சாத்தான்
சாத்தான்
(மத் 4:10)
சாத்தான், (எபிரேய மொழியில் பொருள்,
"குற்றஞ்சாட்டுகிறவன்."அல்லது "எதிராளியானவன்.")
முதலில் பரிபூரணமானவனாகவும், நல்லவனாகவும் படைக்கப்பட்ட ஒரு தேவ தூதன்.
அவன் தேவனுடைய சிங்காசனத்துக்கருகில் ஒரு ஊழியக்காரனாக நியமிக்கப்பட்டிருந்தான்.
இந்த உலகம் உண்டாக்கப்படுவதற்கு முன்னரே, அவன் கலகம் செய்து தேவனுக்கு முக்கிய எதிராளியாகிவிட்டான்.
அவனே பின்னர் மனித இனத்துக்கும் எதிரியாகிவிட்டான்.
(எசே 28:12-15).
1) சாத்தான் தேவனுக்கெதிராகச் செய்த கலகத்தில் தனக்குக் கீழ்ப்பட்ட ஒரு திரள் கூட்ட தேவதூதர்களைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டான்.
(வெளி 12:4)
இவர்கள் தான் அவர்களுடைய வீழ்ச்சிக்குப் பின்னர் பேய்கள், அசுத்த ஆவிகள், இன்று நாம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டியதாயுள்ளது.
சாத்தானும் அவனுடன் கூடிய மற்ற சிறிய தேவ தூதர்கள் கூட்டமும் பூமியிலும், பூமியைச் சுற்றியுள்ள வான மண்டலங்களில் சஞ்சரிக்க பூமிக்கு துரத்தப்பட்டு இந்த பகுதிகளில் தேவனுடைய சித்தத்துக்கு உட்பட்டு அவை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.
2) "சர்ப்பம்" எனவும் அழைக்கப்படும் சாத்தான் மனித குலத்தைப் பாவத்தில் விழச் செய்தது.
(ஆதி 3:1-6; 1யோவா 5:19;)
3) சாத்தானின் இராஜ்ஜியம்
(மத் 12:26)
அது மிகவும் திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்ட தீமை நிறைந்த இராஜ்ஜியம். அவன் வான மண்டலத்தின் மேலும்,
(எபே 2:2),
கீழே விழத்தள்ளப்பட்ட தேவதூதர் கூட்டம்.
(மத் 25:41; வெளி 12:7;)
மனந்திரும்பாத மனித சமுதாயம்
(மத் 4:8,9;யோவா 12:31;எபே 2:2),
இந்த உலகம்
(லூக் 4:5,6; 2கொரி 4:4; 1யோவா 5:19) ஆகியவற்றின் மேலும் அதிகாரம் செலுத்தக்கூடியவனாய் உள்ளான்.
*சாத்தான் எங்கும் நிறைந்தவன் அல்ல;
சர்வ வல்லமை உள்ளவனல்ல; எல்லாவற்றையும் அறிந்தவனுமல்ல.*
எனவே அவனுடைய பெரும்பாலான வேலைகள் மற்றப் பிசாசுகளுக்கு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
(மத் 8:28; வெளி 16:13,14;
யோபு 1:12).
4) சாத்தானின் கிரியைகளை அழிப்பதற்கும்,
(1யோவா 3:8)
தேவனுடைய இராஜ்யத்தை ஸ்தாபிக்கவும், நம்மை சாத்தானுடைய பிடியிலிருந்து விடுவிக்கவும் (மத் 12:28;லூக் 4:18; 13:16;அப் 26:18)
இயேசு கிறிஸ்து இவ்வுலகத்துக்கு வந்தார். அவர் தமது மரணத்தினாலும், உயிர்த்தெழுதலாலும், சாத்தானின் தோல்விக்கு வழிவகுத்தார். அதன் மூலம் தேவனுடைய இறுதி வெற்றி சாத்தியமாயிற்று.
(எபி 2:14).
5) கடைசிக் காலத்தில் சாத்தான் பாதாளத்தில் (1000)ஆயிரம் வருஷம் அடைத்து வைக்கப்பட்டிருப்பான்.
(வெளி 20:1-3)
அங்கிருந்து அவன் விடுவிக்கப்பட்ட பின்னர் மறுபடியும் தேவனை முறியடிக்க சாத்தான் முயற்சி செய்வான். அது அவனது இறுதி முயற்சி ஆகும். ஆனால், இந்த முயற்சியிலும், அவன் தோல்வியடைவான்.
இறுதியில் சாத்தான் அக்கினிக் கடலில் தள்ளப்படுவான்.
(வெளி 20:7-10).
6) சாத்தான் இக்காலத்தில் தேவனிடமும், அவருடைய மக்களிடமும், எதிர்த்துப் போர் புரிந்து கொண்டிருக்கிறான்,
(யோபு 1,2, அதிகாரங்கள் மற்றும், எபே 6:11-18),
மக்களைக் கிறிஸ்துவிடமிருந்து பிரித்து அவர்கள் அவருக்கு உண்மையாயிராதபடித் தடுக்க முயற்சிப்பான்,
(2கொரி 11:3;)
மக்களை உலகத்தின் தற்கால வாழ்வு முறைகளுக்கு அடிமைப்படுத்தி அவர்களைப் பாவத்தில் விழச் செய்ய முயற்சிப்பான்.
(2கொரி 11:13; 1தீமோ 5:15;1யோவா 5:16)
விசுவாசிகள் சாத்தானிடமிருந்து விடுதலை பெற இடைவிடாது ஜெபிக்க வேண்டும். (மத் 6:13).
சாத்தான் விரிக்கும் தந்திரமான வலைகளில் சிக்கிக் கொள்ளாமலும், சோதனைகளில் வீழ்ச்சி அடையாமலும் விழிப்புடன் இருக்க வேண்டும். (எபே 6:11)
விசுவாசத்தில் உறுதியாய்த் தரித்திருந்து ஆவிக்குரிய போராட்டத்தில் அவனை எப்போதும் எதிர்த்து நிற்க வேண்டும்.
(எபே 6:10-18; 1பேது 5:8,9).
சாத்தானின் செயல்பாடுகளையும் அவனுடைய குணங்களையும் அறிந்து கொள்ள இந்த பதிவின் மூலம் தேவ ஆவியானவர் உதவி செய்து இருக்கிறார். மேலும் கிறிஸ்துவானவர் என்ன செய்தார் என்பதையும் நாம் அறிந்திருக்கிறோம்.
தொடர்ந்து வேதத்தின் துணைகொண்டு உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் நீங்கள் பலப்படுங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா
தொடர்புக்கு
98 41 711 591.
Comments