உறுதிப்பட்டதாயிருந்தது
ஆவினாலும் பெலத்தினாலும் உறுதிப்பட்டதாயிருந்தது.
(1கொரி 2:4)
1) பரிசுத்த ஆவியின் பலத்தினால் உறுதிப்பட்டதான (1கொரி 1:18,24), பவுலின் பிரசங்கத்தில் அடங்கியுள்ளவை பின்வருமாறு:
அ) மனிதருடைய பாவங்களைக் குறித்தும், நீதியைக் குறித்தும், நியாயத் தீர்ப்பை குறித்தும், பரிசுத்த ஆவியானவர் கண்டித்து உணர்த்தி உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் இரட்சிப்பின் வல்லமைக்கு சாட்சி கொடுப்பது.(1கொரி 5,6;யோவா 16:8;அப் 2:36-41;)
ஆ) மனிதருடைய வாழ்க்கையை மாற்றக்கூடிய வல்லமை. (1கொரி 1:26-27;அப் 4:13).
இ) விசுவாசியில் பரிசுத்தத்தை செயல்படுத்தும் வல்லமை. (1கொரி 5:3-5);
ஈ) அற்புதங்களினாலும், அதிசயங்களினாலும், தேவனுடைய வல்லமையை வெளிப்பட செய்வது.
(அப் 2:29-33; 4:29-30; 5:12; 14:3;
2கொரி 12:12;)
2) புதிய ஏற்பாட்டில் உள்ள மற்ற அநேக பகுதிகளும், சுவிசேஷம் பிரசிங்கப்படும் போது பரிசுத்தாவியின் ஒரு விசேஷ வல்லமை கூடவே சேர்ந்து வருவதை அழுத்தமாகக் கூறுகின்றன.
(மாற் 16:17-18;லூக் 10:19;அப் 28:3-6;ரோம 15:19; 1கொரி 4:20;
1தெச 1:5; எபி 2:4).
3) சுவிசேஷத்தின் எல்லா ஊழியக்காரரும் தங்கள் ஊழியத்தின் மூலம் கீழ் கொடுக்கப்பட்டவை நடைபெற வேண்டும் என்று ஜெபிக்க வேண்டும்.
அ) மக்கள் இரட்சிக்கப்படும்படி.
(அப் 2:41; 11:21,24,;14:1;)
ஆ) புதிய விசுவாசிகள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படும்படி...
(அப் 2:4; 4:31;8:17; 19:6;)
இ) அசுத்த ஆவிகளை துரத்தும்படியாக....
(அப் 5:16; 8:7;16:18);
ஈ) வியாதியுள்ளோர் சுகமடையும் படியாக...
(அப் 3:6;4:29-30; 14:10);
உ) கிறிஸ்துவின் நீதி நிலைகளுக்கும் போதனைகளுக்கும் சீஷர்கள் கீழ்ப்படிந்து நடக்க,
(மத் 28:18-20; அப் 11:23,26;)
தொடர்ந்து பரிசுத்த ஆவியின் நிறைவோடும், வேதத்தின் துணையோடும்,
வாசித்து செயல்படுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து பெருக பண்ணுவாராக ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா
9841711591.
Comments