதாவது அச்சாரமாக இருக்கிறார்கள்.
இந்த லட்சத்து 44 ஆயிரம் பேருடைய வாயில் கபடம் காணப்படவில்லை. இவர்கள் மெய்யான வார்த்தைகளை பேசினார்கள் இவர்களுடைய இருதயம் கர்த்தருக்கு முன்பாக செம்மையான தாக இருந்தது. தேவன் இவர்களை இலவசமாக மீட்டுக்கொண்டார் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக மாசில்லாதவர்களாய் இருக்கிறார்கள் கர்த்தருடைய கிருபை இவர்களுக்கு அதிகமாய் கிடைக்கிறது.
முதலாம் தூதன் வெளி 14:6-7
பின்பு, வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக்கண்டேன், அவன் பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து, வெளிப்படுத்தின விசேஷம் 14:6
மிகுந்த சத்தமிட்டு: தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள், அவர் நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் வேளை வந்தது: வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவரையே தொழுதுகொள்ளுங்கள் என்று கூறினான். வெளிப்படுத்தின விசேஷம் 14:7
பாபிலோனின் அழிவைப் பற்றி அறிவிப்பதற்கு வானத்திலிருந்து மூன்று தூதர்கள் அனுப்பப் படுகிறார்கள். அவர்களில் முதலாவது தூதன் வானத்தின் மத்தியில் பறந்து வருவதை யோவான் காண்கிறார். பாபிலோன் அழிவதற்கு முன்பாக தேவனுடைய சுவிசேஷம் அறிவிக்கப்படுகிறது. இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் நித்திய சுவிசேஷம் ஆகும் இயேசு கிறிஸ்துவின் நித்திய சுவிசேஷத்தை பிரசங்கம் பண்ணுவதற்கு தூதர்கள் தகுதி உள்ளவர்களாய் இருக்கிறார்கள். முழு உலக தாரும் நித்திய சுவிசேஷத்தை கவனித்து கேட்கவேண்டும். சுவிசேஷத்தில் சொல்லப்பட்டிருக்கும் சத்தியத்தைக் கேட்டு அதற்கு கீழ்ப்படிய வேண்டும்.
நித்திய சுவிசேஷம் பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜனகூட்டதுக்கும் சகல ஜாதிகளுக்கும் சகல கோத்திரத்தாருக்கும் சகல பாஷைக்காரருக்கும் அறிவிக்கப்படுகிறது. சுவிசேஷம் எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கிறது இயேசு கிறிஸ்து உலக இரட்சகராக இருக்கிறார்.
ஜனங்கள் தேவனுக்கு பயந்து அவரை மகிமைப்படுத்த வேண்டும். இதற்காகவே நித்திய சுவிசேஷம் ஜனங்கள் மத்தியில் பிரசங்கம் பண்ண படுகிறது. மனுஷர்கள் படைப்புகளை தொழுது கொள்ளாமல் படைத்தவரை தொழுது கொள்ளவேண்டும். கர்த்தராகிய தேவனே சர்வ சிருஷ்டிகராய் இருக்கிறார். வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் நீரூற்று களையும் சருவ சிருஷ்டிகரான தேவனே சிருஷ்டித்தார். மனு குலத்தார் எல்லோரும் படைப்புகளை தொழுது கொள்ளாமல் சகலவற்றையும் படைத்த தேவனையே தொழுது கொள்ள வேண்டும். தேவனை தொழுது கொள்ளாதவர்கள் மீது நியாயத்தீர்ப்பு வரும். தேவன் நியாயத்தீர்ப்பு கொடுக்கும் வேளை வந்தது என்பதை நித்திய சுவிசேஷம் அறிவிக்கிறது.
இரண்டாம் தூதன் வெளி 14:8
வேறொரு தூதன் பின்சென்று: பாபிலோன் மகா நகரம் விழுந்தது! விழுந்தது! தன் வேசித்தனமாகிய உக்கிரமான மதுவைச் சகல ஜாதிகளுக்கும் குடிக்கக் கொடுத்தாளே! என்றான். வெளிப்படுத்தின விசேஷம் 14:8
முதலாம் தூதனைத் தொடர்ந்து இரண்டாம் வருகிறான். பாபிலோனுக்கு வரும் அழிவை இரண்டாம் தூதன் அறிவிக்கிறான். பாபிலோன் மகாநகரம் என்பது ரோமப்பேரரசை குறிக்கிற வார்த்தையொன்று வேதபண்டிதர்கள் வியாக்கியானம் சொல்கிறார்கள் . பாபிலோன் துன்மார்க்கத்தினால் நிறைந்திருக்கிறது இரண்டாம் தூதன் பாபிலோன் மாநகரம் விழுந்தது விழுந்தது என்று அறிவிக்கிறான் துன்மார்க்கத்தில் நிரம்பியிருக்கிற பாபிலோனுக்கு தேவன் நியாயத்தீர்ப்பு கொடுத்திருக்கிறார். தேவனுடைய நீதியான தீர்ப்பின் பிரகாரம் பாபிலோன் மகாநகரம் விழுந்தது.
மூன்றாம் தூதன் வெளி 14 : 9-12
அவர்களுக்குப் பின்னே மூன்றாம்தூதன் வந்து, மிகுந்த சத்தமிட்டு: மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்கித் தன் நெற்றியிலாவது தன் கையிலாவது அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிறவனெவனோ, வெளிப்படுத்தின விசேஷம் 14:9
அவன் தேவனுடைய கோபாக்கினையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் வார்க்கப்பட்ட அவருடைய உக்கிரமாகிய மதுவைக் குடித்து, பரிசுத்த தூதர்களுக்குமுன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்குமுன்பாகவும் அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவான். வெளிப்படுத்தின விசேஷம் 14:10
அவர்களுடைய வாதையின் புகை சதாகாலங்களிலும் எழும்பும்: மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்குகிறவர்களுக்கும், அதினுடைய நாமத்தின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிற எவனுக்கும் இரவும் பகலும் இளைப்பாறுதலிராது. வெளிப்படுத்தின விசேஷம் 14:11
தேவனுடைய கற்பனைகளையும் இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக்கொள்ளுகிறவர்களாகிய பரிசுத்தவான்களுடைய பொறுமை இதிலே விளங்கும் என்று கூறினான். வெளிப்படுத்தின விசேஷம் 14:12
இரண்டு தூதர்களுக்குப் பின்பு மூன்றாம் தூதனும் வருகிறான். முதலாம் தூதன் நித்திய சுவிசேஷத்தை அறிவிக்கிறான். இரண்டாம் தூதன் பாபிலோன் விழுந்ததை அறிவிக்கிறான். சுவிசேஷத்தைக் கேட்டவர்களும், பாபிலோன் விழுந்ததைப் பார்த்தவர்களும் மனந்திரும்ப வேண்டும் மெய்த்தேவனாகிய சர்வசிருஷ்டிகராகிய கர்த்தரைத் தொழுதுகொள்ளவேண்டும். இதற்குப் பின்பும் யாராவது கர்த்தரை ஆராதிக்காமல் விக்கிரகாராதனையில் ஈடுபட்டிருப்பார்களென்றால் அவர்கள் மீது தேவனுடைய கோபாக்கினை வரும்.
பாபிலோன் விழுந்த சம்பவத்திற்குப் பிறகு மனந்திரும்பாமல், மிருகத்தையும் அதன் சொரூபத்தையும் வணங்குகிறவர்கள்மீ து
தேவனுடைய கோபாக்கினை வரும்
கர்த்தரைஆராதியாமல், தங்கள் நெற்றியிலாவது தங்கள் கையிலாவது மிருகத்தின் முத்திரையைத் தரித்து கொள்கிறவர்கள் மீது தேவகோபாக்கினை நிச்சயமாய் வரும். இவர்கள் தேவனுடைய கோபாக்கினையின் பாத்திரத்திலே பானம் பன்னுவார்கள் உக்கிரமான மதுவை குடிப்பார்கள் பரிசுத்த தூதர்களுக்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும், அவர்கள்அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவார்கள்.
பாபிலோனை விட்டு வெளியேற மறுக்கிறவர்கள் பாபிலோனுக்கு வரும் பாதையில் பங்கு பெறுவார்கள். பாபிலோன் மீது வந்த வாதைகள் இவர்களுக்கும் வரும் வாதையின் புகை சதாகாலங்களிலும் எழும்பும். இவர்களுடைய வாதைகளுக்கு முடிவு இருக்காது இவர்களுக்கு இரவும் பகலும் இளைப்பாறுதல் வராது மிருகத்தையும் அதன் சொரூபத்தையும் வணங்குகிறவர்களுக்கு ஒருபோதும் இளைப்பாறுதல் இல்லை.
மிருகத்தினுடைய நாமத்தின் முத்திரையைத் தரித்துக்கொள்கிறவர்கள்,இளைப்பாறுதல் இல்லாமல் இரவும் பகலும் தவித்துக் கொண்டிருப்பார்கள்.
கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாதவர்கள் தண்டிக்கப்படுவார்கள் கர்த்தருடைய கற்பனைகளையும், இயே கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக்கொள்கிறவர்கள்
கனப்படுத்தப்படுவார்கள். இவர்கள் பரிசுத்தவான்களாயிருப்பார்கள். தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதிலும் கிறிஸ்துவின்மேலுள்ள விசுவாசத்தைக்
காத்துக்கொள்வதிலும் இவர்களுடைய பொறுமை வெளிப்பட்டிருக்கிறது. இதுவரையிலும் நீடியபொறுமையோடிருந்த பரிசுத்தவான்களுக்கு இனிமேல் மகிமை உண்டாகும். கர்த்தருடைய பிள்ளைகள் கனபடுத்தப்படுவார்கள் சாத்தானைப் பின்பற்றியவர்களோ தண்டிக்கப்படுவார்கள்.
பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் வெளி 14:13
பின்பு, பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன், அது: கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான்கள் என்றெழுது, அவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறுவார்கள், அவர்களுடைய கிரியைகள் அவர்களோடே கூடப்போம், ஆவியானவரும் ஆம் என்று திருவுளம் பற்றுகிறார் என்று சொல்லிற்று. வெளிப்படுத்தின விசேஷம் 14:13
மூன்று தூதர்களும் ஒவ்வொருவராக வானத்திலிருந்து வந்த பின்பு பரலோகத்தில் இருந்து ஒரு சத்தம் உண்டாகிறது. யோவான் அந்த சத்தத்தை கேட்கிறார் இது மனுஷருடைய சத்தமும் அல்ல மனுஷருடைய வார்த்தையும் அல்ல. இந்த சத்தம் சத்திய மாணவர் இடத்திலிருந்து உண்டாயிற்று. பரலோகத்திலிருந்து உண்டான சத்தம் சத்தியமான வார்த்தையாய் இருப்பதினால் இந்த வார்த்தைகளை பாதுகாக்கவேண்டும். பராமரிக்க வேண்டும் இதற்காக இந்த வார்த்தைகளை எழுத வேண்டும்.
கர்த்தருடைய பரிசுத்தவான்கள் எழுதப்பட்ட வார்த்தைகளை மறுபடியும் மறுபடியும் வாசிக்க வாய்ப்பு உண்டாகும். தங்களுக்கு துன்பங்களும் வேதனைகளும் பாடுகளும் உபத்திரவங்களும் வருகிறபோதெல்லாம் எழுதப்பட்ட கர்த்தருடைய வார்த்தையை வாசித்து ஆறுதல் அடைவார்கள். கர்த்தருடைய எழுத்துக்கள் ஆறுதலுக்கும் ஆசீர்வாதத்திற்கு ஆதாரமாக இருக்கும்.
பரலோகத்திலிருந்து உண்டான சத்தம் கர்த்தருக்குள் மரிகிறவர்கள் இது முதல் பாக்கியவான்கள் என்று எழுது என்று சொல்லிற்று. கர்த்தருடைய பிள்ளைகள் எப்போதுமே பாக்கியவான்கள் தான். அவர்கள் தேவனுடைய ஆசீர்வாதத்தை பெற்று இருக்கிறவர்கள் கர்த்தருக்கு உண்மையாய் ஊழியம் செய்கிறவர்கள் மரிக்கும்போதும் மரித்த பின்பும் பாக்கியவான்களாக இருப்பார்கள். கர்த்தருக்குள் மரித்தவர்கள் தங்கள் சரீர ங்களில் மரிக்கும்போது தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறுவார்கள். அவர்கள் மரித்த பின்பு அவர்களுடைய கிரியைகள் அவர்களோடு கூட போகும்.
கர்த்தருக்குள் மரித்தவர்கள் எப்படி எல்லாம் ஆசீர்வதிக்க படுவார்கள் என்பதை வானத்திலிருந்து உண்டான சத்தம் தெளிவாக சொல்லிற்று. அவர்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் இந்த பூமியிக்குரிய பிரயாசங்களை விட்டுடொழிந்திருப்பார்கள். அவர்கள் இந்த பூமியில் செய்த எல்லா நற்கிரியை களும் அவர்களுடன் போகும். அவர்களுடைய கிரியைகளுக்கு தக்கதாக பரலோகத்தில் வெகுமதிகள் கொடுக்கப்படும். கர்த்தருடைய பரிசுத்தவான்கள் கர்த்தருக்குள் ஜிவி தார்கள் என்பதற்கும், கர்த்தருக்குள் மரித்தார்கள் என்பதற்கும் அவர்களுடைய கிரியைகள் சாட்சியாக இருக்கும். இந்த சத்தியத்தை ஆவியானவரும் ஆம் என்று திருவுலம் பற்றுகிறார்.
மனுஷ குமாரனுக்கு ஒப்பானவர் வெளி 14:14
பின்பு நான் பார்த்தபோது, இதோ, வெண்மையான மேகத்தையும், அந்த மேகத்தின்மேல் மனுஷகுமாரனுக்கொப்பானவராய்த் தமது சிரசின்மேல் பொற்கிரீடத்தையும் தமது கையிலே கருக்குள்ள அரிவாளையுமுடைய ஒருவர் உட்கார்ந்திருக்கிறதையும் கண்டேன். வெளிப்படுத்தின விசேஷம் 14:14
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே அறுவடையின் தேவனாக இருக்கிறார். யோவான் இயேசு கிறிஸ்துவை தரிசித்த போது அவரை மனுஷகுமாரனுக்கு ஒப்பானவர் ஆக கண்டார். மெய்யாகவே அவர் மனுஷகுமாரன் தான் அவரே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. அவர் இப்போது சிங்காசனத்தின்மேல் உட்காராமல் வெண்மையான மேகத்தின் மேல் உட்கார்ந்து இருக்கிறார். மேகத்தில் எப்பொழுதுமே இரண்டு பகுதிகள் இருக்கும் ஒன்று பிரகாசமுள்ள வெளிச்சமாய் இருக்கும் மற்றொன்று காரிருள் ஆயிருக்கும். வெண்மையான மேகத்தின் பிரகாசமான பகுதியில் கர்த்தருடைய பரிசுத்தவான்கள் கூடுகிற சபையின் பக்கமாக திரும்பியிருக்கிறது. மேகத்தின் உடைய காரிருள் ஆன பகுதி துன்மார்க்கருடைய பக்கமாய் திரும்பி இருக்கிறது.
வெண்மையான மேகத்தின் மேல் உட்கார்ந்திருக்கிற மனுஷ குமாரனாகிய இயேசுகிறிஸ்து சர்வ வல்லமை உடையவர் அவருடைய சிரசின்மேல் பொற் கிரீடம் இருக்கிறது. இந்த கிரீடம் இயேசுக்கிறிஸ்துவின் சர்வ அதிகாரத்திற்கு அடையாளமாக இருக்கிறது. அவர் மெய்யாகவே சர்வ வல்லமை உடையவர் சர்வ அதிகாரத்தை உடையவர். அவரே ராஜாதி ராஜாவும் கர்த்தாதி கர்த்தர் ஆகவும் இருக்கிறவர்.
மனுஷகுமாரனுடைய கையிலே கருக்குள்ள ஒரு அரிவாள் இருக்கிறது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அறுவடையின் தேவனாகவும் இருக்கிறார். கர்த்தர் அறுவடைக்கு ஆயத்தமாய் இருக்கிறார். அறுவடை என்பது துன்மார்க்கர் அறுக்கப்படுவதற்க்கும் நீதிமான்கள் கூட்டி சேர்க்கப்படுவதற்கும் அடையாளமாக இருக்கிறது. துன்மார்க்கர் மீது தேவனுடைய நியாயத்தீர்ப்பு வரும்போது அவர்களுக்கு நீதியான தண்டனை கிடைக்கிறது.
பயிர் அறுவடை வெளி 14 : 15,16
வெளி 14:15. அப்பொழுது வேறொரு தூதன் தேவாலயத்திலிருந்து புறப்பட்டு, மேகத்தின்மேல் உட்கார்ந்திருக்கிறவரை நோக்கி: பூமியின் பயிர் முதிர்ந்தது அனுக்கிறதற்குக் காலம் வந்தது ஆகையால் உம்முடைய அரிவாளை தீட்டி அறுத்துவிடும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான்.
வெளி 14:16. அப்பொழுது மேகத்தின்மேல் உட்க்கார்ந்தவர் தமது அரிவாளை பூமியின் மேல் நீட்டினார், பூமியின் விளைவு அலுப்புண்டது.
மனுஷகுமாரன் மேகத்தின் மேல் உட்க்கார்ந்திருக்கிறார் அப்போது தேவாலயத்திலிருந்து ஒரு தூதன் புறப்பட்டு வந்து, மேகத்தின்மேல் உட்கார்ந்திருக்கிற மனுஷகுமாரனிடத்தில் பேசுகிறார். "பூமியின் பயிர் முதிர்ந்தது அறுக்கிறதற்குக் காலம் வந்தது. ஆகையால் உம்முடைய அரிவாளை நீட்டி அறுத்துவிடும்" என்று மனுஷகுமாரன் இடத்தில் மிகுந்த சத்தமிட்டு சொல்லுகிறான். அறுவடை செய்யும்போது அரிவாளை கதிர்களின்மீது நீட்டும் போது பூமியின் விளைவு அறுக்கபடும்.
தேவதூதன் பூமியின் பயிர் முதிர்ந்தது அரறுகிரதற்கு காலம் வந்தது என்று சொல்லுகிறான் இந்த பூமியில் மனுஷருடைய பாவம் நிரம்பியிருக்கிறது. இவர்களுடைய துன்மார்க்கம் முதிர்ந்து இருக்கிறது இவர்களை அழிப்பதற்கு இனியும் காலதாமதம் செய்யக்கூடாது. மனுஷகுமாரனுடைய கையிலே கருக்குள்ள அரிவாள் இருக்கிறது. அவர் தம்முடைய அரிவாளை நீட்டி பூமியிலே துன்பமாய் இருக்கிறவர்களை அறுத்து விடவேண்டும். இந்த பூமியின் விளைவு அறுக்கப்பட வேண்டும் பாவிகளும் துன்மார்கரும் அறுப்புண்டு போகவேண்டும். அவர்களை அறுக்கிறதற்க்கான காலம் வந்துவிட்டது.
தேவாலயத்திலிருந்து புறப்பட்டு தன்னிடத்தில் சொன்ன தூதனுடைய வார்த்தை மனுஷகுமாரன் கேட்கிறார் மனுஷகுமாரன் மேகத்தின் மேல் உட்கார்ந்திருக்கிறார். அங்கு உட்கார்ந்திருக்கிற பிரகாரமாகவே தமது அரிவாளை பூமியின் மேல் நீட்டுகிறார். அப்போது பூமியின் விளைவு அறுப்புண்டது. பூமியிலுள்ள பாவிகளும், துன்மார்க்கரும் அறுப்புண்டு போனார்கள். அவர்கள் அழிந்து போனார்கள்.
திராட்சைப் பழங்களின் அறுவடை வெளி 14:17-20
பின்பு வேறொரு தூதனும் கருக்குள்ள அரிவாளைப் பிடித்துக்கொண்டு பரலோகத்திலுள்ள தேவாலயத்திலிருந்து புறப்பட்டுவந்தான். வெளிப்படுத்தின விசேஷம் 14:17
அக்கினியின்மேல் அதிகாரமுள்ள வேறொரு தூதனும் பலிபீடத்திலிருந்து புறப்பட்டுவந்து, கருக்குள்ள அரிவாளைப் பிடித்திருக்கிறவனை நோக்கி: பூமியின் திராட்சப்பழங்கள் பழுத்திருக்கிறது, கருக்குள்ள உமது அரிவாளை நீட்டி, அதின் குலைகளை அறுத்துவிடும் என்று மிகுந்த சத்தத்தோடே சொன்னான். வெளிப்படுத்தின விசேஷம் 14:18
அப்பொழுது அந்தத் தூதன் தன் அரிவாளைப் பூமியின்மேலே நீட்டி, பூமியின் திராட்சப்பழங்களை அறுத்து, தேவனுடைய கோபாக்கினை யென்னும் பெரிய ஆலையிலே போட்டான.; வெளிப்படுத்தின விசேஷம் 14:19
நகரத்திற்குப் புறம்பேயுள்ள அந்த ஆலையிலே அது மிதிக்கப்பட்டது, அந்த ஆலையிலிருந்து ஆயிரத்தறுநூறு ஸ்தாதி தூரத்திற்கு இரத்தம் புறப்பட்டுக் குதிரைகளின் கடிவாளங்கள்மட்டும் பெருகிவந்தது. வெளிப்படுத்தின விசேஷம் 14:20
அப்போஸ்தலர் யோவான் பூமியின் விளைவு அறுப்புண்டு போவதை காண்கிறார். மேகத்தின் மேல் உட்கார்ந்திருக்கிற மனுஷகுமாரனே தமது கையிலுள்ள கருக்குள்ள அரிவாளை பூமியின் மேல் நீட்டி பூமியின் விளைவை அறுக்கிறார். இதைத் தொடர்ந்து யோவான் மேலும் ஒரு தரிசனத்தைக் காண்கிறார். இது திராட்சை பழங்களின் அறுவடை.
பூமியின் விளைவு அறுப்புண்ட பின்பு வேறொரு தூதன் தேவாலயத்திலிருந்து புறப்பட்டு வருகிறான். அவன் தன்னுடைய கையில் அரிவாளை. பிடித்துக்கொண்டிருக்கிறான். இதன் பின்பு வேறொரு தூதனும் பலிபீடத்திலிருந்து புறப்பட்டு வருகிறான். இவனுக்கு அக்கினியின் மேல அதிகாரம் இருக்கிறது.
இரண்டு தூதர்கள் புறப்பட்டு வருவதை யோவான் காண்கிறார்.
பலிபீடத்திலிருந்து புறப்பட்டு வந்த தூதன் கருக்குள்ள அரிவாள் பிடித்திருக்கிற தூதனை நோக்கி, "பூமியின் திராட்சப்பழங்கள் பழுத்திருக்கிறது கருக்குள்ள உமது அரிவாளை நீட்டி, அதின் குலைகளை அறுத்துவிடும்" என்று மிகுந்த சத்தத்தோடே சொல்லுகிறான். திராட்சப்பழ அறுவடையில் இரண்டு பகுதிகள் உள்ளது. அவையாவன :
1. திராட்சப்பழக்குலைகளை - அறுத்து அவற்றை ஒன்று சேர்ப்பது. 2 அறுத்த திராட்சப்பழங்களை ஆலையிலே போடுவது அந்தப் பழங்களை ஆலையிலே மிதித்து ரசமாக்குவது
கருக்குள்ள அரிவாளை பிடித்திருக்கிற தூதன், தன் அரிவாளை பூமியின் மேலே நீட்டுகிறான். பூமியின் திராட்சப்பழங்களை அறுக்கிறான். அறுத்த பழங்களை பெரிய ஆலையிலே போடுகிறான். இது தேவனுடைய கோபாக்கினை என்னும் பெரிய ஆலையாகும். இந்த ஆலை நகரத்திற்குப் புறம்பே உள்ளது இந்த ஆலையில் அறுக்கப்பட்ட திராட்சப்பழங்கள் மிதிக்கப்படுகிறது. அந்த ஆலையிலிருந்து ஆயிரத்தறுநூறு ஸ்தாதி தூரத்திற்கு இரத்தம் புறப்பட்டு குதிரைகளின் கடிவாளங்கள் மட்டும் பெருகி வருகிறது.
இந்தத் தரிசனத்திற்கு வேதபண்டிதர்கள் இவ்வாறு வியாக்கியானம் சொல்கிறார்கள் பாபிலோனுக்கு விரோதமாக மற்ற தேசத்து சேனைகள் வந்து, பாபிலோனை முற்றிகையிடுகிறார்கள். பாபிலோன் தேசத்தாரை அழித்து போடுகிறார்கள் யுத்தத்தில் ஏராளமான பாபிலோனியர்கள் கொல்லப்படுகிறார்கள். அவர்களுடைய இரத்தம் ஆறுபோல புறப்பட்டு வருகிறது.
தேவனுடைய நியாயத்தீர்ப்பு பாபிலோனுக்கு விரோதமாக வந்தது பாபிலோன் ஜனங்களுடைய இரத்தம் நகரத்திற்குப் புறம்பே இருந்து ஆயிரத்தரநூறு ஸ்தாதி தூரத்திற்கு புறப்பட்டு வருகிறது. அது குதிரைகளின் கடிவாளங்கள் பட்டும் பெருகி வருகிறது
துன்மார்க்கருக்கு அழிவு நிச்சயம் வரும்.
தேவனுடைய நீதியான தீர்ப்பு துன்மார்க்கர் மீது வரும்போது அவர்கள் அழிந்து போவார்கள்
Comments