3) ராஜ்யத்தின் உவமைகள், (இரண்டும் ஒன்றாக)
இரண்டும் ஒன்றாக வளரட்டும்.*
(மத் 13:30)
இயேசு கிறிஸ்துவின் உண்மையான விசுவாசிகளும், சாத்தானின் பிள்ளைகளும் ஒன்றாகச் சேர்ந்து வளரட்டும் என்பதில் மூன்று காரியங்கள் கவனிக்கப்பட வேண்டும்.
(மத் 13:38; 2கொரி 11:13-15).
1) சுவிசேஷம் என்னும் நற்செய்தியின் காலம் வரையிலும் இவ்வாறு கூடி வாழுதல் தொடர்ந்து நடக்கும்.
தீமை செய்கிற சாத்தானின் பிள்ளைகளை மட்டும் அழித்திட கடைசிக்காலம் வரை தேவதூதர்களுக்கு தேவன் உத்தரவு கொடுக்க மாட்டார். (மத் 13:38-41).
2) இந்த உவமை பரிசுத்த வேதாகம அறிவுரைகளுக்கு முரண்படுவதில்லை.
பரிசுத்த வேதாகமத்தில் வேறு இடத்தில் விசுவாசிகள் பாவம் செய்யும் உறுப்பினர்களை கண்டிக்க வேண்டுமென்றும், மனந்திரும்பாத, போலி உறுப்பினர்களை விசுவாசிகளின் ஐக்கிய கூட்டுறவிலிருந்து விலக்கிவிட வேண்டும் என்றும் போதிக்கின்றன.
(மத் 18:15; அப் 20:28; 1கொரி 5:1)
எனினும் திருச்சபை ஒழுங்குக் கட்டுப்பாடு என்பது, தீமை செய்கிறவர்களுக்கு தேவனுடைய இராஜ்யத்தில் ஒரு பகுதியான தீர்வாகும். தேவனும், அவருடைய தூதர்களுமே இறுதியாக அவர்களைப் பிரிக்கும் பணியை செய்வார்கள் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
3) தேவனுடைய இராஜ்யத்தில் எல்லா பகுதிகளிலும் விசுவாசிகள் மத்தியில் சாத்தான் ஆங்காங்கே நாட்டி வைக்கின்ற தீமை செய்கிற மனிதர்களைக் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அவர்கள் பல வகைகளில் உண்மையான தேவ பிள்ளைகளைப் போலத் தோற்றமளிப்பார்கள்.
(2கொரி 11:13).
தொடர்ந்து இந்த அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு வாசித்து தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா
தொடர்புக்கு
9841711 591.
Comments