புது உடன்படிக்கையின் சபை

புதிய உடன்படிக்கையின் சபை--அது என்ன ?

கிரேக்க மொழியில் "எக்ளீஷியா" என்ற வார்த்தை பரிசுத்த வேதாகமத்தில் 115 முறை வருகிறது.
"அழைக்கப்பட்டு பிரித்தெடுக்கப்பட்டவர்"என்று பொருள். 
அழைக்கப்பட்டு வேறு பிரிக்கப்பட்டோர் என்ற அர்த்தத்தில் தான் இப்பொழுதும் அதை பயன்படுத்துகிறோம். ‌ ஆயினும், உலகத்திலுள்ள பலவித சபைகளை வேறுபடுத்திக் காட்டவும் இவ்வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. 
ஆராதனைக்காக ஒன்று கூடுகின்ற கர்த்தரின் பிள்ளைகளின் கூட்டத்திற்கும் இவ்வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
(1கொரி :11:18; 14:4,5,12,19,23,28,35; எபி 2:12).

*கிறிஸ்து சபையின் தலைவர்.*

*போப் ஆண்டவரோ, பிஷப்போ, பாஸ்டரோ, கர்தினாலோ, குருக்களோ, அப்போஸ்தலர்களோ, தீர்க்கதரிசிகளோ,சபைக்கு தலைவர்கள் அல்ல. 
வழிகாட்டிகள் மட்டும் தான். 
கிறிஸ்து தான் சபைக்கு தலைவர். *

(மத் 23:8-10;யோவா 13:13, 15:1-8; அப் 2:33; ரோம 8:29; 9:5;
1கொரி 11:3; 12:5; எபே 1:9,10,
22-23; 4:15; 5:23-32; கொலோ
1:13,18,24, 3:11; எபி 3:3,6; வெளி
1:13,20).

*சபை உருவாக்கப்பட்டதின் நோக்கம்.*

புதிய ஏற்பாட்டின் பணிகள். 

1) நற்செய்தியை அறிவிக்க: 
பிரசங்கித்தல் என்ற வார்த்தை 50 முறையும், பிரசங்கித்தனர் என்ற வார்த்தை 61 முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
(மாற் 16:15; அப் 1:1)

2) அறிவிக்கப்பட்ட நற்செய்தியை உறுதிப்படுத்த:
 
ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருப்பதை
உறுதிப்படுத்தப்படுகிறது. 
(மத் 4:23-24; 9:35;)

*அறிவிக்கப்பட வேண்டிய 7 தரப்பினர்.*
1) தரித்திரர் (ஏழைகள்) 
(லூக் 4:18; 7:22;).

2) சாத்தானின் பிடியிலிருப்பவர்கள்.
(சிறைப்பட்டவர்கள்) 
(லூக் 4:18)

3) யூதர்கள். 
(அப் 11:19,20;)

4) புறஜாதிகள். 
(கலா 2:2; எபே 3:8).

5) அஞ்ஞானிகள். 
(கலா 1:16; 1கொரி 12:2)

6) பூமியில் வாழ்கின்றவர்கள். 
(வெளி 14:6)

7) சர்வ சிருஷ்டிக்கும். 
(மாற் 16:15; கொலோ 1:23)

*அறிவிக்கப்பட வேண்டிய ஏழு இடங்கள்.*
1) உலகம் முழுவதும். 
(மத் 24:14; மாற் 16:15).

2) எல்லா இடங்களிலும். 
(அப் 8:4)

3) பட்டணங்களில். 
(மத் 11:1; அப் 8:40)

4) நகரங்களில். 
(மாற் 1:38)

5) ஜெப ஆலயங்களில். 
(மாற் 1:39; லூக் 4:44)

6) வீட்டின் மேல் தளங்களில். 
(மத் 10:27)

7) எல்லைக்கு அப்பால் வாழ்வோர். 
(2கொரி 10:16).


*அறிவிக்கப்பட வேண்டிய 30 செய்திகள்*

1) விடுதலையின் சுவிசேஷம்  (ஏசா, 61:1; லூக், 4:18).

2)பரலோக ராஜ்யம்
(மத் 4:17; 9:35; 10:7; 24:14; மாற் 1:14;).

