வேதாகமம் சார்ந்த நம்பிக்கை

*பரிசுத்த வேதாகமம் சார்ந்த நம்பிக்கை*
(சங் 33:18,19).

'பரிசுத்த வேதாகமம் சார்ந்த நம்பிக்கை'என்பதன் விளக்கம்: 'நம்பிக்கை'என்பது எதிர்காலத்தைக் குறித்தது என்பது அதன் இயல்பான தன்மையிலிருந்தே தெளிவாகிறது.
(ரோமர் 8:24,25;) எனினும் எதிர்காலத்தில் நிகழவருக்கும் ஒன்றைக் குறித்த ஒரு ஆசை அல்லது விருப்பம் மாத்திரம் என்பதை விட அதில் அதிக பொருள் நிறைந்துள்ளது.
வேதாகமம் சார்ந்த நம்பிக்கை என்பது நம்முடைய எதிர்காலத்தைக் குறித்து நம் இருதயத்தில் நாம் கொண்டுள்ள நிச்சயம், அதாவது ஒரு உறுதியான நம்பிக்கையைக் குறிக்கிறது.
ஏனென்றால் தேவன் நமக்கு தந்துள்ள வாக்குத்தத்தங்களையும்,
வெளிப்பாடுகளையும் அவை சார்ந்திருக்கின்றன.
அதாவது பரிசுத்த வேதாகமம் சார்ந்த நம்பிக்கை என்பது நம்மிடத்தில் இருக்கும் ஒரு உறுதியான விசுவாசமும் 
(ரோமர் 15:13;எபி 11:1) தேவன் பேரில் நாம் கொண்டுள்ள உறுதியான நம்பிக்கையும், பிரிக்க முடியாதபடி இணைந்துள்ளது. (சங் 33:21,22).
சங்கீதக்காரன் விசுவாசம், நம்பிக்கை இரண்டையும் இணையாகக் கூறுகிறான்.

"பிரபுக்களையும், இரட்சிக்கத் திராணியில்லாத மனு புத்திரனையும் நம்பாதேயுங்கள். அவனுடைய ஆவி பிரியும் அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான். அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம். யாக்கோபின் தேவனைத் தன் துணையாக கொண்டிருந்து தன் தேவனாகிய கர்த்தர் மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான்".
(சங் 146:3-5;எரே 17:7) இதன் பலனாக விசுவாசியின் உறுதியான நம்பிக்கை. அவனை எவ்வகையிலும் 
"ஏமாற்றாத நம்பிக்கையாக"இருக்கிறது. 
(ரோமர் 5:5;சங் 22:4,5;எசா 49:23;) எனவே நம்பிக்கை என்பது ஒரு விசுவாசியின் வாழ்க்கையில் அசையாத, உறுதியான நங்கூரமாயிருக்கிறது.
(எபி 6:19,20;).

*விசுவாசியின் நம்பிக்கையின் அடிப்படை.*

விசுவாசியின் நம்பிக்கை, தேவனுடைய இயல்பான தன்மை, கிறிஸ்துவின் தன்மை, தேவனுடைய வார்த்தை ஆகியவற்றின் மீது அஸ்திபாரமிடப்பட்டுள்ளது.

1) தம்முடைய பிள்ளைகளிடத்தில் தேவன் எவ்வளவு கரிசனையும், உண்மையுள்ளவராய் இருந்தார் என்பதை வேதம் தெளிவாக வெளிப்படுத்துகிறது.
( சங்கீதம் 22 உதாரணமாக.)
தாவீது அதனுடைய வாழ்க்கையில் தன் உயிருக்கு ஆபத்து நேரிட்ட ஒரு சூழ்நிலையில் கதறியதை காட்டுகிறது. 
அவன் கடந்த காலங்களில் தேவன் தமது பிள்ளைகள் மேல் காட்டிய அக்கறையையும், இரட்சிப்பையும், அதிசய நடப்புதலையும் பற்றிச் சிந்திக்கும்போது, அந்த தேவன் அவனையும் இக்கட்டிலிருந்து மீட்டுக் காப்பாற்றுவார் என்று உறுதியாய் நம்புகிறான்.
எங்கள் பிதாக்கள் உம்மிடத்தில் நம்பிக்கை வைத்தார்கள். நம்பின அவர்களை நீர் விடுவித்தீர்"
(சங் 22:4)
யாத்திரகம் புத்தகம் முழுவதிலும் சிருஷ்டிகராகிய கடவுள் தம்முடைய உண்மையும், விசுவாசமும் உள்ள மக்களைக் காப்பாற்றவும், அவர்களுடைய தேவைகளைச் சந்திக்கவும் என்னென்ன அற்புதச் செயல்களையெல்லாம் செய்து வழி நடத்தினார் என்பதை காணலாம். கானான் தேசம் பிடிக்கப்படுதல், இயேசு செய்த அற்புதங்கள், அப்போஸ்தலர்கள் செய்த அற்புத அடையாளங்கள் போன்றவை நமது ஆண்டவர் பேரில் உள்ள நமது விசுவாசத்தை கட்டியெழுப்பும். அவர் நமக்கு உதவி செய்வார் என்று விசுவாசிக்கலாம். 
(சங் 105; 124:8; எபி 13:6;யாத் 6:7;) அதே வேளையில் தேவனை விசுவாசியாத மக்களுக்கு நம்பிக்கைக்கு எந்த எதுவும் இல்லை.

