1) இரட்சிப்பு

இரட்சிப்புக்கான வார்த்தைகள்.(ரோம 1:16).

தேவன், இயேசு கிறிஸ்துவினால் நித்திய ஜீவனை நமக்கு இலவசமாகத் தருகிறார். ஆனால் அது நமக்கு கிடைக்கும்படி சரியான முறையை அறிந்து கொள்வது சில வேலைகளில் நமக்கு கடினமாக உள்ளது. ஆகவே தேவன், பரிசுத்த வேதாகமத்தில் இரட்சிப்புப்  பற்றி, ஒவ்வொன்றும் தன் சொந்த தனிப்பட்ட முறையில் வற்புறுத்தும் வகையிலான பலதரப்பட்ட காட்சிகளைச் சித்தரிக்கிறார். இந்தக் கட்டுரை, அந்த காட்சிகளில் மூன்றான, இரட்சிப்பு, மீட்பு, நீதிமானாகுதல் ஆகியவற்றைப் பற்றி ஆராய்கிறது. 

இரட்சிப்பு: இரட்சிப்பு என்றால் 
(கிரேக்க மொழியில் சொட்டேரியா) "விடுவித்தல்", "பத்திரமாகக் கொண்டு வருதல்","தீமையினின்று பாதுகாத்தல்", என்று அர்த்தமாகும். ஏற்கனவே பழைய ஏற்பாட்டில் தேவன் தம்மை, மக்களை இரட்சிக்கிற ஒருவராக வெளிப்படுத்தியுள்ளார்.
(சங் 27:1; 88:1; உபா 26:8;சங் 62:1; எசா 25:6; 53:5; பின்குறிப்புகள்). புதிய ஏற்பாட்டில் "வழி" அல்லது பரலோகத்தில் தேவனோடுள்ள நித்திய ஐக்கியத்திற்கு வழி நடத்தும் வாழ்க்கை பாதை என்று விவரிக்கப்பட்டிருக்கிறது.
(மத் 7:14; மாற் 12:14; யோவா 14:16; அப் 16:17; 2பேது 2:2,21; அப் 9:2; 22:4; எபி 10:20)
இந்த இரட்சிப்பின் பாதையில் முடிவு பரியந்தம் நடக்க வேண்டும். நாம் இரட்சிப்பை மூன்று நிலையுள்ள, இரண்டு பக்கங்கள் கொண்ட ஒரே வழியாக விவரிக்க முடியும்.

1) இரட்சிப்பின் ஒரே வழி:-
பிதாவை அடைய ஒரே வழி கிறிஸ்து (யோவா 14:6;அப் 4:12)
இரட்சிப்பு நமக்குத் தேவனுடைய கிருபையினால் அருளப்பட்டிருக்கிறது. அதை அவர் கிறிஸ்து இயேசுவின் மூலம் (ரோம 3:24) 
அவர் மரணம் (ரோம 3:25;5:8)
உயிர்த்தெழுதல் (ரோம 5:10)
தொடர்ந்து விசுவாசிகளுக்காக வேண்டுதல் ஆகியவற்றின் அடிப்படையில் (எபி 7:25) தருகிறார். 

2) இரட்சிப்பின் இரண்டு பக்கங்கள்:-
இரட்சிப்பு, கிருபையின் மூலம், கிறிஸ்துவில் உள்ள விசுவாசத்தைக் கொண்டு பெற்றுக் கொள்ளப்படுகிறது.
(ரோம 3:22,24_25,28;)
அதாவது, அது தேவ கிருபையின் விளைவாகும் 
(யோவா 1:16) அதற்கு மனிதரளிக்கும் பதிலான விசுவாசத்தினாலும் வருகிறது. 
(அப் 16:31;ரோம 1:17; எபே 1:15; 2:8).

3) இரட்சிப்பின் மூன்று நிலைகள்:-
அ) இரட்சிப்பின் கடந்த கால நிலையில் விசுவாசிகள் தாம் பெறும் பாவ மன்னிப்பின் சொந்த அனுபவம் உள்ளடங்குகிறது. (அப் 10:43;
ரோம 4:6-8) அதோடு, ஆவிக்குரிய மரணத்திலிருந்து ஆவிக்குரிய ஜீவனுக்குள்ளும் 
(அப் 26:18) கடந்து வருகிறோம். அது நமக்கு தேவனோடு ஒரு புதிய தனிப்பட்ட ஐக்கியத்தை கொண்டு வருகிறதோடு 
(யோவா 1:12), நம்மைப் பாவத்தின் தண்டனிலிருந்து விடுவிக்கிறது. 
(ரோம 1:16; 6:23; 1கொரி 1:18)

