நான் பட்ட பிரயாசம் வீணாய் போயிற்றோ ! ?
நான் பட்ட பிரயாசம் வீணாய் போயிற்றோ ! ?
கலாத்தியர் சபையில் அப்போஸ்தலன் பவுலுக்கு எழுந்த கேள்விகள்.
*நான் உங்களுக்காகப் பிரயாசப்பட்டது வீணாய்ப்போயிற்றோ என்று உங்களைக்குறித்துப் பயந்திருக்கிறேன்.*
(கலாத்தியர் 4:11)
..... நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள்.
அவர்களுக்குள்ளே *நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்.*
(எபேசியர் 2:2-3)
*தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே,*
*அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்;* *கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்.
கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;*
(எபேசியர் 2:4-5,8)
*உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே (இரட்சித்தவரை) அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்குத் திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன்;*
(கலா 1:6)
இப்பொழுதோ நீங்கள் தேவனை அறிந்திருக்க அல்லது தேவனாலே அறியப்பட்டிருக்க, *பெலனற்றதும் வெறுமையானதுமான அவ்வழிபாடுகளுக்கு நீங்கள் மறுபடியும் திரும்பி, மறுபடியும் அவைகளுக்கு அடிமைப்படும்படி விரும்புகிறதெப்படி?*
(கலாத்தியர் 4:9)
*அப்படி என்ன வழிபாடு செய்தார்கள் ?*
1)நாட்களையும்,
தேவன் படைத்த எல்லா நாட்களையும் நல்லதென்று கண்டு ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தப்படுத்தினார்.
(ஆதி 2:3)
தேவனை அறியாதவர்கள் தங்கள் வீட்டில் நடக்கும் எல்லா சுப நிகழ்ச்சிகளும் நாள், நட்சத்திரம், சுப முகூர்த்தம் பார்த்து செய்வது அவர்களுடைய வழக்கமாகும்.
ஆகையால், தேவன் புறஜாதிகளுடைய முறைமைகளை கற்றுக் கொள்ளாதீர்கள் என்று ஏரோமியா தீர்க்கதரிசி மூலமாக சொன்னார்.
(ஏரோ 10:2)
ஆனால், அநேகர் இயேசு கிறிஸ்துவை அறிந்திருக்கிறோம் என்று அறிக்கை பண்ணுகிறார்கள் ஆனால் தங்கள் செயல்பாடுகளினால் கிறிஸ்துவை மறுதலிக்கிறார்கள். (தீத் 1:6)
2) மாதங்களையும்,
திருமண நாட்களுக்கு மாதங்களை பார்க்கிறார்கள். ஆடி மாதத்தில் திருமணம் செய்யக்கூடாது என்று சொன்ன ஆரியர்கள் அல்லது பிராமணர்கள் ஆடி மாதத்தில் திருமணம் செய்கிறார்கள். ஆடி மாதத்தில் எந்த சுபமுகூர்த்த நாளும் கிடையாது. வானசாஸ்திரத்தின் படி 12 மாதங்களும் சூரியனின் சுற்றுப்பாதையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.
இதில் தமிழ் மாதங்களான சித்திரை, புரட்டாசி மிகவும் சிறப்பு வாய்ந்தவைகளாக கருதப்படுகின்றன. என வான சாஸ்திரம் கூறுகிறது.
நம்முடைய தேவனாகிய கர்த்தர் எல்லா நாளும் நல்லது என்று சொல்லி நாட்களை ஆசீர்வதித்தார்.
இரட்சிக்கப்பட்ட ஒரு ஊழியரோ அல்லது விசுவாசியோ ஆரியர்களின் சனாதானம் கொள்கைக்கு கீழ்படிவது சரிதானா என்பதை நிதானித்து பாருங்கள்.
3)காலங்களையும்,
'காலங்கள்' என்பது தமிழ் இலக்கணத்தில், ஒரு செயல் நடைபெறும் நேரத்தைக் குறிக்கும். இது ஒரு செயல் பேசப்படும் நேரத்துக்கு முன்னரா, அதே நேரத்திலா அல்லது பின்னரா என்பதைக் காட்டும் இலக்கணக் கூறாகும்.
குழந்தை பிறப்பு,பெயர் சூட்டு விழா, வீடு கிரக பிரவேசம், திருமண காரியமாக இருந்தாலும் நேரத்தை கணக்கிடுவார்கள். ஏனென்றால்
தமிழில் இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என மூன்று முக்கிய காலங்கள் உள்ளன.
இந்த காலத்தை குறித்து பரிசுத்த வேதாகமம் என்ன சொல்லுகிறது ?
அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்;
(பிரசங்கி 3:11) சரியான நேரத்தில் (சரியான டைமிங்) மிக நேர்த்தியாக செய்கிற தேவன்.
இதை முதலாவது திருச்சபை நடத்துகிற போதகர்கள் அறிந்திருக்க வேண்டும். விசுவாசிகள் நீங்கள் செய்வதை தான் பார்க்கிறார்கள். அவர்கள் உங்கள் மூலமாகத்தான் இயேசுவை பின்பற்றி வருகிறார்கள்.
4)வருஷங்களையும் பார்க்கிறீர்களே.
(கலாத்தியர் 4:10)
இப்படி பிரயோஜனம் இல்லாத நாட்களையும் நேரங்களையும் மாதங்களையும் வருடங்களையும் பார்க்கிற கிறிஸ்தவர்களை பார்க்கும் பொழுது உண்மையாகவே இவர்கள் தேவனுடைய பிள்ளைகளா அல்லது உலகத்துக்கு உரியவர்களா?
என்று நினைக்கத் தோன்றுகிறது.
அதிகாலையில் ஜெபம் செய்து வேதத்தை வாசித்து இரவில் குடும்ப ஜெபம் செய்து வேதத்தை வாசித்து ஒவ்வொரு சனிக்கிழமை தேவனுடைய பாதத்தில் உபாவாசித்து, காத்திருந்து ஞாயிறு தோறும் தேவனுடைய வார்த்தையை பெற்று கிறிஸ்துவுக்குள் வாழாத வாழ்க்கை ஒரு வாழ்வா ?
நீ உண்மை கிறிஸ்தவன் அல்ல நீ உன் சுயநலத்துக்காக மதம் மாறியவன். மனந்திரும்பு
கர்த்தர் உன்னை மன்னிக்க ஆயத்தமாக இருக்கிறார்.
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன் சிலுவை ராஜா.
Comments