2) இயேசு கிறிஸ்துவில் வெளிப்படுத்தப்பட்ட புது உடன்படிக்கையின் முழு வெளிப்பாடு, விசுவாசிகளுக்கு தேவன் மேல் நம்பிக்கை கொள்ள மேலும் அதிகக் காரணமாகிறது.
இயேசு கிறிஸ்து சாத்தானின் கிரியைகளை அழிப்பதற்காக மனுஷகுமாரனாய் வந்தார் என்று விசுவாசிகள் நம்புகிறார்கள். (1யோவா 3:8)
"பிரஞ்சபத்தின் தேவனானவன்" சாத்தான். 
(2கொரி 4:4; கலா 1:4;எபி 2:14;
1யோவா 5:19),
இவ்வுலகத்தில் இயேசு ஊழியம் செய்த காலத்தில் அசுத்த ஆவிகளை துரத்தியதின் மூலம் சாத்தான் மீது  தமக்குள்ள வல்லமையே வெளிப்படுத்தினார். மேலும் இயேசு கிறிஸ்து தமது மரணத்தினாலும், உயிர்த்தெழுதினாலும் சாத்தானின் கோட்டையை தகர்த்தெறிந்தார். 
(யோவா 12:31) அதன் மூலம் அவர் தேவனுடைய ராஜ்ஜியத்தின் வல்லமையை நிரூபித்தார். 
நம்முடைய நம்பிக்கையைக் குறித்து பேதுரு ஆர்வத்துடன் கூறுவது:"நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. அவர் இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே அழியாததும்,
மாசற்றதும், வாடாததுமாகிய சுதந்திரத்திற்கேதுவாக ஜீவன் உள்ள நம்பிக்கை உண்டாகும்படி தமது மிகுந்த இரக்கத்தின் படியே நம்மை மறுபடியும் ஜெனிப்பித்தார்.
(1பேதுரு 1:3,4). எனவே இயேசு கிறிஸ்து"நமது நம்பிக்கை"எனப்படுகிறார். 
(கொலோ 1:27; 1தீமோ 1:1).
பரிசுத்த ஆவியின் வல்லமையின் மூலமாக நாம் அவர் மீது நமது நம்பிக்கையை வைக்க வேண்டும். (ரோமர் 15:12:13;
1பேது 1:13;யாத் 17:11;)

3) நம்முடைய நம்பிக்கையின் மூன்றாவது அடித்தளம் தேவனுடைய வார்த்தை. தேவன் தம்முடைய வார்த்தையை தீர்க்கதரிசிகள் மூலமாகவும், ஆதி அப்போஸ்தலர்கள் மூலமாகவும் வெளிப்படுத்தினார். அவர்கள் தவறு இல்லாமல் எழுதுவதற்கு அவர்களைப் பரிசுத்த ஆவியினால் நிரப்பி, அவரது அகத் தூண்டுதல் மூலம் அவர்கள் தேவனுடைய வார்த்தையை எழுதச் செய்தார். (2 தீமோ 3:16;2பேது 1:19-21). அவருடைய நித்திய வார்த்தை பரலோகத்தில் உறுதியாய்த் தரித்திருக்கிற படியால்,(சங் 119:89;) நாம் நம்முடைய நம்பிக்கையை இந்த தேவனுடைய வார்த்தை மீது வைக்க வேண்டும். 
(சங் 119:49; 74,81,114; 130:5;அப் 26:6 ரோம 15:4).
உண்மையில் நாம் தேவனை பற்றியும் இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் அறிந்திருப்பதெல்லாம் மாறாத சத்தியமாகிய வேதாகமத்தில் வெளிப்படுத்தப்பட்டிப்பவைகளே.

