யோசேப்பு தன் தகப்பனுடைய முகத்தின் மேல் விழுந்து அழுதான்.

அப்பொழுது யோசேப்பு  தன் தகப்பனுடைய முகத்தின் மேல் விழுந்து அழுதான்.
(ஆதி 50:1) 

தன் தகப்பனுடைய மரணத்தைக் கண்டதும் யோசேப்பு அடைந்த மனக்கலக்கம், எல்லா விசுவாசிகளுக்கும் ஒரு முன் உதாரணமாய் உள்ளது. அன்பாக நேசிக்கப்பட்ட ஒரு கிறிஸ்துவ விசுவாசி இறந்துவிட்டால், விசுவாசிகளின் அனுபவமும் அதுவாகவே இருக்கும். 

1) உண்மையான வேதனை, யோசேப்பு அழுதான், நீண்ட நாட்களாக துக்கம் கொண்டாடிக் கொண்டிருந்தான். 70 நாட்களுக்குப் பின்னர் யாக்கோபின் எலும்புகளை அவனுடைய பிதாக்களின் கல்லறையில் அடக்கம் செய்வதற்காக கானானுக்கு எடுத்துச் சென்றபோது பல வாரங்களும் யோசேப்பு கொண்டாடினான்.
(ஆதி 50:1-4; 7-14)
நமக்கு மிக நெருங்கிய ஒருவரின் மரணத்துக்காக பல வாரங்களோ, மாதங்களோ, துக்கம் கொண்டாடுவதில் தவறொன்றும் இல்லை. இது அசாதாரணமானதும் இல்லை. 

2) அடக்கம் செய்வதற்கு ஆயத்தம் செய்வதில் கவனம். 
(ஆதி 50:2) யோசேப்பு தன் தகப்பனின் ஞாபகார்த்தமாக இறுதி மரியாதையை சரியான முறையிலும், நேர்த்தியான முறையிலும் செலுத்த விரும்பினான். 

3) கடைசி ஆசையை நிறைவேற்றுதல். யோசேப்பு தன் தகப்பனுக்காகக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியதின் மூலம் அந்த உறுதிமொழிகளைக் கனப்படுத்தினான்.
(ஆதி 50:5,12,13,;)
தேவனுடைய சித்தத்துக்கிணைந்து, விசுவாசத்துடன் செய்யப்பட்ட வாக்குறுதிகள், அன்பாக நேசிக்கப்பட்ட ஒருவரின் மரணத்துக்கு பின் நிறைவேற்றப்பட வேண்டும். 

4) உண்மையான சாட்சி தேவனுடைய வாக்குத்தத்தங்களில் யோசேப்புக்கு இருந்த விசுவாசத்துக்கு சாட்சியாக தன் தகப்பனை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட கானான் தேசத்துக்கு சுமந்து சென்று, ஆபிரகாம், ஈசாக் இன்னும் மற்றவர்கள் இருந்த கல்லறையில் அடக்கம் பண்ணினதன் மூலம் வெளிப்படுத்தினான்.
(1 தெச 4:13,18; பிலி 1:21)

தொடர்ந்து வேத வெளிச்சத்தை நீங்கள் தேடி ஆதாரத்துடன் சரியான தகவலை கூட்டத்தின் மத்தியில் பேசுங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் 
ஆமென்.

Comments

Popular posts from this blog

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

உணர்ச்சியுள்ள கிறிஸ்தவனே கிறிஸ்தவத்துக்கு விரோதமாக நடப்பதை நீ அறியாயோ ! ?

திருச்சபை