மனுஷர் காண வேண்டும் என்று
மனுஷர் காணவேண்டுமென்று, அவர்களுக்கு முன்பாக, நன்மையான காரியங்களைச் செய்ய வேண்டாம்.*
(மத் 6:1)
*இங்கே சொல்லப்பட்டிருக்கும் கொள்கை, நாம் நீதியான காரியங்களைச் செய்வதன் உள்நோக்கம் என்ன என்று நம்மை சிந்திக்க வைக்கிறது.*
1) விசுவாசிகள், அவர்கள் ஊழியக்காரர்களகவோ. சபை மக்களாகவோ இருந்தாலும் அவர்கள் மற்றவர்கள் கண்டு, தங்களை புகழ வேண்டும் என்னும் நோக்கத்துடன் அவர்களுக்கு முன்பாகவோ, அல்லது சொந்த சுயநல நோக்கத்துடனோ, நன்மையான காரியங்களைச் செய்தால், அவர்கள் தேவனிடமிருந்து பாராட்டையோ, பரிசுகளையோ அதற்காக பெற்றுக்கொள்வதில்லை. *அதற்குப் பதிலாக ஆண்டவருக்கு மகிமை செலுத்துகிறோம் என்ற போர்வையில், தங்களுக்கே மகிமை தேடிக் கொள்ளுகிற அவர்கள் மாயமலக்காரர்கள் என்று அறிவிக்கப்படுவார்கள்.*
ஆகையால் உதவி செய்வதை மீடியா மூலமாக பரப்புவதை தவிர்த்து விடுங்கள்.
ஊழியம் கர்த்தருக்கு முன்பாக செய்யப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஏழைகளுக்கு செய்யும் பொழுது கர்த்தருக்கு கடன் கொடுக்கிறோம் என்பதை நினைவு கூறுங்கள். கர்த்தர் அதை திரும்ப உங்களுக்கு தருவார் என்பதை நம்புங்கள்.
2) மூன்று வகையான நீதியின் கிரியைகளைப் பற்றி இயேசு கிறிஸ்து கூறுகிறார்.
அ) கொடுத்தல்.
(மத் 6:2-4),
ஆ) ஜெபித்தல்.
(மத் 6:5-8),
இ) உபவாசம் செய்தல்.
(மத் 6:16-18).
*நீதியின் கிரியைகளை மற்றவர்கள் காண வேண்டும் என்று செய்கிறவர்களை இயேசு கிறிஸ்து கண்டனம் செய்தது இன்றைய கிறிஸ்தவர்களின் அநேக செயல்களுக்கு சவாலாயிருக்கிறது.*
*உயர் பதவிகளுக்கு போட்டியிடுதல்,
ஒருவரின் வெற்றியை எங்கும் விளம்பரம் செய்தல்,
ஆலயத்தில் பெயர் பிரஸ்தாபத்துக்கான நாடகங்கள், களியாட்டங்கள் நடத்துதல், முதன்மையான இடத்தை பெற நாடுதல்,
(1கொரி 3:13-15; 4:5;) ஆகியவை இதில் அடங்கும்.*
தொடர்ந்து தேவனுடைய வேத வாக்கியங்களை சிந்தித்துப் பாருங்கள். அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டு.
நித்திய ஜீவனை இழந்து போகும் அளவுக்கு உங்கள் ஊழியங்கள் இருக்க வேண்டாம்.
உங்கள் தான தர்மங்கள் தேவனுடைய சமூகத்தில் நினைவு கூறப்படுவதாக இருக்கட்டும்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். ஆமென்.
கிறிஸ்துவின்
பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா
தொடர்புக்கு
98 41 711 591.
Comments