அவருக்கு பயந்தவர்களுக்கு

அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை.
(சங் 34:9)

இந்த சங்கீதத்திலுள்ள வாக்குத்தத்தங்கள், உண்மையாகவே கர்த்தருக்கு பயப்படுகிறவர்களுக்கு மாத்திரமே ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது என்ற நிபந்தனையுடனிருப்பதைக் கவனிக்கவும். 
தேவன் நம்மை பயத்திலிருந்து விடுதலையாக்குவதாக வாக்களித்திருக்கிறார்.
(சங் 34:4) . 
இடுக்கணிலிருந்து
இரட்சிப்பார்.(சங் 34:6,17;)
நம்மை சுற்றிலும் பாளையமிறங்கும் படி தேவ தூதர்களை அனுப்புவார். 
(சங் 34:7)
தேவையானதைக் கொடுப்பார்.
(சங் 34:9)
முழுமையான வாழ்வை தருவார். 
(சங் 34:12)
ஜெபங்களுக்கு செவி கொடுப்பார்.
(சங் 34:15)
அவருடைய சமூகத்தினால் தேற்றுவார். (இரட்சிக்கிறார்.)
(சங் 34:18)
மீட்டுக் கொள்வார். 
(சங் 34:22)
ஆனால் கர்த்தரைக் கீழ்க்கண்டவாறு தேடினால் மாத்திரமே அவை வாய்க்கும். 
(சங் 34:4,10)
அவரை நோக்கிக் கூப்பிட வேண்டும்.
(சங் 34:6,17)
நம்முடைய நாவுகளைக் கபட்டு வசனிப்புக்கு விலக்கிக் காத்துக் கொள்ள வேண்டும்.
(சங் 34:13)
பொல்லாத உலகத்துக்கு விலகியிருக்க வேண்டும் 
(சங் 34:14)
நருங்குண்ட இருதயங்களைக் கொண்டிருக்க வேண்டும் 
(சங் 34:18)
மேலும் அவருடைய ஊழியக்காராக வேண்டும்.
(சங் 34:22).
ஒவ்வொரு ஆசீர்வாதங்களை சுதந்தரிக்க வேண்டுமானால் 
எப்படிப்பட்ட நிபந்தனைகள் கொடுக்கப்படுகிறது என்பதை இந்த சங்கீதத்தின் மூலமாக நாம் கற்றுக் கொள்ளலாம். 
நிபந்தனை இல்லாமல் எந்த ஆசீர்வாதத்தையும் நாம் பெற்றுக் கொள்ள முடியாது. நிபந்தனையை நிறைவேற்ற முயற்சி செய்யும்போதே கர்த்தர் நம்மை ஆசீர்வதிக்கிறார். ஆமென். 
கிறிஸ்துவின் பணியில் 
சகோதரன் 
சிலுவை ராஜா 
தொடர்புக்கு 
98 41 711 591.

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை