இரண்டு வஸ்திரம்
இரண்டு அங்கிகளைத் தரியாதிருக்கவும் கட்டளையிட்டார்
இரண்டு அங்கி என்பது இரண்டு விதமான வாழ்க்கையையே குறிக்கிறது, அதாவது ஆலயத்திற்கு ஒரு விதமான வஸ்திரம், வெளியே ஒரு விதமான வஸ்திரம் என்று இருக்க வேண்டாம், எப்பொழுதும் கிறிஸ்துவை தரித்தவர்களாகவே இருப்போம்.
இதை குறித்து, மத்தேயு தன்னுடைய சுவிஷேச புஸ்தகத்தில், இரண்டு அங்கிகளை தேடி வைக்கவேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் புறஜாதியார் நாடுகளுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும்,
காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள்.
போகையில், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கியுங்கள்.
வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தம்பண்ணுங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்; இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்.
உங்கள் கச்சைகளில் பொன்னையாவது, வெள்ளியையாவது, செம்பையாவது,
வழிக்காகப் பையையாவது,
இரண்டு அங்கிகளையாவது,
பாதரட்சைகளையாவது, தடியையாவது தேடி வைக்கவேண்டாம்; வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்.(மத்தேயு 10:5-10 )
லூக்காவும் தன்னுடைய சுவிஷேச புஸ்தகத்தில், இரண்டு அங்கிகளைக் கொண்டுபோகவும் வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார் -
அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷரையும் வரவழைத்து, சகல பிசாசுகளையும் துரத்தவும், வியாதியுள்ளவர்களைக் குணமாக்கவும் அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்து,
தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவும், பிணியாளிகளைச் சொஸ்தமாக்கவும் அவர்களை அனுப்பினார்.
அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: வழிக்குத் தடியையாவது பையையாவது அப்பத்தையாவது காசையாவது எடுத்துக்கொண்டு போகவேண்டாம்; இரண்டு அங்கிகளைக் கொண்டுபோகவும் வேண்டாம்.
எந்த வீட்டிலே பிரவேசிக்கிறீர்களோ, அங்கே தங்கி, அங்கிருந்து புறப்படுங்கள்.
உங்களை ஏற்றுக்கொள்ளாதவர்கள் எவர்களோ அவர்களுடைய ஊரைவிட்டு நீங்கள் புறப்படும்போது, அவர்களுக்குச் சாட்சியாக உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள் என்றார்.
அவர்கள் புறப்பட்டுப்போய், கிராமங்கள்தோறும் திரிந்து, எங்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, பிணியாளிகளைக் குணமாக்கினார்கள் - (லூக்கா 9:1-6)
மாற்க் தன்னுடைய சுவிஷேச புஸ்தகத்தில், இரண்டு அங்கிகளைத் தரியாதிருக்கவும் கட்டளையிட்டார் என்று குறிப்பிட்டுள்ளார் -
அவர் பன்னிருவரையும் அழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்த அவர்களுக்கு அதிகாரங்கொடுத்து,
வழிக்குப் பையையாகிலும், அப்பத்தையாகிலும், கச்சையில் காசையாகிலும், எடுத்துக்கொண்டுபோகாமல், ஒரு தடியை மாத்திரம் எடுத்துக்கொண்டு போகவும்;
பாதரட்சைகளைப் போட்டுக்கொண்டுபோகவும், இரண்டு அங்கிகளைத் தரியாதிருக்கவும் கட்டளையிட்டார்.
பின்பு அவர்களை நோக்கி: நீங்கள் எங்கேயாகிலும் ஒரு வீட்டில் பிரவேசித்தால், அவ்விடத்தை விட்டுப் புறப்படுகிறவரைக்கும் அங்கேதானே தங்கியிருங்கள்.
எவர்களாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வசனங்களைக் கேளாமலும் இருந்தால், நீங்கள் அவ்விடம் விட்டுப் புறப்படும்போது, அவர்களுக்குச் சாட்சியாக உங்கள் கால்களின் கீழே படிந்த தூசியை உதறிப்போடுங்கள். நியாயத்தீர்ப்புநாளிலே அந்தப் பட்டணத்திற்கு நேரிடுவதைப்பார்க்கிலும் சோதோம் கொமோரா பட்டணத்திற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, அவர்களை இரண்டு இரண்டுபேராக அனுப்பினார்.
அவர்கள் புறப்பட்டுப்போய்: மனந்திரும்புங்கள் என்று பிரசங்கித்து;
அநேகம் பிசாசுகளைத் துரத்தி, அநேகம் நோயாளிகளை எண்ணெய் பூசிச் சொஸ்தமாக்கினார்கள் (மாற்கு 6:12-13)
அதாவது நம்மிடம் உள்ள அனைத்து வஸ்திரங்களும், ஆலயத்திற்கு அணிந்து செல்லும் விதமான(தகுதியுள்ள) வஸ்திரங்களாகவே இருக்க வேண்டும்.
பரிசுத்த வேதாகமத்தில் வஸ்திரம் என்ற வார்த்தை பல இடங்களில் காணப்படுகிறது. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான காரணங்களுக்காக வஸ்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து சில தகவல்கள் பின்வருமாறு:
*பாதுகாப்பு:*
வஸ்திரம் என்பது வெயில், குளிர் போன்ற இயற்கை சீற்றங்களிலிருந்து உடலைப் பாதுகாக்கும் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டது.
போர் போன்ற ஆபத்தான நேரங்களிலும் வஸ்திரம் ஒரு பாதுகாப்பு கவசமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
*அடையாளம்:*
ஒவ்வொரு சமூகத்திலும் அவர்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு ஏற்ப வஸ்திரம் மாறுபடுகிறது.
ராஜ வஸ்திரம் என்பது அரசர்கள் மற்றும் முக்கிய தலைவர்களின் அடையாளமாக பயன்படுத்தப்பட்டது.*
*மரியாதை:*
பழங்காலத்தில் மரியாதைக்குரியவர்களைச் சந்திக்கும்போது, தூய்மையான மற்றும் விலையுயர்ந்த வஸ்திரங்களை அணிவது வழக்கம்.
திருச்சபைகளுக்குச் செல்லும்போதும், கடவுளை வழிபடும்போதும் தூய்மையான வஸ்திரங்களை அணிவது முக்கியமாகக் கருதப்பட்டது.
*மனத்தாழ்மை:*
மனத்தாழ்மையின் அடையாளமாக, எளிமையான மற்றும் சாதாரண வஸ்திரங்களை அணிவது வழக்கம்.
*பாவ மன்னிப்பு*
கேட்கும்போதும், கடவுளிடம் மன்றாடும்போதும் கிழிந்த அல்லது அழுக்கான வஸ்திரங்களை அணிவது மனத்தாழ்மையின் வெளிப்பாடாகக் கருதப்பட்டது.
*அலங்காரம்:*
திருமணங்கள் மற்றும் பண்டிகைகள் போன்ற சிறப்பு நேரங்களில், அலங்காரமான மற்றும் வண்ணமயமான வஸ்திரங்களை அணிவது வழக்கம்.
பெண்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்ள பலவிதமான வஸ்திரங்களை அணிந்தனர்.
*ஆன்மீகம்:*
பைபிளில் வஸ்திரம் என்பது ஆன்மீக ரீதியாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக, இயேசு கிறிஸ்துவின் வஸ்திரம் குணமாக்கும் சக்தியைக் கொண்டிருந்ததாக நம்பப்பட்டது.
கிறிஸ்தவர்கள் தூய்மையான வாழ்வை வாழ்வதைக் குறிக்கும் வகையில் வெள்ளை வஸ்திரம் அணிவது வழக்கம்.
Comments