3)தேவனுடைய ராஜ்யம்  (லூக், 4: 43, 9:2, 60; 16:16; அப், 8:12, 20:25;)

4)மனந்திரும்புதல் - 
(மத், 3:1, 2; லூக், 24:47; ).

5) நீரினால் ஞானஸ்நானம் - (மாற், 1:8; லூக், 3:6;)

 6 )ஆவியினால் ஞானஸ்நானம்-
(மாற், 1:8; லூக், 3:16; யோவா, 1:33, 7:37-39; அப், 1:4-8;) 

7) சுவிசேஷம்-
(மத், 11:5; லூக், 4:18, 20:1; அப், 8: 25, 14:7, 21)

8) சமாதானத்தின் சுவிசேஷம்
(ரோமர் 10:15;).

9) கிறிஸ்துவின் சுவிசேஷம்
(ரோம, 1:1; 2 கொரி,11:7; 1தெச, 2:9; 2 கொரி, 2:12;).

10) நித்திய சுவிசேஷம்
(வெளி, 14:6;).

11) தேவனின் சுவிசேஷம்
( ரோம, 1:1; 2 கொரி, 11:7; 1தெச, 2:9)

12) வசனம் (வார்த்தை)
(மாற், 2:2; அப், 8:4, 25, 14:25, 15:36;)

13)விசுவாசத்தின் செய்தி
- ரோமர் 8:17

14)தேவனின் வார்த்தை 
(அப், 13:5, 17:13;)

15) தேவ வசனம்
(அப், 15:35 ;)

16) இயேசு கிறிஸ்து
(அப், 3:18-20, 5:42, 8:5, 35, 9:20, 10:42-43, 17:3;)

17)சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்து
 (1 கொரி, 3:18-20;)

18) சிலுவையைப் பற்றிய உபதேசம் (1 கொரி, 1:18, 21;)

19) கர்த்தரின் அநுக்கிரக வருஷம்
 (லூக், 4:18; ஏசா, 61:1,2)

20)கிறிஸ்துவின் அளவற்ற
ஐசுவரியத்தை பற்றிய சுவிசேஷம்  (எபே, 3:8;)

21) விடுதலை 
(லூக், 4:18; ஏசா, 61:1;).

22) ஒப்புரவு 
 (அப், 14:15; 2 கொரி, 5:14-21)

23)உயிருடன் எழுப்பப்பட்ட கிறிஸ்து - 
(1 கொரி, 15:20;)

24)நீதி  
(சங், 40:9; 2பேதுரு 2:5)

25)பாவ மன்னிப்பு
(10:38;)

26)மரித்தோரின் உயிர்த்தெழுதல்.
(அப், 4 : 2)

27. சமாதானம் 
(அப், 10:36;)

28) தேவனுக்கு புறம்பானதெல்லாம் மாயை (பிர,12:8-14;)

29) தேவ பக்திக்குரிய ரகசியங்கள் (உபதேசங்கள்) 
( 1 திமோ, 3:16;).

30) விசுவாசத்தினால் வரும்
ஏற்புடைமை (நீதி)
( கலா, 3:8;)

இவைகளை தெளிவாக போதிப்பதே புதிய உடன்படிக்கையின் சபை. 
தற்போது இவைகளுக்கு எதிர்மறையாக சபை நடந்து கொண்டிருக்கிறது. 
ஆனாலும் தன் தவறை ஒத்துக் கொள்ளாத திருச்சபைகள் எழுப்புதல் எழுப்புதல் எழுப்புதல் வரும் மக்களை உணர்ச்சி வசப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். 
எழுப்புதல் என்பது தனிப்பட்ட மனிதனுக்குள்ளே வருகிற ஆவிக்குரிய எழுச்சி தான். அது அன்றாடம் அவனுடைய தனிப்பட்ட ஜீவித்திலும் தேவனுடைய தொடர்பிலும் உள்ளது. 
சீஷர்களை உருவாக்குங்கள்.
சுவிசேஷங்களை அறிவிப்பதற்கு ஜனங்களை தயார் ஆக்குங்கள். 
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். ஆமென். 

கிறிஸ்துவின் பணியில் 
சகோதரன் 
சிலுவை ராஜா 
தொடர்புக்கு 
*9841711591.*

 


Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை