ஆகானும்... தேவனுடைய கோபமும்
உயர்ந்த முத்துக்கள்
ஆகானும்... தேவனுடைய கோபமும்.
(யோசு 7:1-26 வரை).
ஆகானின் பாவம், இஸ்ரவேலருக்குள் அதன் விளைவு, ஆகானும் அவனுடைய குடும்பமும் பெற்ற தண்டனை ஆகியவை தேவனுடைய மக்கள் பகிரங்கமாகப் பாவம் செய்யும் போது, வெளிப்படும் நியாயத்தீர்ப்பின் பல கொள்கைகள் காணப்படுகின்றன.
1) தேவனுடைய மக்களிடத்தில் பயங்கரமான பாவம் காணப்படும்போது, அல்லது அவர்கள் பாவம் பொறுத்துக் கொள்ளப்படும் போது, தேவனுடைய ஆசீர்வாதம் குறைக்கப்படுகிறது, தடுக்கப்படுகிறது, அல்லது இழக்கப்படுகிறது.
தங்கள் மத்தியிலிருந்து பாவத்தை விலக்க மறுக்கும் மக்களை தேவன் ஆசீர்வதிக்க மாட்டார்.
(யோசு 7:1,11-13,20,21,25; 1கொரி 5:1-13).
2) தேவனுடைய மக்களின் சபைக்குள்ளே வெளியேரங்கமான பாவம் இருந்தால் அது வெளியே இருந்து சத்துரு அதன் அங்கத்தினரைத் தன் அழிக்கும் சக்திக்கு உட்படுத்த ஏதுவாகும்.
யோசு 7:4-13 )
3) அப்படிப்பட்ட பாவங்கள் திருத்தப்படாமல் சகித்துக் கொள்ளப்பட்ட அவை நித்திய நியாயந்தீர்ப்புக்கு அவர்களை வழிநடத்தும்.(யோசு 7:13)
ஒருவேளை அந்த பாவம் வெளிப்படுத்தப்பட்டு, அறிக்கையிடப்பட்டு, விலக்கப்பட்டு விட்டால், பின்னர் தேவனுடைய ஆசீர்வாதங்களும், பிரசன்னமும், கிருபையும் அவர்கள் மீது திரும்பவும் வந்து சேரும்.
(யோசு 7:22-26; 8:1,18,19; அப் 4:31 முதல் 5:11 வரை)
4) தேவனுடைய மக்கள் மத்தியில் பாவம், மிகவும் ஆபத்தானதொன்றாக கருதப்பட வேண்டும். பரிசுத்தம் காக்கப்பட வேண்டும். கீழ்படிதல் கட்டாயமாக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் திருச்சபையின் ஆவிக்குரிய வளர்ச்சித் தடைபட்டு போகும்
அல்லது முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விடும்.
(வெளி 3:1-3; 14-18;).
விஷம் நிறைந்த பாம்புகளுடன் விளையாடுவதும் சரி பாவத்துடன் விளையாடுவதும் அல்லது தொடர்வதும் சரி
நிச்சயமாக அதில் விஷம் நம்மை மரணத்திற்கு எதிராக கொண்டு செல்லும்.
ஆகையால் இந்த பாடத்தில் பாவத்தை வெறுத்து உதறித் தள்ளுங்கள். பரிசுத்தத்தை நோக்கி செல்லுங்கள். கட்டாயமாக கீழ்படியுங்கள். ஆசீர்வாதத்தை தொடர்ந்து பெற்றுக் கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா
தொடர்புக்கு
9841711591.
Comments