நானே மெய்யான திராட்சை செடி

நானே மெய்யான திராட்சை செடி. 
(யோவா 15:1)

இந்த உவமை அல்லது தொடர் உருவகத்தில் இயேசு, தம்மை "மெய்யான திராட்சை செடி"என்றும், அவருடைய சீசர்களாக மாறினவர்களை "கொடிகள்"என்றும் விவரிக்கிறார். 
ஜீவ ஊற்றாகிய அவரிடம் நிலைத்திருக்கும் போது அவர்கள் கனி கொடுக்கிறார்கள். தேவன், அவைகள் அதிக கனி கொடுக்கும்படி கொடிகளை கவனித்துக் கொள்ளும் தோட்டக்காரராய் இருக்கிறார். 
(யோவா 15:2,8)
நாம் எல்லாரும் கனி கொடுக்க வேண்டுமென்று தேவன் எதிர்பார்க்கிறார்.

கொடி எதுவோ. 
(யோவா 15:2)

இயேசு கிறிஸ்து இரண்டு வகையான கொடிகளைப் பற்றி கூறுகிறார். கனி கொடுப்பது, கனி கொடுக்காதது.
1) கனி கொடுப்பதை நிறுத்தி விடும் கொடிகள் எவை என்றால், கிறிஸ்துவில் நிலைத்த விசுவாசமும், அன்பும் கொள்வதால் வரக்கூடிய ஜீவன் தங்களில் இல்லாமற் போனவர்கள். இந்த கொடிகளை பிதா அறுத்து விடுகிறார்.
அதாவது கிறிஸ்துவுடனுள்ள முக்கியமான தொடர்பிலிருந்து பிரித்து விடுகிறார்.
(மத் 3:10) கிறிஸ்துவில் நிலை நிற்பதை அவர்கள் நிறுத்தினவுடன் தேவன் அவர்களே நியாயந் தீர்த்து புறக்கணித்து விடுகிறார்.
(யோவா 15:6)

2) கனி கொடுக்கும் கொடிகள், கிறிஸ்துவில் நிலைத்த விசுவாசமும், அன்பும் கொண்டிருப்பதால், அவைகள் தங்களின் ஜீவனுள்ளதாக இருக்கும்.
இந்த கிளைகளை பிதா அதிக கனிகளைக் கொடுக்கம்படி சுத்தம் பண்ணுகிறார். அதாவது, தங்களுக்குள் கிறிஸ்துவின் ஜீவன் வரத் திசை திருப்பம் அல்லது தடை பண்ணும் எதையும் அவர்கள் வாழ்க்கையில் இருந்து அகற்றி விடுகிறார். தங்கள் வாழ்க்கையின் மூலமும், சாட்சியின் மூலமும், 
(மத் 3:8; 7:20;ரோம 6:22;கலா 5:22-23;எபே 5:9;பிலி 1:11;) தேவனுக்கு மகிமை கொண்டுவரும் கிறிஸ்தவனுடைய நடத்தையும் தன்மையே கனியாகும்.


Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை