அந்நிய பாஷையின் நன்மைகள்
*அந்நிய பாஷையின் நன்மைகள் மற்றும் ஆச்சரியங்களும்.*
(ஏசாயா 28:11)ல் பரியாச உதடுகளால் அந்நிய பாஷையால் உங்களோடு பேசுவேன் என்றார். பரியாச உதடுகள் என்றால் உளறல் (Trembling). ஒரு வார்த்தையை திரும்ப திரும்ப உளறல் என அர்த்தம். அந்நிய பாஷை பேசுகிறவர்கள் ஒரே சொல்லை மீண்டும் மீண்டும் பேசுவதை உளறலாக கேட்பீர்கள். ஒரு வார்த்தைக்கு பல அர்த்தங்கள். அளவில்லாத எழுத்துக்கள் உண்டு. ஆகவே அது உளரல் அல்ல அர்த்தம் பொதிந்த வார்த்தைகள்.
ஆங்கிலம்போல் 26 எழுத்துக்கள் அல்ல, தமிழ்போல் 247 எழுத்துக்கள் அல்ல.. பரலோகத்தில் தேவ\தூதர்கள் பல மொழிகளில் பேசுகிறார்கள்.
அந்நிய பாஷையை மெல்ல மெல்ல பேசி கற்க வேண்டும். இந்த மொழி நம் சரீரத்தில் உள்ளது. நம் தாய்மொழி தமிழை நாம் படிக்காமலே சிறு குழந்தையில் பேசுகிறதெப்படி? நாம் அந்நிய பாஷையை ஆண்டவரிடம் கேட்டு ஜெபிக்க வேண்டும். அதை பெறும்போது உளறி உளறி பேசுவதுபோல் இருக்கும்.
அந்நிய பாஷையில் தேவன் பேசுவார் என்பதற்க்கு ஆதாரம் :(ஏசாயா 28:11)
பரியாச உதடுகளினாலும் அந்நியபாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார்.
இதுவே நீங்கள் இளைத்தவனை இளைப்பாறப்பண்ணத்தக்க இளைப்பாறுதல், இதுவே ஆறுதல் என்று அவர்களோடே அவர் சொன்னாலும் கேட்கமாட்டோம் என்கிறார்கள்.
(ஏசாயா 28:12)
தேவன் நம்மோடு பேச ஆசையாயிருக்கிறாரா?
இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன், ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.
(வெளிப்படுத்தின விசேஷம் 3:20)
தேவன் ஆதாமோடு பேச குளிர்ச்சியான வேளையில் தேடி பேச வந்தார்.
ஆதாம் வேளாண்மை பணிகளை முடிந்தபிறகு தன் பிள்ளைகளின் களைப்பு தீர பேச வந்தார்.
*அந்நிய பாஷை ஆசீர்வாதங்கள்*
1). தேவன் நம்மோடு பேசுகிறார்
2.) நம் பலலவீனங்கள் மாறும்
3) விசுவாசம் வளரும்
யூதா 1:20
பரிசுத்த ஆவிக்குள் (அந்நிய பாஷையில்) ஜெபம் பண்ணுங்கள்.
அன்பை நாடுங்கள். ஞானவரங்களையும் விரும்புங்கள். விஷேசமாய்த் தீர்க்கதரிசனவரத்தை விரும்புங்கள்.
(1 கொரிந்தியர் 14:1)
4) தேவனோடு இரகசியம் பேசுகிறான்
தேவனோடு பேசுகிறான்
ஏனெனில் அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியினாலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.
(1 கொரிந்தியர் 14:2)
5) வளர வளர (ஆவியில் வளர அதன் தசைகள் அதாவது உள்ளான மனிதன் பலப்பட்டு) தீர்க்கதரிசன வரம் மற்றும் தரிசனம் கூர்மையாகிறது.
6) பக்திவிருத்தி உண்டாகும்
தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவனோ மனுஷருக்குப்பக்திவிருத்தியும், புத்தியும், ஆறுதலும் உண்டாகத்தக்கதாகப் பேசுகிறான்.
(1 கொரிந்தியர் 14:3)
அந்நியபாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான். தீர்க்கதரிசனம் சொல்லுகிறவனோ சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான்.
(1 கொரிந்தியர் 14:4)
அந்நிய பாஷை தான் என்பதற்க்கு ஆதாரம்:
(தானியேல் 5:25)ல்
எழுதப்பட்ட எழுத்து என்னவென்றால்: மெனே, மெனே, தெக்கேல், உப்பார்சின் என்பதே. (2700 ஆண்டுகளாயிற்று, இந்த சுவர் இப்போதும் உள்ளது. இது அது தாதென நம்பப்படுகிறது. 120 நாடுகளின் ஞானிகளும் அறிய முடியாத வாசகம் இது. ஒருவராலும் அறியமுடியாத பாஷைதான் அந்நிய பாஷை….
இந்த வசனத்தின் அர்த்தமாவது: மெனே என்பதற்கு, தேவன் உன் ராஜ்யத்தை மட்டிட்டு, அதற்கு முடிவுண்டாக்கினார் என்றும்,
(தானியேல் 5:26)
தெக்கேல் என்பதற்கு நீ தராசிலே நிறுக்கப்பட்டு, குறையக் காணப்பட்டாய் என்றும்,
(தானியேல் 5:27)
பெரேஸ் என்பதற்கு, உன் ராஜ்யம் பிரிக்கப்பட்டு, மேதியருக்கும் பெர்சியருக்கும் கொடுக்கப்பட்டது என்றும் அர்த்தமாம் என்றான்.
தானியேல் 5:28
அந்நிய பாஷை பேசும்போது
பேசும் குரல் உரக்கச்சத்தமாய் மாறுகிறது. அது தேவனின் குரல்.
நாம் பேசிக்கொண்டேயிருக்க வேண்டும்.
வசன ஆதாரம் :
சிங்கம் கெர்ச்சிக்கிறது, யார் பயப்படாதிருப்பான்? கர்த்தராகிய ஆண்டவர் பேசுகிறார், யார் தீர்க்கதரிசனம் சொல்லாதிருப்பான் ?
(ஆமோஸ் 3:8)
| மெனே இரண்டுமுறை வருகிறதை பாருங்கள். அன்னிய பாஷையில் ஒரு வார்த்தைக்கு பல பல அர்த்தங்கள் உண்டு I
தேவன் பேசுவதன் அர்த்தம் எப்போது புரியும்?
ஆவிக்குரிய வாழ்வில் வளர வளர அர்த்தம் புரியும். ஆறு ஆசீர்வாதங்கள் கிடைக்கும். பேசப்பேச நம் நாடி நரம்புகளுக்குள் செல்லும்.
சேராபீன்கள் ஒருவரையொருவர்
நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள்.
(ஏசாயா 6:3)
சிங்காசனத்தைச் சுற்றும்போது தேவனை ஒவ்வொரு கோணத்தில் தேவனின் ஒவ்வொரு பரிமாணத்தை குணத்தை பார்த்து வியந்து பரிசுத்தர் பரிசுத்தர் என வியந்து வியந்து போற்றுகிறார்கள்.
அந்நிய பாஷை வற்றாத ஜீவஊற்று,
உள்ளத்திலிருந்து வரும்… மாம்சத்தில் சுய முயற்சியில் பேசுவது அதாவது மற்றவர்கள் பேசுவதை கொண்டு பேசுதல் குட்டியாத்தான் பேச முடியும்.
அதற்க்கு பிரயோசனமில்லை.
அந்நிய பாஷை பேசுவது
சர்வாயுதவர்க்கத்தில் ஏழாவதாகும்,
அது எபிரேயர் 6: 17. எப்போதும் ஆவியில் ஜெபம் பண்ணுவது. கடைசி காலத்தில் அந்நிய பாஷையில் ஜெபிப்பது பலத்தை தரும்.
அந்நிய பாஷை எல்லா சபையினரும் பேசலாமா?
பேசலாம்.
தெயோப்பிலுவே, இயேசுவானவர் தாம் தெரிந்துகொண்ட அப்போஸ்தலருக்குப் பரிசுத்தஆவியினாலே கட்டளையிட்ட பின்பு,
அப்போஸ்தலர் 1:1
அவர் எடுத்துக்கொள்ளப்பட்ட நாள் வரைக்கும் செய்யவும் உபதேசிக்கவும் தொடங்கின எல்லாவற்றையுங் குறித்து, முதலாம் பிரபந்தத்தை உண்டுபண்ணினேன்.
அப்போஸ்தலர் 1:2
தேவன் ஆதாமோடு பேசிய மொழி ?
ஆதாம் என்ன மொழி பேசினான்?
ஆதாம் பிறந்து பார்த்த முகம் தேவன். ஆக தேவன் பேசின மொழியை ஆதாம் பேசினான். பாபேல் கோபுரத்திற்க்கு பின்புதான் எபிரேயம் , தமிழ் என மற்ற மொழிகள் பிறந்தது. இதுவே மொழிகளின் வளர்ச்சியை தூண்டியது. தேவனே எல்லா மொழிகளுக்கும் ஆதாரம்.
மனிதன் தன்னை கடவுளாக்க நிம்ரோத் காலத்தில் ஆரம்பித்தான்.
நிம்ரோத்தான் தன்னை கடவுளாக காண்பித்தான். அதை அழிப்பதற்க்கு தேவன் பற்பல மொழிகளை கொடுத்து அவர்களை தாறுமாறாக்கி ஐந்து கண்டங்களுகளுக்கு
மெசமபடமோபியாவிலிருந்து சிதறடித்தார். ஜீவ விருட்ச மரம் எங்கோ மறைக்கப்பட்டுள்ளதென நம் மாமிச கண்களுக்கு தெரியாதோ அதேபோல் பல விசயங்கள் உலகிற்க்கு தெரியாது.
அந்நிய பாஷையில் தேவன் நம்மோடு பேச விரும்புகிறார்
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா
தொடர்பு
9841711591.
Comments