*விசுவாசிகளின் நம்பிக்கை*
விசுவாசிகளின் இறுதியான நம்பிக்கையும், விசுவாசமும் மற்ற மனிதர்கள் மேல் இருக்கக் கூடாது. 
(சங் 33:16,17; 147:10-11) அல்லது உலக சம்பத்துக்கள் மேலும், பணத்தின் மேலும் இருக்கக்கூடாது. 
(சங் 20:7; மத் 6:19-21; லூக் 12:13-21; 1தீமோ 6:17; எண் 18:20).
நம்முடைய விசுவாசம் தேவன் பேரிலும், அவருடைய குமாரன் இயேசு கிறிஸ்துவின் பேரிலும், அவருடைய வார்த்தையின் பேரிலும் இருக்க வேண்டும். 
இந்த விசுவாசத்தில் அடங்கி இருப்பவை எவை ?

1) நாம் நமது இன்றைய வாழ்க்கையில் அனுபவிக்கும் துன்பங்களிலிருந்து தேவன் அளிக்கும் விடுதலையிலும் தேவனுடைய கிருபையிலும் நமக்கு நம்பிக்கை உண்டு. 
(சங் 33:18,19; 42:1-5; 71:1-5,13-14;
எரே 17:17,18).

2) இவ்வுலகில் நாம் அனுபவிக்கும் துன்பங்கள் யாவும் ஒரு நாள் முடிந்துபோம் என்றும், இந்த உலகமானது எல்லாப் பொல்லாப்புகளுக்கும், ஆளாக்கப்படுவது நின்று போகும் என்றும், நம்முடைய சரீரங்களின் மீட்பும், உயிர்த்தெழுதலும் நடந்தேறும் காலம் வரும் என்றும் நம்புகிறோம் .
(ரோம 8:18-25;சங் 16:9,10; 2பேது 3:12; அப் 24:15;)

3) நம்முடைய இரட்சிப்பு பூரணமடைகிறது என்ற நம்பிக்கை நமக்கு உண்டு. 
(1தெச 5:8;)

4) புதிய வானத்தில் நமக்கு ஒரு நித்திய வீடு உண்டு என்று நம்புகிறோம். 
( 2கொரி 5:1-5; 2பேது 3:13; யோவா 14:2).
அந்தப் புதிய நகரத்தை வடிவமைக்கிறவரும், கட்டுகிறவரும் தேவனே. 
(எபி 11:10)

5) நமது ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்து மகிமையோடு திரும்ப வருவார் என்று நம்புகிறோம். வானத்தில் தோன்றுவார். (தீத் 2:13) அப்பொழுது விசுவாசிகள் அனைவரும் அவரோடு இருக்கும்படி எடுத்துக் கொள்ளப்படுவார்கள். வானத்தில் அவரைச் சந்திப்போம்.(1தெச 4:13-18).
நாம் அவர் எப்படி இருக்கிறாரோ, அந்நிலையில் அவரைக் காண்போம். நாமும் அவரைப் போலாவோம்.
(பிலி 3:20,21; 1யோவா 3:2,3;) இவை அனைத்தும் நம்புகிறோம். 

6) நாம் ஒரு ஜீவ கிரீடத்தைப் பெறுவோம் என்று நம்புகிறோம். அது நீதியின் கிரீடம். (2தீமோ 4:8)
அது மகிமையின் கிரீடம். 
(1 பேது 5:4)
அது ஜீவனின் கிரீடம். 
(வெளி 2:10;)

7) இறுதியாக நமக்கு நித்திய ஜீவன் உண்டென்று நம்புகிறோம்.(தீத் 1:2; 3:7,)
இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, அவருக்குக் கீழ்படிகிற அனைவருக்கும் இந்த வாழ்க்கை உண்டு என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
(யோவா 3:16,36; 6:47; 1யோவா
5:11-13).

இவ்வளவு பெரிய வாக்குத்தத்தங்கள் நமக்கு தரப்பட்டிருக்கும் போது, நாம் நம்முடைய முழு விசுவாசத்தை, தேவன் பேரிலும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் பேரிலும் வைத்திருக்கும் போது 
"உங்களிலிருக்கிற நம்பிக்கையைக் குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும், சாந்தத்தோடும், விசுவாசத்தோடும் உத்தரவு சொல்ல எப்பொழுதும் ஆயத்தமாய் இருங்கள்"என்று பேதுரு கூறுகிறான். 
(1 பேது 3:15)
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென் 
கிறிஸ்துவின் பணியில் சகோதரன் சிலுவை ராஜா

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை