ஜெபமே ஜெயம்
ஜெபமே ஜெயம்.
ஆபிரகாமுடைய ஜெபம் யாருக்காக?
அநீதிமான்களுக்காகவா ?
நீதிமான்களுக்காகவா?
(ஆதி 18:18,20;) சோதோம் கொமோராவின் அழிவைப் பற்றி ஆபிரகாமுக்கு வெளிப்படுத்தினார்.
ஆனால் ஆபிரகாமின் ஜெபம் நீதிமான்களுக்காக
(ஆதி 18:22;) கர்த்தருக்கு முன்பாக ஆபிரகாம்.
(ஆதி 18:23,--32 வரை)
ஆபிரகாமின் ஜெபம் நீதிமான்களுக்காக, தேவனின் பதில், நீதிமான்கள் அங்கே காணப்பட்டால் அழிப்பதில்லை என்றார்.
மோசேயின் ஜெபம் யாருக்காக ?
யாருக்காக மோசே திறப்பிலே நின்று ஜெபித்தார்.
(யாத் 32:11-13 வரை)
தேவனிடத்தில் கெஞ்சிப் பிராத்தித்தான்.
யாருக்காக ?
நம் சொந்த ஜனமாகிய இஸ்ரவேலருக்காக.
அப்போஸ்தலன் பவுல் இஸ்ரவேலர் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதே என் ஜெபமாய் இருக்கிறது என்றான்.(ரோம 10:1)
எஸ்தரின் ஜெபமும் உபவாசம் யாருக்காக ?
தங்கள் சொந்த ஜனமாகிய
யூத மக்களை காப்பாற்றுவதற்காக
(எஸ் 4:14, to 5:1,2,3 வரை)
அவளுடைய ஜெபத்தின் விளைவு: யூதர்களுக்கு பயப்படுகிற பயம் தேசத்தில் உண்டாயிற்று.
சத்துருக்கள் அழிக்கப்பட்டார்கள்.
(எஸ் 8:17; 9:12,13,14;)
இன்றைக்கு கிறிஸ்தவர்களை பற்றிய பயம் உலகத்தில் உள்ள அனைத்து ஜீவன்களுக்கும் ஜீவராசிகளுக்கும் தெரிந்திருக்க வேண்டும்.
(ஆதி 9:2)
பாவம் கிறிஸ்தவர்கள் அநேகர் பயந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள கிறிஸ்தவ கட்சிகள், கிறிஸ்தவ பாதுகாப்பு இயக்கம், கிறிஸ்தவ முன்னணி, இன்றைக்கு நமக்கு இயக்கங்கள் தேவையில்லை, பரிபூரண ஐக்கியம் ஜெபத்திலே எல்லாரும் ஒருமனப்பட வேண்டும். நமக்கு விரோதமாய் இருக்கிற காரியங்கள் நமக்கு சாதகமாக மாறும். அதற்கு தேவை சரியான ஜெப குறிப்புகள் தேவை.
ஊழியங்கள் வியாபாரம் மயமாக்கப்பட்ட படியால்
சத்தியங்கள் பொய்யாக்கப்பட்டு இருக்கிறது.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து யாருக்காக ஜெபித்தார்?
நான் உலகத்துக்காக வேண்டிக் கொள்ளாமல், நீர் எனக்கு தந்தவர்களுக்காக வேண்டிக் கொள்கிறேன்.
(யோவா 17:9;)
தேவ ஊழியர்களே
நீங்கள் சிந்திக்க வேண்டிய காலம். உங்கள் ஜெபக்குறிப்பு அல்லது உங்கள் ஜெப விண்ணப்பங்கள் யாருக்காக?
இயேசு கிறிஸ்து பிதாவின் வலதுபரிசத்தில் இன்றும் இரட்சிக்க பட்ட தேவனுடைய பிள்ளைகளுக்காக பரிந்து பேசுகிறாரா ? அல்லது யாருக்காக ?
வேதத்தை கேள்வி கேட்டு படிப்பதில்லை.
அழைப்பை பெறாமல் படிப்பை மாத்திரமே பெற்று வந்த ஊழியர்கள் ஏராளம்.
அவர்களுக்கு வேதத்தின் வெளிச்சம் கிடையாது.
அழைப்பை பெற்றவனே கண்திறக்கப்பட்டவன்.
கண் திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது சபை மனம் திரும்ப வேண்டும்.
சபை தேவ சித்தத்திற்கு வர வேண்டும்.
இந்த உலகம் இரட்சிக்கப்பட ஜெபம் இல்லை,
சுவிசேஷமே அதுவே உலகத்திற்கு தேவை.*
(மத் 28:19,20;ரோம 10:14,15,16;)
*ஜெபம் தேவனுடைய ஊழியர்களுக்கும், தேவனுடைய பிள்ளைகளுக்கும் மட்டுமே என்பதை புரிந்து கொள்ள வேண்டும்*
கீழே கொடுக்கப்பட்டுள்ள வேத வசனத்தின் படி உங்கள் ஜெப அமையட்டும். கர்த்தர் உங்கள் சிறையிருப்பை மாற்றுவார்.
-------------------------------------
1) உங்கள் சகோதரனுக்காக -
(1 யோ 5:16)
2) ராஜாக்களுக்காக
ஜானதிபதி,பிரதமர்,முதல்வர், அமைச்சர், எம் எல் ஏ, மேயர், கவுன்சிலர், வார்டு நம்பர்,
(1 தீமோ 2:2 ; ரோம 13:1,3,4;)
3) உங்களை நிந்திக்கிறவர்களுக்காக
(மத் 5:44)
4) உங்களை துன்பபடுத்துகிறவர்களுக்காக ( மத் 5:44)
5) தீங்கு அநுபவிக்கிறவர்களுக்காக - (எபி 13:3)
6) தனக்கான அல்லது நமக்கான ஜெபம்.
( 1 நாளா 4:10; ரோம 8:26,34,)
7) உங்கள் பிள்ளைகளுக்காக (ஆதி 17:18)
8) உங்கள் மனைவி/கணவனுக்காக
(ஆதி 25:21)
9) சகல பரிசுத்தவான்களுக்காக (ரோமர் 8:26:27; எபேசி 6:18;
அப் 12:5;)
10) உங்கள் நண்பர்களுக்காக - (யோபு 42:10)
11)சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்.
(மத் 26:41; மாற் 13:33; 14:38;லூக் 22:46; 1பேது 4:7;)
12) சுவிசேஷத்தின் வேலைக்காக ஊழியர்களை எழுப்பி தரும்படி ஜெபிக்க வேண்டும்.
(லூக் 10:2; மத் 9:37,38;).
13) திருச்சபை மக்களுக்கான ஜெபம். (கொலோ 1:5).
*திருச்சபை இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப்பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ண வேண்டாம்.*
(லூக்கா 21:36)
*சபையில் உள்ள எல்லா மனுஷர்களுக்காக
(1 தீமோ 2:1)*
*சபை ஒரு பொல்லாங்கும் செய்யாதபடி..(11கொரி 13:7;)*
*சபை நன்மையானதை செய்யும்படி
(11கொரி 13:7)*
*சபை நற்சீர்ப் பொருந்தும் படிக்கு
(11கொரி 13:9)*
*சபை எல்லா ஞானத்தோடும்,*
*சபை ஆவிக்குரிய விவேகத்தோடும்*
*சபை அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும்,*
*சபை சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தரும்படி,*
*சபை தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து,*
*சபை கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும்,*
*சபை சந்தோஷத்தோடே கூடிய எல்லாப்பொறுமையும் நீடியசாந்தமும் உண்டாவதற்கும்*
*சபை மகிமையான அவருடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்படவும்,*
(கொலோ 1:9-11)
*சபை பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்வதற்காக
(அப் 8:15,16;)*
*சபையார் முகத்தைக் கண்டு, உங்கள் விசுவாசத்தின் குறைவுகளை நிறைவாக்கும்பொருட்டு, இரவும் பகலும் மிகவும் வேண்டுதல் செய்ய வேண்டும்.*
(1 தெசலோ 3:10)
*போதகர் ,சபையார் அனைவரும் திருவசனத்தை தைரியமாய் சொல்வதற்காக ஜெபிக்க வேண்டும்.*
(அப் 4:29-31; எபே 6:20;)
*14) எருசலேம் சமாதானத்திற்க்காக
வேண்டிக்கொள்ளுங்கள்.*
(சங் 122:6)
*15) இஸ்ரவேலர் இரட்சிக்கப்படுவதற்காக ஜெபிக்க வேண்டும்.*
(ரோம 10:1)
வேதத்தின் உண்மையை சொல்லும்பொழுது அநேகருக்கு நான் சத்துருவாக தெரிகிறேன்.
அநேகருடைய பொய்யான முகங்கள் கிழிக்கப்படுகிறது.
வேஷங்கள் கலைக்கப்படும்.
நாடக மேடைகள் அகற்றப்படும்.
உண்மையைக் கண்டு பொய் ஒடும்.
சத்தியத்தை பேசுங்கள்.
வேதத்திற்கு உண்மையாக இருங்கள்.
உன்னை அழைத்த தேவனுக்கு உண்மையாக ஊழியம் செய்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா.
தொடர்புக்கு
9841711591.
Comments