3)நீதிமானாகுதல்:
நீதிமானாகுதல்:
"நீதிமானாக மாற்றுதல்" என்பது "தேவனுடைய பார்வையில் நீதிமானாய் இருத்தல்"இன்று பொருள்படும்.(ரோம 2:13).*
கிரேக்க மொழியில் இதை
"டிகாயூ" என்பர். இதற்கு இப்படியும் பொருள் கொள்ளலாம். (ரோம 5:18,19). "சரியானவர்கள் என்று உறுதிப்படுத்தல்" அல்லது "சரிப்படுத்துதல் அல்லது சரி செய்தல்". அது, வெறுமனே சட்டரீதியாக, நீதி முறைப்படி பெற்ற அறிக்கை என்பதை விட தேவனோடு சரியான உறவு கொண்டிருப்பதை மேலானதாகக் குறிக்கிறது.
தேவன் நியாயபிரமாணத்தின் படி குற்றம் சாட்டப்பட்ட, நித்திய மரணத்துக்கென்று ஆக்கினைத் தீர்ப்பு பெற்ற பாவிகள் மனந்திரும்புகிற போது அவர்களுடைய பாவத்தை மன்னித்து, தெய்வீக அன்புக்கும் மறுபடியும் பாத்திரவான்களாகி தம்மோடும், தம் சித்தத்தோடும் அவனுக்கு ஒரு சரியான உறவை (ஐக்கியத்தை) உண்டாக்குகிறார். அப்போஸ்தலாகிய பவுல், நீதிமானாகுதல் பற்றியும் அது எப்படி நிறைவேறுகிறது என்பதைப் பற்றியும் சில உண்மைகளை வெளிப்படுத்துகிறான்.
1) தேவனோடு ஒப்புரவாகுதல் என்பது ஒரு வரம்.
(ரோம 3:24;எபே 2:8;).
ஒருவரும் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டதினாலோ, நற்க்கிரிகளைச் செய்ததினாலோ தம்மை பூரணமாக தேவனோடு ஒப்பரவாகச் செய்ய முடியாது.
ஏனென்றால்(ரோம 4:2-6) எல்லோரும் பாவம் செய்து தேவமகிமையற்றவர்களாகி"
(ரோம 3:23) என்று கூறப்பட்டுள்ளது.
2) தேவனோடு ஒப்புரவாகுவது
"கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக் கொண்டு" நடைபெறுகிறது. (ரோம 3:24)
கிறிஸ்துவினால் பாவத்திலிருந்தும், அதன் வல்லமையிலிருந்தும் மீட்கப் படாதவர்கள் நீதிமான்களாக்கப்பட முடியாது.
3) தேவனோடு ஒப்புரவாகுவது "அவருடைய கிருபையினாலும்"இயேசு கிறிஸ்துவை ஆண்டவரும் இரட்சகருமாக பற்றிக்கொண்டு, விசுவாசத்தினாலே அவரை தமக்கு சொந்தமாக்கிக் கொள்வதின் மூலமும் வருகிறது.
(ரோம 3:22-24; 4:3-5).
4) தேவனோடு ஒப்புரவாகுவது, நம் பாவம் மன்னிக்கப்படும் செயலோடு தொடர்புடையது. (ரோம 4:7)
பாவிகள், குற்றவாளிகளாக தீர்க்கப்படுகின்றனர்.
(ரோம 3:9-18,23) ஆனால், கிறிஸ்துவின் பிராயச்சித்த மரணத்தினாலும், உயிர்த்தெழுதிலினாலும், அவர்கள் மன்னிப்பை அடைகிறார்கள்.
(ரோம 3:25; 4:5; 5;6-9)
5) *கிறிஸ்துவினால் விசுவாசத்தின் மூலம் நாம் தேவனோடு ஒப்பரவாகும்போது, நாம் சிலுவையில் அறையப்படுகிறோம்.* அதனால் கிறிஸ்து நம்மில் வாசஞ்செய்ய வருகிறார்.
(கலா 2:16-21) இந்த அனுபவத்தின் மூலம், நாம் நீதிமான்களாக்கப்பட்டு, தேவனுக்கென்று வாழ ஆரம்பிக்கிறோம்.
(ரோம 2:19-21). ஆவியானவரின் மூலம் நம்மில் கிறிஸ்து மறுரூபமாக்குதலின் செய்யும் கிரியை (2தெச 2:13; 1பேது 1:2) நம்மில் கிறிஸ்து நடப்பிக்கும் மீட்பின் கிரியையிலிருந்து வேறுபடுத்த முடியாது. கிறிஸ்துவின் வேலையும், ஆவியானவரின் வேலையும் ஒன்றையொன்று சார்ந்துள்ளது.
நீதிமானாகுதல் என்பதை கொஞ்சம் கொஞ்சமாக வேத வசனத்தின் ஆதாரமாகக் கொண்டு அறிந்து கொள்ள முடிகிறது. மேலும் நாம் நீதிமானாய் வாழ்வதற்கு நாம் எடுக்கிற தீர்மானங்கள் சிந்திப்போம். முயற்சி செய்வோம். கிரியைகள் மூலம் வெளிப்படுத்துவோம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். ஆமென்.
கிறிஸ்துவின்
பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா
தொடர்புக்கு
98 41 711 591.
Comments