உண்மையில் பெரியவர் யார்
உண்மையில் பெரியவன் யார்?.
(லூக் 22:24-30)
உண்மையிலே பெரியவனாயிருத்தல் இருதயத்திலும் உள்ளத்திலும் இருக்கும் ஆவியைப் பொருத்தது. கிறிஸ்துவின் மீது மிகுந்த தாழ்மையுடன் தன்னுடைய அன்பை வெளிப்படுத்துகிறவனிடம் அது வெளிப்படுகிறது.
(பிலி 2:3)
அவனுக்கு தேவனுக்கும், மனுஷருக்கும், ஊழியம் செய்யும் ஆசையும், ஆவலும் இருக்கும்.
தேவனுடைய இராஜ்ஜியத்தில் எல்லாருக்கும் கீழானவர் என்று ஆசைப்படுகிறவனே உண்மையில் பெரியவனாவான்.
1) பெரியவனாயிருப்பது ஒரு பதவியோ, அலுவலக நிலையோ, தலைமைத்துவமோ, அதிகாரமோ, செல்வாக்கோ, உயர்கல்வி பட்ட தகுதிகளோ, புகழோ, திறமையோ, பெரிய சாதனைகளோ, வெற்றியோ அல்ல.
நாம் தேவனுக்கு என்ன செய்கிறோம் என்பது முக்கியமானதல்ல, ஆவியில் நாம் எப்படி அவருக்கு முன்பாக இருக்கிறோம் என்பதை முக்கியமானது.
(லூக் 22:25-27; மத் 18:3-4; 20:25-28).
2) உண்மையில் ஒருவன் பெரியவனாயிருப்பதற்கு வாழ்க்கையில் சில பகுதிகளில் அவன் பெரியவனாக இருக்க வேண்டும். அவை விசுவாசம், தாழ்மை, தெய்வீக பண்பு, ஞானம், சுய கட்டுப்பாடு, பொறுமை, அன்பு ஆகியவற்றில் பெரியவர்களாக இருக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம்.
(கலா 5:22,23).
நீதியை நேசித்து, அக்கிரமத்தை வெறுத்த இயேசுவிடம் இருந்த உயர்ந்த பண்பு நம்மிடம் இருக்க வேண்டும்.
3)"உண்மையில் பெரியவன்" என்பது தேவனிடத்தில் இருதய பூர்வமான அன்பும், அர்ப்பணிப்பும் கொண்டிருத்தல் ஆகும். இதற்குத் தேவன் ஒருவனை எந்த இடத்தில், எந்த நிலையில் வைத்தாலும் அங்கு பரிசுத்தமுள்ளவனாகவும் உண்மையுள்ளவனாகவும் இருக்க வேண்டும். எனவே தேவனுடைய பார்வையில், தேவனுடைய இராஜ்யத்தில் பெரியவன் என்பவன் மிக அதிகமான அன்பும் அவருடைய வார்த்தையின் மீது மிகுந்த அர்ப்பணிப்பும் உடையவனே.
(லூக் 21:3; ரோம 12:12).
4) பரிசுத்தமான அர்ப்பணிப்பு தேவனுடைய பணியில் உங்கள் பலன்களை அதிகரிக்கச் செய்யும். தேவன் உங்களை எந்த இடத்தில் எதற்காக வைத்திருக்கிறாரோ, உங்களிடத்தில் எந்த தாலந்துகளை தந்திருக்கிறாரோ அந்த இடத்தில் தான் மிகுதியான பலன் கிடைக்கும்.
(ரோம 12:3-8; 1கொரி 12 அதிகாரம் முழுவதும்)
*பணிவிடை காரன்.*
(லூக் 22:27)
திருச்சபையை வழிநடத்த தெரிந்தெடுக்கப்பட்டவர்களைக் குறித்து (1தீமோ 3:1-7)
இயேசு கிறிஸ்து கூறுவது, அவர்கள் பணிவிடை செய்கிறவர்களாகவும், மற்றவர்களுக்கு தேவனுடைய சித்தம் அவர்கள் வாழ்வில் நிறைவேற உதவுகிறவர்களாகவும் இருக்க வேண்டும்.
அவர்கள் புகழையும், அதிகாரம், ஆஸ்தி, சிறப்பு சலுகைகளை நாடி தங்கள் பதவியை ஒருபோதும் தகாத வழியில் உபயோகிப்பதோ அல்லது தவறான வழியில் நடத்திச் செல்வதோ கூடாது.
தொடர்ந்து தேவனுக்காக உண்மையாக ஊழியம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்ந்து வாசியுங்கள்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென்.
கிறிஸ்துவின் பணியில் சகோதரன் சிலுவை ராஜா
தொடர்புக்கு 9841711591.
"உயர்ந்த முத்துக்கள்" என்ற மாத இதழ் தேவைப்படுவோர் உங்கள் விலாசத்தை என்னுடைய வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி தாருங்கள் மாதந்தோறும் இதை அனுப்ப நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். தொடர்ந்து எங்கள் ஊழியங்களுக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள்.
.
Comments