இந்த ஊழியம் குற்றப்படாதபடி
பிதாவாகிய தேவன் தம்முடைய குமாரன் இயேசு கிறிஸ்துவினால்
(மத் 10:1-5;28:18,19,20);
நமக்கு கொடுக்கப்பட்ட
இந்த ஊழியம் குற்றப்படாதபடிக்கு, நாங்கள் யாதொன்றிலும் இடறல் உண்டாக்காமல், எவ்விதத்தினாலேயும், எங்களை தேவஊழியக்காரராக விளங்கப்பண்ணுகிறோம்.
(2 கொரி 6:3)
இந்த கனமான ஊழியம்
உன்னதமான தேவனுக்கு செய்கிற உன்னதமான ஊழியமாகும்.
(அப் 16:17) இதற்கு நிகர் எந்த ஊழியமும் (வேலையும் அல்லது உயர் பதவியும்) இல்லை.
இந்த ஊழியத்தை உண்மையாக உத்தமமாக செய்ய வேண்டும்.
(1 தீமோ 1:12; எபி 3:2)
இந்த ஊழியம் நமக்கென்று கொடுக்கப்பட்ட தேசத்தில், பட்டணத்தில், கிராமத்தில், செய்து கொண்டே இருக்க வேண்டும். (அப் 19:17;எபே 1:1;
2தீமோ 1:18)
அதே வேளையில் அழைக்கப்பட்ட ஊழியங்களுக்கும் நாம் செல்ல வேண்டும்.
(அப் 10:5,8,29;)
நம்மை அழைக்கிறவர்கள் தங்களுடைய சபையில் குறிப்பிட்ட நோக்கத்திற்காக அழைக்கிறார்கள். பக்தி விருத்தி அடைவதற்காகவோ, அல்லது நல்ல ஆலோசனைகளை பெறுவதற்காகவோ, அல்லது வேதத்தின் இரகசியங்களை அறிந்து கொள்ளவோ, அல்லது, விடுதலை பெற்றுக் கொள்ளவோ, அல்லது சுகத்தைப் பெற்றுக் கொள்ளவோ, அல்லது அபிஷேகத்தை பெற்றுக் கொள்ளவோ, எல்லாவற்றுக்கும் மேலாக தேவனை நம் மூலமாக அறிந்து கொள்ளவோ இருக்கலாம். நம் மூலமாக தேவன் அவர்களுக்கு இரட்சிப்பை அருளுவதற்காக கூட இருக்கலாம்.
(அப் 10:29)இல் என்ன நோக்கத்திற்காக என்னை அழைத்தீர்கள் என்று பேதுரு கேட்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
இதைப் போல தான் சின்ன சின்ன சபைகளில் நல்ல சாட்சியுள்ள, பக்தி விருத்தியை உண்டாக்குகிற, அல்லது நற்செய்தி அறிவிக்கிற ஊழியர்களை அவர்கள் அழைக்கிறார்கள்.
ஆனால் இந்த ஊழியத்தை சிலர் குற்றப்படுத்தும் படியாக ஊழியர்கள் நடந்து கொள்கிறார்கள்.
சில ஊழியர்கள், தேதியை கொடுத்துவிட்டு அந்த நாளில் வராமல் வேறு எங்கேயாவது இதைவிட பெரிய ஊழியமாக இருந்தால் அங்கே போய் விடுவது.
அல்லது வெளிநாடுகளுக்கு சென்று விடுவது. அல்லது இவன் எல்லாம் ஒரு ஊழியக்காரனா ? இது ஒரு சபையா? என்று அசட்டை பண்ணுவது.
தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஊழியர் ஒருவர் வல்லமையாக தேவனால் பயன்படுத்தப்பட்டார்.
அவர் பெயர் துதி சங்கர் அநேக சபைகள் பயன்படுத்த ஆசைப்பட்டார்கள். அதேபோல் திருச்செந்தூர் அருகாமையில் உள்ள உடன்குடி கிராமத்தில் மூன்று நாள் கன்வென்ஷன் புக் செய்துவிட்டு அந்த கன்வென்ஷன் வராமல் வெளிநாடு சென்றார். அவருடைய முடிவு பரிதாபமாக இருந்தது.
2) தேவனுடைய ஊழியக்காரனோ, அல்லது தேவனுடைய சபையோ தன்னை குற்றம் சாட்டப்படாதபடிக்கு நடந்து கொள்ள வேண்டும்.
குற்றம் சாட்டாதே என்று சொல்லுவது நல்ல உபதேசம் தான். ஏனென்றால் சாத்தான் என்றால் குற்றம் சாட்டுகிறவன் என்று பொருள்.
நாம் தவறு செய்யும் போது எதிரே உள்ளவர்கள் சாத்தானாக மாற்றப்படுகிறார்கள்.
ஆகையால் தான் பவுல் அப்போஸ்தலன் இவ்வாறு சொல்லுகிறார் எங்களை தேவ ஊழியர்களாக விளங்கப் பண்ணுகிறோம். என்கிறார்.
தேவாதி தேவனுக்கு ஊழியம் செய்கிற அருமை ஊழியர்கள். உங்களுக்கு கொடுக்கப்பட்ட இந்த நல்ல உன்னதமான ஊழியத்தை, இந்த கனமான ஊழியத்தை, நீங்கள் கனத்துடன் கனப்படுத்தும் போது நீங்கள் இன்னும் கணப்படுத்தப்படுவீர்கள். என்பது உண்மை.
அதே நேரத்தில் இந்த ஊழியத்தை அற்பமாக எண்ணும்போது. 10 விசுவாசிகளை கொண்ட ஊழியக்காரனை அற்பமாக எண்ணும்போது
நீங்களும் அசட்டை பண்ண படுவீர்கள்.
என்பது உண்மை என்பதை புரிந்து கொண்டு கணம் பண்ணுவதில் ஒருவருக்கொருவர் முந்திக் கொள்ளுங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா
தொடர்புக்கு
9841711591.
Comments