ஆ) இரட்சிப்பின் நிகழ்கால நிலை, நம்மை பரிசுத்த ஆவியினால் நிறைத்து பாவத்தின் பழக்கத்திலிருந்தும், ஆதிகத்திலிருந்தும் இரட்சிக்கிறது. அதில் அடங்கியவை பின்வருமாறு:-i)
தேவனை நாம் பிதாவாகவும், இயேசுவை நம் ஆண்டவரும், இரட்சகருமாக ஆளுக்கு ஆள் தொடர்பு கொள்ளும் சிலாக்கியம் (மத் 6:9;யோவா 14:18-23; கலா 4:6)

ii) நாம் பாவத்துக்கு மரித்தவர்களாக நாம் எண்ணும்படிக்கும் 
(ரோம 6:1-14)
பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலுக்கும் 
(ரோம 8:1-17)
தேவனுடைய வார்த்தைக்கும் நம்மை ஒப்புக்கொடுக்கவும் 
(யோவா 8:31; 14:21; 2தீமோ3:15-16) நாம் பெறும் அழைப்பு.

iii) பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட அழைப்பும், நிரப்பப்பட்ட நிலையைக் காத்துக் கொள்ளக் கட்டளையும் (அப் 2:33-39;எபே 5:18).

iv) பாவத்திலிருந்தும் 
(ரோமர் 6:1-14) தற்போதுள்ள கெட்ட தலைமுறையினரிடமிருந்தும் 
(அப் 2:40; 2கொரி 6:17) நாம் பிரிந்துபோக உரிமைக் குரல் எழுப்புவது.

v) தேவனுடைய இராஜ்யத்திற்காக, சாத்தானுக்கும், அவனுடைய பிசாசின் சேனைகளுக்கும் விரோதமாக தொடர்ந்து யுத்தம் செய்ய அழைப்பு. 
(2கொரி 10:4-5; எபே 6:11,16 1பேது 5:8).

3) இரட்சிப்பின் வருங்கால நிலையில் (ரோம 13:11-12; 1தெச 5:8-9;1பேது 1:5) பின்வருபவை அடங்கியுள்ளன:-
அ) தேவனுடைய வரும் கோபத்திலிருந்து நமக்கு விடுதலை. 
(ரோம 5:9; 1 கொரி 3:15; 5:5;
1தெச 1:10; 5:9)

ஆ) தெய்வீக மகிமையில் பங்கெடுப்பதும், 
(ரோம 8:29; 1கொரி 15:49)
உயிர்த்தெழுந்த அல்லது மறுரூபமான ஒரு சரீரத்தை பெறுவதும். 
(1கொரி 15:52)

இ) நாம் விசுவாசத்தினால் ஜெயம் கொண்டவர்கள் என்பதற்காகப் பரிசுகளைப் பெறுதல்.(வெளி 2:7)
இந்த வருங்கால இரட்சிப்பு தான் எல்லா கிறிஸ்தவர்களும் பிரயாசப்படும் இலக்காகும்.
(1கொரி 9:24-27; பிலி 3:8-14)
தற்போதுள்ள எச்சரிக்கைகள்,
ஒழுங்குமுறை தண்டனையாவும் விசுவாசிகள் வருங்கால இரட்சிப்பை இழந்து விடக்கூடாது என்ற நோக்கத்தைக் உடையவர்களாக உள்ளன.
(1கொரி 5:1-13; 9:24-27;
பிலி 2:12,16; 2பேது 1:5-11;எபி 12:1 பின் குறிப்புகளை பார்க்கவும்.)

இரட்சிப்பின் வழி,
இரட்சிப்பின் இரண்டு பக்கங்கள்,
இரட்சிப்பின் மூன்று நிலைகள். இவர்கள் எப்படி நம்முடைய வாழ்க்கையில் பிரவேசிக்கிறது யார் மூலமாக பிரவேசிக்கிறது என்பதெல்லாம் பார்த்தோம். 
தொடர்ந்து வேதத்தின் துணை கொண்டு பரிசுத்த ஆவியின் நிறைவோடு கற்றுக்கொண்டு மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுங்கள்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். ஆமென். 

கிறிஸ்துவின் பணியில் 
சகோதரன் 
சிலுவை ராஜா 
தொடர்புக்கு 
98 41 711 591.

Comments

Anonymous said…
Amen

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை