மனுஷன் கிரியைகளினாலேயும்
மனுஷன் கிரியைகளினாலேயும் நீதிமானாக்கப்படுகிறான்.
(யாக் 2:24).
கிரேக்க சொல்லான "எர்கோன் "இங்கே அவன் செய்பவை என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இதே சொல் பவுல் அப்போஸ்தலன் பேசும்போது
(எபே 2:9)"கிரியைகள்"என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
ஆனால் யாக்கோபு இதை வித்தியாசமான பொருளுடன் பயன்படுத்துகிறான்.
1) யாக்கோப்பை பொறுத்தவரையில் "அவன் செய்யும் கிரியை"என்பது, பரிசுத்த வேதாகமத்தில் நமக்கு கட்டளையிட்டபடி தேவனுக்கும், மற்ற மனிதருக்கும் மனுஷன் செய்ய வேண்டிய கடமைகள் ஆகும்.
அவை ஒரு உண்மையான விசுவாசத்திலிருந்து தோன்றுபவை, ஒரு சுத்தமான இதயத்திலிருந்து வெளிப்படுபவை, தேவனுடைய கிருபையினால் தூண்டப்பட்டு செய்யப்படுபவை, கிறிஸ்துவைப் பிரியப்படுத்த வேண்டும் எனனும் எண்ணத்தில் செய்யப்படுபவை ஆகும்.
2) அப்போஸ்தலன் பவுலைப் பொருத்த வரையில் "கிரியைகள்" என்பவை ஒருவன் தன் சொந்த முயற்சியால், கட்டளைக்கு கீழ்ப்படிந்தாலும், இரட்சிப்பையும் தேவனுடைய பிரியத்தையும் பெற்றுக் கொள்வதற்காக திரும்பி செய்யப்படும் கிரியைகளைக் குறிக்கும். இவை கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தினால் மனந்திரும்பிச் செய்யப்படுபவை அல்ல.
3) பவுலும், யாக்கோப்பும்
"உண்மையான இரட்சிப்புக்கேற்ற விசுவாசம்,
அன்பினால் வரும் நற்கிரியைகளை தரும்"
என்று வலியுறுத்துவதை கவனிக்கவும்.
(யாக் 1:27; 2:8; கலா 5:6; 1கொரி 13; யோவா 14:15).
Comments